அல்லாஹ் கூறுகிறான் :
"பூமியில் ஊர்ந்து திரியக்கூடியவையும், தன் இரு இறக்கைகளால் (ஆகாயத்தில்) பறக்கக் கூடியவையும் உங்களைப் போன்ற (உயிருள்ள) படைப்புகளே (சமுதாயங்களே) தவிர வேறில்லை. (இவற்றில்) ஒன்றையுமே (நம் பதிவுப்) புத்தகத்தில் (லவ்ஹுல் மஹ்ஃபூளில்) குறிப்பிடாது நாம் விட்டுவிடவில்லை. பின்னர், (ஒரு நாளில்) இவையும் தங்கள் இறைவனிடம் கொண்டு வரப்படும்".(அல் அன்ஆம் : 38 ). تقدم
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "(முன்னொரு சமுதாயத்தைச் சேர்ந்த) பெண்ணொருத்தி ஒரு பூனை(க்குத் துன்பம் தந்த) விஷயத்தில் வேதனைப்படுத்தப் பட்டாள். அந்தப் பூனையை அது பசியால் துடித்துச் சாகும் வரை அவள் அடைத்து வைத்திருந்தாள். அதற்கு அவள் உணவு, பானம் கொடுக்கவுமில்லை, பூமியிலுள்ள பூச்சி, புழுக்களைத் தானாகத் தேடி உண்ண அதனை விடுவிக்கவும் இல்லை. அதன் காரணத்தால் அவள் நரகத்தில் புகுந்தாள்". (புஹாரி, முஸ்லிம்). تقدم
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : “ஒரு நாய் தாகத்தால் மண்ணை நக்கியதை ஒரு மனிதர் கண்டார். உடனே தனது காலணியை கழற்றி அது தாகத்தை தணித்துக் கொள்ளும் வரை அதில் நீரை அள்ளி கொடுத்தார். அல்லாஹ் இந்த செயலைப் பாராட்டி அவரை சுவர்க்கத்தில் நுழைவித்தான்''. (ஆதாரம் : புஹாரி, முஸ்லிம்). تقدم
அல்லாஹ் கூறுகிறான் :
"(மனிதர்களே! சமாதானமும் அமைதியும் ஏற்பட்டு), பூமியில் சீர்திருத்தம் ஏற்பட்ட பிறகு நீங்கள் அதில் குழப்பம் விளைவிக்காதீர்கள்! மேலும், அச்சத்துடனும் ஆவலுடனும் அல்லாஹ்வை அழையுங்கள்! திண்ணமாக, அல்லாஹ்வின் அருள் நன்னடத்தையுள்ள மக்களுக்கு அருகில் இருக்கிறது". (அஃராப் : 56). تقدم
"மக்கள் தங்கள் கைகளால் எதைச் சம்பாதித்தார்களோ அதன் காரணமாக தரையிலும் கடலிலும் அராஜகமும் குழப்பமும் தோன்றி விட்டிருக்கின்றன. அவர்கள் செய்த சில செயல்களின் விளைவை அவர்கள் சுவைப்பதற்காக! (அதனால்) அவர்கள் விலகி விடக்கூடும்". (அர்ரூம் : 41). تقدم
"அவனுக்கு அதிகாரம் கிடைத்து விட்டால், அவனுடைய முயற்சிகள் எல்லாம் பூமியில் குழப்பத்தைப் பரப்புவதற்காகவும் வேளாண்மையையும், மனித இனத்தையும் அழிப்பதற்காகவுமே இருக்கும்! ஆனால் (அவன் சாட்சியாக்குகின்ற) அல்லாஹ் குழப்பத்தை விரும்புவதில்லை". (அல்பகரா: 205). تقدم
"மேலும், (பாருங்கள்:) அருகருகே அமைந்துள்ள (தனித்தனித் தன்மைகள் கொண்ட) பல பகுதிகள் பூமியில் உள்ளன; திராட்சைத் தோட்டங்களும் உள்ளன; வயல்களும் இருக்கின்றன; பேரீச்சை மரங்களும் இருக்கின்றன. அவற்றில் சில ஒற்றையாகவும் வேறு சில இரட்டையாகவும் முளைக்கின்றன. அனைத்திற்கும் ஒரே விதமான நீரே புகட்டப்படுகின்றது. ஆயினும் அவற்றில் சிலவற்றைச் சுவை மிகுந்ததாகவும் சிலவற்றை சுவை குறைந்ததாகவும் ஆக்குகின்றோம். திண்ணமாக, இவை அனைத்திலும் சிந்தித்துணரும் மக்களுக்கு பல சான்றுகள் இருக்கின்றன". (அர்ரஃத் : 4). تقدم
சமூகக் கடமைகள் யாவும் அன்பு, இரக்கம் மற்றும் பிறருக்கு மரியாதை செய்தல் என்ற அடித்தளத்தில் கட்டமைக்கப்பட வேண்டும் என்று இஸ்லாம் நமக்குக் கற்றுத்தருகிறது.
இஸ்லாம் இதற்கான அடிப்படைகள், அளவுகோள்கள் மற்றும் வரையறைகளை நிறுவியுள்ளதுடன், சமூகத்தை ஒன்றிணைக்கும் அனைத்து உறவுகளுக்குமான உரிமைகள் மற்றும் கடமைகளையும் வரையறுத்துள்ளது.
அல்லாஹ் கூறுகிறான் :
"அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனுக்கு எதையும் இணையாக்காதீர்கள். தாய், தந்தைக்கு உபகாரம் புரியுங்கள். (அவ்வாறே) உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அந்நிய அண்டை வீட்டாருக்கும், (எப்பொழுதும்) உங்களுடன் இருக்கக்கூடிய நண்பர்களுக்கும், பயணிகளுக்கும், உங்களிடம் உள்ள அடிமைகளுக்கும், (அன்புடன் உபகாரம் புரியுங்கள்). எவன் கர்வம் கொண்டவனாக, பெருமை அடிப்பவனாக இருக்கிறானோ அவனை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை". (நிஸா : 36). تقدم
"அவர்களோடு நல்ல முறையில் வாழ்க்கை நடத்துங்கள். அவர்களுடன் சேர்ந்து வாழ நீங்கள் விரும்பாவிட்டாலும் பொறுமையைக் கைக்கொள்ளுங்கள். ஏனெனில், ஒரு விஷயம் உங்களுக்குப் பிடிக்காமல் போகலாம். ஆனால் அல்லாஹ் அதில் பல நன்மைகளை வைத்திருக்கக் கூடும்". (அந்நிஸா: 19). تقدم
நம்பிக்கையாளர்களே! (நீங்கள் ஒரு சபையிலிருக்கும் பொழுது, எவரேனும்) உங்களை நோக்கிச் ‘‘சபையில் நகர்ந்து இடம் கொடுங்கள்'' என்று கூறினால், (அவ்வாறே) நீங்கள் நகர்ந்து இடம் கொடுங்கள். இடத்தை அல்லாஹ் உங்களுக்கு விசாலமாக்கி கொடுப்பான். தவிர, (சபையில் ஒரு காரணத்திற்காக உங்களை நோக்கி) ‘‘எழுந்து (சென்று) விடுங்கள்'' என்று கூறப்பட்டால், அவ்வாறே நீங்கள் எழுந்து (சென்று) விடுங்கள். (இவ்வாறு நடந்துகொள்ளும்) உங்களிலுள்ள நம்பிக்கையாளர்களுக்கும், கல்வி ஞானம் உடையவர்களுக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துவான். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிவான்". (அல் முஜாதலா: 11). تقدم
அனாதைகளை ஆதரிக்குமாறு இஸ்லாம் ஊக்குவிப்பது மாத்திரமின்றி, தங்கள் சொந்த குழந்தைகளை நடத்துவது போல் அவர்களை நடத்துமாறும் அனாதை பாதுகாவலரை வலியுறுத்துகிறது. இருப்பினும், தந்தையின் அனந்தரச்சொத்தில் அவ்வநாதைக்குரிய பங்கை பாதுகாக்கவும், பரம்பரை கலப்பை தவிர்ப்பதற்காகவும் அநாதைகள் தங்கள் உண்மையான குடும்பத்தைக் கண்டறியும் உரிமை உண்டு.
தான் தத்தெடுக்கப்பட்டதை முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு தற்செயலாக அறிந்து கொண்ட மேற்கத்திய யுவதி தற்கொலை செய்த சம்பவம், தத்தெடுப்புச் சட்டங்களில் உள்ள முறை கேட்டுக்கான மிகப்பெரும் சான்றாக உள்ளது. சிறுவயது முதலே அவளுக்கு இதனைத் தெரிவித்திருந்தால், அவளுக்கு கருணை காட்டி, அவளுடைய சொந்த குடும்பத்தைத் தேடும் வாய்ப்பைக் பெற்றிருப்பாள்.
அல்லாஹ் கூறுகிறான் :
"ஆகவே நீர் அநாதைகளைக் கடிந்துகொள்ள வேண்டாம்''. (அல்ழுஹா: 9). تقدم
"நீங்கள் இம்மை மறுமை பற்றி கருத்தூன்றி சிந்திக்க வேண்டும் என்பதற்காக! அநாதைகளைப் பற்றியும் உம்மிடம் வினவுகின்றனர். நீர் கூறுவீராக: “அவர்களுக்கு நன்மை பயக்கக்கூடிய செயல் முறையை மேற்கொள்வதே உத்தமமாகும். நீங்களும், அவர்களும் சேர்ந்து வாழ்வதில் (உணவு, உறைவிடம் போன்றவைகளுக்குக் கூட்டாகச் செலவு செய்வதில்) குற்றமேதும் இல்லை. ஏனென்றால், அவர்கள் உங்கள் சகோதரர்களேயாவர். தீமை செய்பவர்களையும் நன்மை செய்பவர்களையும் அல்லாஹ் நன்கு அறிந்திருக்கின்றான். அல்லாஹ் நாடியிருந்தால் (இவ்விஷயத்தை) உங்களுக்குக் கடினமாக்கியிருப்பான். ஆனால் அல்லாஹ் பேராற்றலுள்ளவனாகவும் நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான்”. (அல்பகரா : 220). تقدم
"(பாகப்) பிரிவினை செய்துகொள்ளும் இடத்திற்கு (பங்குதாரல்லாத) உறவினர்களோ, அனாதைகளோ, ஏழைகளோ வந்துவிட்டால், அவர்களுக்கும் அதிலிருந்து (ஏதும்) கொடுத்து, அவர்களுக்கு அன்பான வார்த்தைகளைக் (கொண்டு ஆறுதல்) கூறுங்கள்". (அந்நிஸா: 8). تقدم