தாய் தன் பிள்ளைகள் பயணம் செய்யும் போதோ அல்லது வேலைக்குச் செல்லும் போதோ போய் வருகையில் அவதானமாகவும் எச்சரிக்கையாகவும் நடந்கொள்ளுங்கள் என அவர்களை எச்சரிப்பதன் மூலம் அவர்களை மிகவும் சோர்வுக் குள்ளாக்குகிறாள் என நாம் வைத்துக்கொள்வோம். இவ்வாறான ஒரு தாய் இரக்கமற்ற இருகிய மனம் படைத்தவள் எனக் கருதப்படுவாளா? இங்கு பாசமானது கடுமையின் வெளிப்பாடாக மாறியுள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆகவே அல்லாஹ்வும் தனது அடியார்கள் மீதான கருணையினால் அவர்களுக்கு நல்லனவற்றை நினைவூட்டி, தீயனவற்றை எச்சரித்து, மீட்சிக்கான வழியை காண்பித்துக் கொடுக்கிறான். மேலும் அவர்கள் தமது பாவங்களிலிருந்து மீண்டு மனந்திருந்தி அவனிடம் முறையிடும் போது அவர்களின் பாவங்களை நன்மைகளாக மாற்றுவதாகவும் வாக்களிக்கிறான். இது அவனின் கருணையின் வெளிப்பாடல்லவா!
அல்லாஹ் கூறுகிறான் :
"யார் பாவமன்னிப்புக் கோரி நம்பிக்கைகொண்டு நல்லறமும் புரிகிறாறோ அவர்களுக்கு அவர்களின் தீமைகளை அல்லாஹ் நன்மைகளாக மாற்றுவான். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும், நிகரற்ற அன்புடையோனுமாக இருக்கிறான்". (அல் புர்கான்:70). تقدم
குறைந்த சில வணக்கங்களுக்கு நிகராக நிரந்தர சுவர்க்க இன்பங்களையும் உயர் வெகுமதிகளையும் பெற்றுக்கொள்கிறோம் இது குறித்து ஏன் எமது அவதானத்தை செலுத்துவதில்லை?
அல்லாஹ் கூறுகிறான் :
"எவர் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு, நற்செயல்களைச் செய்கிறாரோ, அவருடைய பாவத்திற்கு (அவற்றைப்) பரிகாரமாக்கி, தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சொர்க்கங்களிலும் அவரைப் புகுத்தி விடுகிறான். என்றென்றுமே அதில் அவர் தங்கிவிடுவார். இதுதான் மிக மகத்தான வெற்றியாகும்". (அத்தகாபுன் : 9). تقدم
அல்லாஹ் தனது அடியார்கள் அனைவருக்கும் மீட்சிக்கான வழியை காண்பித்துக் கொடுத்துள்ளான். எனவே அவன் இறைநிராகரிப்பை ஏற்றுக்கொள்வதில்லை. அத்துடன் இறை நிராகரிப்பு மற்றும் பூமியில் குழப்பம் விழைவித்தல் போன்ற மனிதன் செல்லும் பிழையான நடத்தையையும் அவன் விரும்ப மாட்டான்.
அல்லாஹ் கூறுகிறான் :
"அவனை நீங்கள் நிராகரித்துவிட்ட போதிலும் (அவனுக்கு நஷ்டமில்லை. ஏனென்றால்,) நிச்சயமாக அல்லாஹ் உங்களை விட்டும் தேவையற்றவனாக இருக்கிறான். எனினும், தன் அடியார்கள் (தன்னை) நிராகரிப்பதை அவன் விரும்புவதே இல்லை. நீங்கள் (அவனுக்கு) நன்றி செலுத்துவீர்களாயின், அதனால் உங்களைப் பற்றி அவன் திருப்தியடைவான். ஒருவனின் (பாவச்) சுமையை மற்றொருவன் சுமப்பதில்லை. இனி நீங்கள் செல்ல வேண்டியது உங்கள் இறைவனிடம்தான். அச்சமயம் நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை அவன் உங்களுக்கு அறிவிப்பான். உள்ளங்களில் உள்ளவற்றையும் நிச்சயமாக அவன் நன்கறிகிறான்". (அஸ்ஸுமர் : 7). تقدم
நீங்கள் களவெடுத்தாலும் விபச்சரம் செய்தாலும் கொலை செய்தாலும் இந்தப் பூமியில் குழப்பம் விளைவித்தாலும், நீங்கள் அனைவரும் என்னைப்பொருத்தவரை நல்ல அடியாரைப் போன்றோர், உங்கள் அனைவரையும் நினைத்து நான் பெருமைப் படுகிறேன் என்று பிள்ளைகளுக்கு முன்னால் திரும்பத் திரும்பச் சொல்லும் தந்தையைப் பற்றி நாம் என்ன சொல்வது? எளிமையாகச் சொன்னால், இந்த தந்தை ஷைத்தானைப் போன்றவர், பூமியில் குழப்பங்கள் மற்றும் தீமைகளை செய்வதற்கு குழந்தைகளைத் தூண்டிக்கொண்டிருக்கிறார் என்றே சொல்ல முடியும்.