இறைவன் தனது அடியார்களிடத்தில் தனக்கு மாறுசெய்வதை ஏற்றுக்கொள்ளாதது ஏன்?
இப்பிரபஞ்சம் முழுதும் இவைனுக்குச் சொந்தமாக இருப்பதால் ஒரு மனிதன் இறைவனுக்கு மாறுசெய்ய நாடினால், அவன் இவ்வுலகில் ஏற்பாடு செய்த வாழ்வாதாரத்தை அனுபவிக்காது இந்தப் பூமியிலிருந்து வெளியேறி அல்லாஹ் பார்க்காத ஒரு பாதுகாப்பான இடம் நோக்கி சென்று விடவேண்டும்!. அவரிடம் மரணத்திற்கு பொறுப்பான மலக்கு உயிரை கைப்பற்ற வந்தால் அவரிடம் 'நான் தூய்மையான முறையில் மனந்திருந்தி பாவமீட்சி செய்துகொள்ளவும், இறைவனுக்காக நல்ல செயல்களை செய்யும் வரையிலும் எனக்கு அவகாசம் கொடுங்கள்' என்று சொல்லட்டும். மறுமை நாளில் அவனை நரகிற்கு அழைத்துச் செல்ல தணடனைக்குப் பொறுப்பான மலக்குகள் அவரிடம் வந்தால், அவர் அவர்களுடன் செல்லாது அடம்பிடித்து, அவர்களை எதிர்த்து நின்று, அவராகவே சுவர்கத்திற்கு செல்லட்டும். இதனை செய்ய ஒருவாரால் முடியுமா? (இப்ராஹிம் இப்னு அத்ஹமின் சம்பவம்). تقدم
ஒரு நபர் தனது வீட்டில் செல்லப்பிராணியொன்றை வைத்திருந்தால், அது தனக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்றே மிகவும் எதிர்பார்ப்பார். ஆனால் அவர் அதை பணம் கொடுத்து வாங்கியது மட்டுமே தவிர அதனை அவர் படைக்கவில்லை. ஒரு சாதாரண மனிதன் இவ்வாறு எதிர்ப்பார்க்கையில் எம்மைப் படைத்து பரிபாலிக்கும் இறைவனை நாம் வணங்கி வழிபடவும், முழுமையாக கட்டுப்பட்டு நடக்கவும் தகுதியானவனல்லவா? நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்த உலகப் பயணத்தின் பல அம்சங்களில் இயல்பாகவே அடிபணிந்து இருக்கிறோம். நம் இதயங்கள் துடிக்கின்றன. நமது செரிமான அமைப்பு செயல்படுகிறது. நம் புலன்கள் முழுமையாக உணர்ந்து கொள்கின்றன. நமக்கு எஞ்சியிருப்பதெல்லாம், எமது இலக்கை பாதுகாப்பான முறையில் அடைந்துகொள்ள எம்மால் தெரிவு செய்யப்பட்ட எஞ்சிய விடயங்களில் இறைவனுக்கு முழுமையாக கட்டுபட்டு நடப்பதை தவிர வேறு வழி கிடையாது.
அகிலங்களின் இரட்சகனை விசுவாசம் கொள்ளுதல் மற்றும் அவனுக்கு கட்டுப்படுதல் ஆகிய இரண்டு விடயங்களையும் நாம் வேறுபடுத்திப் பார்ப்பது அவசியம்.
அகிலத்தின் இரட்சகனுக்கு செய்யவேண்டிய, எவரும் கைவிட முடியாத கட்டாயக்கடமை யாதெனில் அவனை ஒருவன் என்று ஏற்றுக் கட்டுபடுவதும், அவனுக்கு எவரையும் இணையாக்காது அவன் ஒருவனை மாத்திரம் வணங்கி வழிபடுவதும், அவன் ஒருவனே படைப்பாளன் என்றும் ஆட்சியும் அதிகாரமும் அவனுக்கே உரியன என நாம் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் ஏற்றுக்கொள்வதாகும். இதுவே ஈமானின் -விசுவாசத்தின்- அடிப்படையாகும். (ஈமான்) இறைவிசுவாசம் என்பது சொல்லும் செயலுமாகும். இதை தவிர வேறு தெரிவொன்று கிடையாது. இதன் அடிப்படையிலேயே ஒரு மனிதன் விசாரிக்கப்படவும், தண்டனை வழங்கப்படவும் முடியும்.
கட்டுப்படுதலுக்கு எதிர் குற்றம்புரிவதாகும்.
அல்லாஹ் கூறுகிறான் :
"(நமக்கு) முற்றிலும் வழிபடும் முஸ்லிம்களை' இறைக்கட்டுப் பாட்டுப்பாட்டை மீறி செயற்பட்ட குற்றவாளிகள் போன்று ஆக்குவோமா?". (அல்கலம் : 35). - تقدم
அநியாயம் என்பது அகிலங்களின் இரட்சகனுக்கு நிகாராக அல்லது இணையாக ஒருவரை ஏற்படுத்துவதாகும்.
அல்லாஹ் கூறுகிறான் :
''நீங்கள் அறிந்து கொண்டே அல்லாஹ்வுக்கு இணையாளர்களை ஏற்படுத்தாதீர்கள்''. (அல் பகரா : 22). تقدم
"எவர்கள் நம்பிக்கை கொண்டு, தங்கள் நம்பிக்கையுடன் (இணைவைத்தல் என்னும்) அநியாயத்தையும் கலந்து விடவில்லையோ அவர்களுக்கே நிச்சயமாக பாதுகாப்பு உண்டு. அவர்கள்தான் நேர்வழியாளர்கள் (என்று கூறினார்)". (அல் அன்ஆம் : 82). تقدم
ஈமான் என்பது ஒரு மறைவான விடயமாகும். அது அல்லாஹ்வையும் அவனின் மலக்குகளையும் (அமரர்களையும்) அவனால் இறக்கப்பட்ட வேதங்களையும், அவனின் தூதர்களையும் மறுமை நாளையும் விசுவாசித்து, அவனின் விதியை மனப்பூர்வமாக ஏற்பதைக் குறிக்கிறது.
அல்லாஹ் கூறுகிறான் :
"'நாங்களும் ஈமான் கொண்டோம்' என்று (நபியே! உம்மிடம்) நாட்டுப் புறத்து அரபிகள் கூறுகிறார்கள், 'நீங்கள் ஈமான் கொள்ளவில்லை. எனினும் 'நாங்கள் கட்டுப்பட்டோம்;' (இஸ்லாத்தைத் தழுவினோம்) என்று (வேண்டுமானால்) கூறுங்கள்' (என நபியே! அவர்களிடம்) கூறுவீராக. 'ஏனெனில் உங்களுடைய இதயங்களில் (உண்மையான) ஈமான் நுழையவில்லை; மேலும், நீங்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கட்டுப்பட்டு நடப்பீர்களாயின் அவன் உங்களுடைய நற்செயல்களில், எதையும் உங்களுக்குக் குறைக்க மாட்டான். நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன் மிக்க கிருபையுடையவன்". (அல்-ஹுஜுராத் :14). تقدم
மேற்படி வசனமானது ஈமான் (நம்பிக்கை) என்பது மிக உயர்ந்த படி நிலையாகும் என்று எமக்குச் சுட்டிக்காட்டுகிறது. அதுதான் திருப்தி, விருப்பம் மற்றும் மனநிறைவாகும். மேலும் நம்பிக்கை (ஈமான்) பல படித்தரங்களையும் படிநிலைகளையும் கொண்டிருப்பதால் அதில் அதிகரிப்பும், குறைவும் ஏற்படும். அதாவது ஈமான் வழிப்படுவதால் அதிகரிக்கிறது. பாவகாரியங்களினால் குறைவடைகிறது. மறைவான விடயங்களை புரிந்துகொள்வதில் -கிரகித்துக் கொள்வதில்- மனிதனின் ஆற்றல் மற்றும் அவனின் இதயத்தின் கொள்ளலவுக்கு ஏற்ப மனிதனுக்கு மனிதன் வேறுபடுகின்றான். மேலும் மனிதர்கள் இறைவனின் மகத்துவம் மற்றும் அழகை காட்டும் பண்புகளை புரிந்து கொள்வதிலும் தங்கள் இறைவனை அறிவதிலும் வித்தியாசப்படுகின்றனர்.
மனிதன் அவனின் அறிவு ஆற்றலின் அடிப்படையில் மறைவான விடயங்களை குறைவாக புரிந்து கொண்டமைக்காகவோ அல்லது அவனின் குறுகிய சிந்தனையின் நிமித்தமோ தண்டிக்கப்படமாட்டான். இருப்பினும், நரகத்தின் நிரந்தர தண்டனையிலிருந்து தப்பிப்பதற்குத் தேவையான குறைந்தபட்ச புரிதல் இருந்து, அதன் படி அவன் செயற்படாது இருந்தால் குற்றம் பிடிப்பான். எனவே, ஏகத்துவத்துவத்தை ஏற்பதன் மூலம் அல்லாஹ்வுக்கு கட்டுப்படுவதும் படைத்தல், ஆணையிடுதல்,வணக்கம் செலுத்துதல் போன்றவை அவனுக்கு மாத்திரம் என்று ஏற்று நடப்பதும் அவசியமாகும். இவற்றை ஏற்று அடிபணிவதன் மூலம் தான் நாடியோருக்கு இணைவைப்பதைத் தவிரவுள்ள மற்ற பாவங்களை மன்னிக்கிறான். ஆகவே இறைவனை நம்பிக்கை கொண்டு வெற்றி பெறுதல் அல்லது நிராகரித்து தோல்வியடைதல் எனும் ஏதாவது ஒரு தெரிவைத் தவிர மனிதனுக்கு முன்னால் வேறு தெரிவொன்று கிடையாது.
அல்லாஹ் கூறுகிறான் :
"நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான். இதைத் தவிர (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான். எவர்கள் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகப்பெரும் பாவத்தையே கற்பனை செய்கிறார்கள்". (அந்நிஸா : 48).
ஆகவே ஈமான் மறைவான விடயங்களுடன் தொடர்பான ஒரு விவகாரமாகும். மறைவானவை வெளிப்படும் போது (திரை விலகி) அல்லது மறுமையின் அடையாளங்கள் தோன்றும் போது இதன் விடயம் முடிந்து போகும். تقدم
அல்லாஹ் கூறுகிறான் :
''உமது இரட்சகனின் அத்தாட்சிகளில் சில வரும் நாளில் அதற்கு முன்னர் நம்பிக்கை கொள்ளாது அல்லது தனது நம்பிக்கையில் நல்லதைத் தேடிக்கொள்ளாதிருந்த எந்த ஆத்மாவுக்கும் அதன் நம்பிக்கை பயனளிக்காது''. (அல் அன்ஆம் : 158). تقدم
மனிதன் தனது இறை நம்பிக்கையினால் நற்காரியங்களின் மூலம் பயனடையவும், நன்மைகளை அதிகரித்துக்கொள்ளவும் விரும்பினால் திரை விலகி மறுமை நாள் ஏற்படுவதற்கு முன் அவன் அவற்றை செய்து கொள்வது அவசியமாகும்.
நற்காரியங்கள் எதுவும் இல்லாத மனிதனைப் பொறுத்தவரை அவன் நிரந்தரமாக நரகில் இருப்பதை விட்டு தன்னை காப்பாற்றிக் கொள்ள விரும்பினால் ஏகத்துவத்தை ஏற்று அவனை மாத்திரம் வணங்கி வழிப்பட்ட நிலையிலேயே இவ்வுலகிலிருந்து செல்ல வேண்டும். தற்காலிமாக நரகில் தங்குதலானது சில பாவிகளுக்கு நிகழமுடியும். இது அல்லாஹ்வின் நாட்டத்தில் உள்ள விவகாரமாகும். அவன் நாடினால் அவனை மன்னித்து விடுவான். நாடினால் நரகினுள் நுழைவிப்பான்.
அல்லாஹ் கூறுகிறான் :
''ஈமான் கொண்ட விசுவாசிகளே நீங்கள் அல்லாஹ்வை பயப்படவேண்டிய முறையில் பயந்து கொள்ளுங்கள். மேலும் நீங்கள் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்ட முஸ்லிம்களாகவேயன்றி மரணிக்க வேண்டாம்''. (ஆல இம்ரான் : 102). تقدم
இஸ்லாமிய மார்க்கத்தில் நம்பிக்கை என்பது சொல்லும் செயலுமாகும். அது இன்றைய கிறிஸ்தவப் போதனைகளில் உள்ளது போல் நம்பிக்கை மாத்திரமோ, அல்லது நாத்திகத்தில் உள்ளது போல் வெறுமனே செயல் மாத்திரமோ கிடையாது. மறைவானவற்றை (ஈமான்) நம்பிக்கை கொண்டு அக்கட்டத்தில் பொறுமையாக இருந்தவரின் செயலும், மறுமையில் மறைவானவை வெளிப்படுவதை நேரடியாக கண்டு அனுபவித்த ஒருவரின் செயலும் சமமாக மாட்டாது. அதே போன்று இஸ்லாத்தின் விதி குறித்து அறியாது கடினமும், பலவீமும் மற்றும் நிச்சயமற்ற தன்மையும் இருந்த காலங்களில் அல்லாஹ்வுக்காக செயற்பட்டவர்களும், இஸ்லாம் எழுச்சி பெற்று பலத்துடன் வீரியத்துடனும் இருந்த காலத்தில் அல்லாஹ்வுக்காக செயற்பட்டவர்களும் சமமாகமாட்டார்கள்.
அல்லாஹ் கூறுகிறான் :
''மக்கா வெற்றிக்கு முன்னர் செலவிட்டோருக்கும் போரிட்டோருக்கும் உங்களில் எவரும் சமமாகமாட்டார்கள். அவர்கள் அதற்குப்பின் செலவிட்டோரையும் போரிட்டோரையும் விட மகத்தான அந்தஸ்துக்குரியோராவர். அல்லாஹ் அனைவருக்கும் நன்மைகளையே வாக்களித்திருக்கின்றான் நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன்". (அல் ஹதீத் :10). تقدم
அகிலத்தின் இரட்சகன் ஒரு போதும் எவரையும் காரணமின்றி தண்டிக்கமாட்டான். ஒரு மனிதன் சக மனிதர்களின் உரிமைகளை வீணாக்கியமை அல்லது அகிலங்களின் இரட்சகனின் உரிமையை வீணாக்கியமைக்காக விசாரிக்கப்பட்டு வெகுமதியோ அல்லது தண்டனையோ வழங்கப்படுவான்.
'உண்மையாக வணங்கப்படுவதற்கு தகுதியானவன் அல்லாஹ் ஒருவனைத்தவிர வேறு யாருமில்லை என்றும் அவனுக்கு நிகராக எவறும் இல்லையென்றும், முஹம்மத் அவனின் அடியாரும் தூதருமாவார் என்றும் சாட்சி கூறுகிறேன், மேலும் அல்லாஹ்வின் தூதர்கள் உண்மை என்றும், சுவர்க்கமும் நரகமும் உண்மையானவை என்றும் சாட்சி கூறுகிறேன்' என்ற வாசகத்தை ஏற்று, இந்த வாசகத்தின் உட்பொருளை முழுமையாக அறிந்து நடைமுறைப்படுத்துவதன் மூலம் இறைவன் ஒருவன் என்பதை ஏற்று அவனுக்கு அடிபணிந்து அவனுக்கு நிகராக எவரும் இல்லை என்பதை ஏற்று அவனை மாத்திரம் வணங்கி வழிபடுவதே நிரந்தர நரகத்திலிருந்து மீட்சி பெறுவதற்கான ஒரே வழியாகும்.
அல்லாஹ்வின் பாதையை விட்டு பிறரைத் தடுக்காதிருத்தல் அல்லது மார்க்கத்தைப் பிரச்சாரம் செய்தல் மற்றும் அதனைப்பரப்புதல் ஆகியவற்றுக்கு எதிராக உதவாதிருத்தல் .
மக்களின் உரிமைகளை பறித்து அவர்களுக்கு அநீதி இழைக்காது இருத்தல்.
உயிரினங்கள் மற்றும் சிருஷ்டிகளுக்கு தீங்குசெய்வதை தடுத்து நிறுத்துதல். இவ்வாறு நடந்து கொள்ளும் போது அச்சமூகத்தைவிட்டும் தனிமைப்படும் நிலை ஏற்பட்டாலும் கூட.
ஒரு மனிதனுக்கு சில வேளை அதிக நற்செயல்கள் இல்லாமல் இருக்கலாம், ஆனால் அவன் எவருக்கும் தீங்கு விளைவிக்கவு மில்லை, அல்லது தனக்கோ மற்றவர்களுக்கோ தீங்கு விளைவிக்கும் எந்த செயல்களிலும் ஈடுபடாது இருந்து அல்லாஹ் ஒருவன் என ஏற்று சாட்சி கூறியிருந்தால் நரக நெருப்பின் தண்டனையிலிருந்து ஒரு வேளை காப்பாற்றப்படலாம்.
அல்லாஹ் கூறுகிறான் :
"நீங்கள் (இவ்வாறு) அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டும், அவனுக்கு நன்றி செலுத்திக் கொண்டுமிருந்தால் உங்களுக்கு வேதனை செய்து அவன் என்ன (லாபம்) அடையப்போகிறான்? அல்லாஹ்வோ (நீங்கள் செய்யும் ஒரு சொற்ப) நன்றிக்கும் கூலி கொடுப்பவனாக, யாவற்றையும் நன்கறிந்தவனாக இருக்கிறான்".(அந்நிஸா : 147). تقدم
மனிதர்கள் உலக வாழ்க்கையில் அவர்கள் செய்யும் செயல்களின் அடிப்படையில் பலதரப்பட்ட தரங்களையும் அந்தஸ்துக்களையும் உடையோராக வகைப் படுத்தப்படுவர். இவ்வாறு தரப்படுத்தப் பட்டோரில் பலர் ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ளபடி மறுமையில் அல்லாஹ்வால் சோதிக்கப்படுவோரும் உண்டு.
அல்லாஹ் சமூகங்கள் அனைத்தையும் அவர்களின் தீய செயல்களுக்கு ஏற்ப இவ்வுலகில் முற்படுத்தியோ அல்லது மறுமையில் பிற்படுத்தியோ தண்டிப்பான். இது தவ்பா (பாவமீட்சி) கோராத, குறித்த செயலின் தீவிரத்தைப் பொறுத்தும், மேலும் இந்த மோசமான செயற்பாடு விளைச்சல், சந்ததி, ஏனைய படைப்புகள் மீது எந்த அளவிற்கு தாக்கத்தையும்,பாதிப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது என்பதையும் பொறுத்து அமையும். அல்லாஹ் ஒரு போதும் இந்தப் பூமியில் அக்கிரமம் நிகழ்வதை விரும்பமாட்டான்.
முன்னைய நபிமார்களான நூஹ், ஹூத், ஸாலிஹ், லூத் ஆகியோரின் சமூகங்கள் மற்றும் பிர்அவ்னின் கூட்டத்தினர் போன்ற இறைத்தூதர்களை பொய்பித்தோரை அவர்களின் மோசமான செயற்பாடு மற்றும் அத்துமீறல் காரணமாக அவர்களுக்கான தண்டனையை இவ்வுலகில் உடனுக்குடன் வழங்கினான். இவர்கள் இந்த ஈனச்செயல்களை விட்டும் தங்களை விலக்கிக் கொள்ளாமலும், இந்தத் தீங்கை தடுத்து நிறுத்தாமலும் அதிலே நிலைத்திருந்தார்கள். ஹூத் நபியின் சமூகம் இந்தப் பூமியில் பித்துப்பிடித்து இறுமாப்புடன் கர்வம் கொண்டு அலைந்தனர். ஸாலிஹ் நபியின் சமூகம் இறைவனால் அனுப்பப்பட்ட ஒட்டகத்தை கொன்றது. லூத் நபியின் சமூகம் ஓரினச்சேர்கை எனும் மாபாதகச்செயலில் பிடிவாதாமாய் இருந்தனார். ஷுஐப் நபியின் சமூகம் ஊழல் மற்றும் அளவை நிறுவைகளில் மோசடி செய்து மக்களின் உரிமைகளை பரிப்பதில் உறுதியாய் நின்றனர். பிர்அவனின் கூட்டம் நபி மூஸாவின் கூட்டத்திற்கு அநியாயமும் அக்கிரமும் இழைத்தனர். இவர்கள் அனைவருக்கும் முன் நபி நூஹின் சமூகத்தார் அல்லாஹ்வை வணங்குவதில் இணைவைத்து அதில் பிடிவாதமாய் இருந்தனர். இவ்வாறு முன்னைய சமூகங்கள் இறைவனுக்கும் இறையடியார்களுக்கும் மிகப்பெரும் துரோகத்தை இழைத்தன.
அல்லாஹ் கூறுகிறான் :
"எவர் நன்மைகள் செய்கிறாரோ, அது அவருக்கே நன்று. எவர் பாவம் செய்கிறாரோ, அது அவருக்கே கேடாகும். உமது இறைவன் (தன்) அடியார்களுக்குச் சிறிதும் அநியாயம் செய்பவன் அல்லன்". (புஸ்ஸிலத் : 46). تقدم
''நாம் ஒவ்வொருவரையும் அவரவர் செய்த பாவத்தின் காரணமாக தண்டித்தோம். அவர்களில் சிலர் மீது கடும்புயல் மூலமாக கல்மாரியை அனுப்பினோம். அவர்களில் சிலரை பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது. அவர்களில் சிலரைப் பூமியினுள் விழுங்கச் செய்தோம். இன்னும் அவர்களில் சிலரை மூழ்கடித்தோம். ஆனால் அல்லாஹ் அவர்களுக்கு அநியாயம் செய்யக்கூடியவனாக இருக்கவில்லை. அவர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டார்கள்". (அல்அன்கபூத் : 40). تقدم