Applicable Translations हिन्दी සිංහල English Español ગુજરાતી عربي

இஸ்லாம் குறித்த கேள்வி பதில்

பாதின் ஸப்ரி

முதலாம் பதிப்பு

ஹிஜ்ரி :1442- கி பி 2021

தொகுப்பாளர் உரை/நூலாசிரியர் உரை

இந்த புத்தகம் இஸ்லாம் மார்க்கம் பற்றிய பொதுவான கேள்விகளுக்கு பதிலளிப்பதன் மூலம், இம்மாபெரும் மார்க்கத்தை மக்களுக்கு அறிமுகப்படுத்துவதையும், காலவோட்டத்தில் பல்வேறுபட்ட நாகரிகங்கள் மற்றும் மக்களை உள்வாங்கி, சமகால நிகழ்வுகளுடனும், முன்னேற்றங்களுடன் ஒன்றித்துத் செல்வதில் அதன் தனித்துவம், வேறுபாடு மற்றும் நெகிழ்வுத்தன்மை ஆகிய விடயங்களைக் குறித்துக்காட்டுவதையும், இம்மாபெரும் மார்க்கத்தின் முகவரியை கொச்சைபடுத்தி சிதைக்கும் பல முயற்சிகள் இருக்கும் நிலையில் இம்மார்க்கத்தின் நீடித்து நிலைக்கும் திறனை எடுத்துக் காட்டுவதையும், இம்மார்க்கத்தை பயங்கரவாதம் என வர்ணித்து இதற்கெதிராக மக்களை தூண்டும் பயங்கரமான எதிர்மறை பிரச்சாரத்தை எதிர்கொண்டு வெற்றி வாகை சூடும் திறன் இம்மார்க்கத்திற்கு உண்டு என்பதைத் தெளிவு படுத்துவதையும் இந்நூல் இலக்காகக் கொள்கின்றது.

ஆகவே, இந்நூல் சத்தியத்தை தேடிக்கொண்டிருக்கும் ஆய்வாளர்களுக்கும், தெளிவான புத்திகூர்மையுடையோருக்கும், திறந்த மனம் கொண்டவர்களுக்கும் ஒளி விளக்காக அமைய வேண்டும் எனவும், இஸ்லாம் மார்க்கம் பற்றி அறிந்து கொள்ள ஆவல் கொள்ளும் அனைவருக்குமான சமாதான தூதுச் செய்தியாகவும் அமைய வேண்டும் எனவும் எல்லாம் வல்ல இறைவனை நான் பிரார்த்திக்கிறேன்.