Applicable Translations English Español ગુજરાતી हिन्दी සිංහල 中文 Русский عربي

படைப்பாளனை விசுவாசித்தல் :

ஒரு மனிதனுக்கு கடவுள் நம்பிக்கை அவசியமா? தேவையா?

ஒரு மனிதரைப் பொருத்தவரை ஏதோ ஒரு கடவுளை அவன் ஏற்றாக வேண்டும். அது உண்மைக் கடவுளாகவோ அல்லது (பொய்யான) கடவுளாகக்க கூட இருக்கலாம். அதனை கடவுள் என்றோ அல்லது வேறு ஏதாவது பெயர் கொண்டோ அழைக்கலாம், அதாவது அவர்கள் ஏற்றுக்கொண்ட அக்கடவுள் சிலவேளை ஒரு மரமாக, வானத்தில் உள்ள ஒரு நட்சத்திரமாக, ஒரு பெண்ணாக, தனக்கு தொழிலொன்றை அளித்த தலைவராக, அறிவியல் கோட்பாடாக, ஏன் தனது மனோ இச்சையாகக் கூட இருக்கலாம். ஆனால்; மனிதன் என்ற வகையில் ஏதோ ஒன்றை விசுவாசித்து அதனை ஏற்றுப்பின்பற்றி, புனிதப்படுத்தி வாழ்க்கைப் பயணத்தின் எல்லா நிலைகளிலும் அதனிடம் சரணடைந்து அதற்காகவே சில வேளை இன்னுயிரையும் மாய்த்துக் கொள்ளும் ஆழமான நம்பிக்கை நிலை இருக்க வேண்டும். இவ்வாறு ஒன்றை நம்பி தன்னை மாய்த்துக்கொள்ளும் நிலையையே நாம் வணக்கவழிபாடு என்ற பெயரால் அழைக்கிறோம். எனவே உண்மைக்கடவுளை -இறைவனை- வணங்கி வழிபடுதல் ஒரு மனிதன் மற்றவர்களுக்கு அல்லது சமூகத்திற்கு அடிமைப்படுவதிலிருந்து விடுதலையை பெற்றுத் தருகிறது.

ஆகவே, உண்மையான கடவுள் யார்?

உண்மையான கடவுள் படைப்பாளர் ஆவார். ஆக, உண்மையான கடவுள் அல்லாது பிறிதொன்றை வழிபடுவது அவர்களும் கடவுள்கள் என்று வாதிடுவதை பொதிந்திருக்கிறது. மேலும் கடவுள் ஒரு படைப்பாளராக இருக்க வேண்டும். கடவுள் படைப்பாளர் என்பதற்கான சான்று, அவர் பிரபஞ்சத்தில் படைத்திருப்பதை பார்ப்பதன் மூலம்; அல்லது தான் படைப்பாளர்-சிருஷ்டி கர்த்தா என நிரூபணமான கடவுளின் இறைச்செய்தி மூலம் இருக்கும். அவ்வாறு இவர்கள் கூறும் கடவுள் பற்றிய இக்கூற்றுக்கு கற்புலனாகும் இந்ந பிரபஞ்சத்தின் உருவாக்கத்தில் இருந்தோ அல்லது படைத்த கடவுளின் வார்த்தைகளில் இருந்தோ ஆதாரம் இல்லை என்றால் வணங்கப்படும் இந்தக் கடவுள்கள் யாவும் பொய்யானவையே என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

ஒரு மனிதன் தான் எதிர்நோக்கும் கஷ்டம் மற்றும் துன்பத்தின் போது ஒரு யதார்த்தத்தைக் நோக்கி நகர்வதை நாம் அவதானிக்கிறோம். அதுதான், அவன் பல கடவுள்களை ஏற்று வணங்கினும் ஒரு கடவுளை மாத்திரமே நாடிச்சென்று தனது துன்பத்தை முறையிடுவதை எம்மால் அவதானிக்க முடிகிறது. பிரபஞ்சத்தின் வெளிப்பாடுகள் மற்றும் நிகழ்வுகளை, தோற்றப்பாடுகளை அறிந்து அடையாளம் காண்பதன் மூலமும், இவ்வுலகின் விவகாரங்களில் உள்ள ஒத்த தன்மையினூடாகவும் பிரபஞ்சத்தில் காணப்படும் ஒரே மாதிரியான ஒழுங்கையும் சடப்பொருளின் ஒத்ததன்மையையும் அறிவியல் விஞ்ஞானம் நிரூபித்துள்ளது. (ஆகவே இப்பிரபஞ்ஞத்தின் இயக்கம் ஒருவனின் வல்லமையினூடாக இயக்கப்படும் பேருண்மையை இதனூடாக அறிந்து கொள்கிறோம்.)

ஒரு குடும்பத்தை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வோம். அதாவது குடும்பம் சம்பந்தமாக ஒரு தீர்க்கமான முடிவை எய்துகொள்வதில் தந்தைக்கும் தாய்க்கும்; (கணவன் மனைவிக்கு மத்தியில்) கருத்து வேறுபாடு, சிக்கல் ஏற்பட்டால், அவர்களின் கருத்து வேறுபாட்டால் குழந்தைகள் பாதிக்கப்பட்டு, அவர்களின் எதிர்காலம் நாசமாகி விடும் என்பதை சற்று சிந்திப்போமேயானால், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கடவுள்கள் இப்பிரபஞ்சத்தை நிர்வகிப்பதினால் ஏற்படும் சீர்குழைவு எப்படி இருக்கும்?!

அல்லாஹ் கூறுகிறான் :

"வானங்கள் மற்றும் பூமியில் பல கடவுள்கள் இருந்தால் அவை நாசமாகிவிடும். அர்ஷின் இரட்சகனான அல்லாஹ் அவர்கள் வர்ணிப்பதைவிட்டும் மிகவும் தூய்மையானவன்". ஆகவே இந்த அடிப்படையில்,

(அல்அன்பியா : 22).

படைப்பாளனின் இருப்பானது காலம், இடம், சக்தி ஆகியவற்றின் இருப்புக்கு முன்னரே இருந்திருக்க வேண்டும் என்பது அவசியமாகிறது. இவ்வாதாரத்தின் அடிப்படையில் ஒரு போதும் இப்பிரபஞ்ச உருவாக்கத்தின் காரணகர்த்தாவாக இயற்கை இருக்க முடியாது என்பது புலனாகிறது. காரணம் இயற்கை என்பதே காலம், இடம், சக்தி என்ற அடிப்படை கூறுகளால் ஆன ஒன்றாகும். ஆகையால்; பிரபஞ்ச உருவாக்கத்திற்கு குறிப்பிடப்படும் காரணமானது இயற்கையின் இருப்புக்கு முன் இருந்திருக்க வேண்டும். (இந்த வகையில் படைப்பாளனின் (சிருஷ்டி கர்த்தாவின்) இலட்சணங்கள் பின்வருமாறு இருக்க வேண்டும்!

படைப்பாளன் என்பவன் எல்லாம் வல்லவராக-அனைத்தையும் மிகைத்தவராக இருக்க வேண்டும், அதாவது எல்லாவற்றின் மீதும் அதிகாரம், ஆற்றல் கொண்டவராக இருக்க வேண்டும்.

படைப்பாளன் என்பவன் படைப்பை ஆரம்பிப்பதற்கான கட்டளையை பிரப்பிப்பதற்கான முழுமையான அதிகாரகாத்தைப் பெற்றவராக இருக்க வேண்டும் .

அவர் எல்லா விடயங்களை பற்றிய நிறைவான அறிவை பெற்றிருக்க வேண்டும், அதாவது எல்லாவற்றையும் பற்றிய முழுமையான அறிவைக் கொண்டிருக்க வேண்டும்.

அவர் படைத்தல் விவகாரத்தில் அவருடன் இன்னொரு காரணகர்த்தாவின் தேவை இருக்காத அளவிற்கு இவ்விடயத்தில் தனித்து செயற்படும் ஒருவனாகவும், ஏக வல்லமை படைத்தவனாகவும் இருத்தல் வேண்டும். அத்துடன் அவர் தனது படைப்பினங்களின் தோற்றத்தில் பிரதிபலிக்க தேவையற்றவராக இருத்தல் வேண்டும். மேலும் அவருக்கு எந்த நிலையிலும் மனைவி அல்லது குழந்தை ஆகியோரின் தேவை அற்றவராக இருப்பதுடன், பரிபூரணமான பண்புகள் அனைத்தையும் பெற்றவராக இருத்தல் வேண்டும்.

அவர் எக் காரியத்தைச் செய்தாலும் அதன் நுட்பம் துலங்குமளவுக்கு ஞானம் நிறைந்தவராக இருக்க வேண்டும்.

மேலும் அவர் நீதியாளராக இருக்க வேண்டும், வெகுமதியும் தண்டனை வழங்குவதும், மனிதர்களுடன் தொடர்புடன் இருப்பதும் அவரின் நீதிக்கு அடையாளமாகும். ஏனென்றால் மனிதர்களைப் படைத்துவிட்டு கைவிட்டுவிடும் சிருஷ்டியாளன் ஒரு போதும் கடவுளாக இருப்பதற்கு தகுதியற்றவராவார். இதற்காகவே அவர் தனது கொள்கையை மனிதர்களுக்கு எத்திவைத்து சரியான பாதையை தெளிவுபடுத்துவதற்காக தூதர்களை அனுப்பி வைக்கிறார். யார் நபிமார்கள் காட்டிய வழியில் பயணிக்கிறார்களோ அவர்கள் வெகுமதியை பெற்றுக் கொள்ளத் தகுதியானவர்கள். இப்பாதையை விட்டு விலகிச் சென்றோர் தன்டணைக்கு உரியவர்கள்.