Applicable Translations हिन्दी සිංහල English Español ગુજરાતી عربي

இஸ்லாத்தில் உரிமைகள் :

அடிமை முறை குறித்த இஸ்லாத்தின் நிலைப்பாடு யாது?

இஸ்லாத்திற்கு முன்பே அடிமை முறையானது பன்னெடுங்காலாமாக எந்த சட்ட வரைமுறைகளுமின்றி மக்களிடத்தில் பரவலாக காணப்பட்டது. அடிமைத்தனத்திற்கு எதிரான இஸ்லாத்தின் போராட்டமானது, ஒட்டுமொத்த சமூகத்தின் பார்வை மற்றும் மனநிலையை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. இதனால் விடுதலைபெற்ற அடிமைகள் ஆர்ப்பாட்டங்கள், வேலைநிறுத்தங்கள், கீழ்ப்படியாமை அல்லது இனப் புரட்சிகள் போன்றவற்றை கைக்கொள்வதற்கான எந்தத் தேவையுமின்றி சமூகத்தின் பூரண செயற்பாட்டு உறுப்பினர்களாக இருப்பர். இந்த வெறுக்கத்தக்க முறைமையை மிக விரைவாகவும் சாத்வீக வழிகளிலும் ஒழிப்பது இஸ்லாத்தின் குறிக்கோளாக காணப்பட்டது.

ஆட்சியாளர்கள் தங்கள் குடிமக்களை அடிமைகளாக நடத்துவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. ஏனெனில் இஸ்லாம் ஆட்சியாளர்களுக்கும் ஆளப்படுவோருக்குமான (குடிமக்களுக்குமான) உரிமைகள் மற்றும் கடமைகளை சுதந்திரம் மற்றும் நீதியின் எல்லைக்குள் நின்று அனுபவிப்பதற்கு அனைவருக்கும் உத்தரவாதம் வழங்கியிருக்கிறது. குற்றப்பரிகாரங்கள், தர்மங்கள் செய்வதற்கான வாய்ப்புகளை அளிப்பதன் மூலம் அடிமைகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டனர். அத்துடன் அகிலங்களின் இரட்சகனான அல்லாஹ்வை நெருங்கும் வழிமுறைகளில் ஒன்றாக அடிமைகளை உரிமையிடலை ஆக்கி, இவ்வாறான நற்காரியங்களில் விரைவாக செயற்படுவதற்கும் தூண்டியது.

தன் எஜமான் மூலம் ஒரு குழந்தையைப் பெற்றுக்கொடுத்த ஒரு அடிமைப் பெண் மீண்டும் அடிமையாக விற்கப்படாது, அவள் தன் எஜமானன் இறந்தவுடன் தானாகவே சுதந்திரம் பெறுபவளாக இருந்தாள். முன்னைய சமூக வழக்காறுகளுக்கு மாறாக, இஸ்லாம் அடிமைப்பெண்ணின் குழந்தையை தனது சுதந்திரவானனான தந்தையுடன் இணைப்பதை சட்டபூர்வமாக்கியது. அதே போல் எஜமானுக்கு குறிப்பிட்ட தொகையை செலுத்துவதன் மூலம் அல்லது குறிப்பிட்ட காலம் ஊழியம் செய்வதன் மூலம் தனது அடிமைத்தலையிலிருந்து தன்னை விடுவிக்கும் சட்ட அனுமதியையும் வழங்கியது.

அல்லாஹ் கூறுகிறான் :

''உங்களின் அடிமைகளில் எவர்கள் உரிமைப்பத்திரம் எழுதிக்கேட்கிறார்களோ, அவர்களிடம் நீங்கள் ஏதேனும் நன்மையை அறிந்தால் அவர்களுக்கு எழுதிக்கொடுங்கள்''. (அந்நூர்: 33). تقدم

மார்க்கத்தையும், உயிரையும், உடமையையும் பாதுகாப்பதற்காக போரில் ஈடுபட்டு சிறைபிடிக்கப்பட்ட எதிரிக் கைதிகளுடன் நல்ல முறையில் நடந்து கொள்ளுமாறு தனது தோழர்களுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் பணித்தார்கள். கைதிகளை ஒரு தொகைப்பணத்தை செலுத்துவதன் மூலம், அல்லது சிறார்களுக்கு எழுதவும் வாசிக்கவும் கற்றுக்கொடுப்பதன் மூலம் தமது சுதந்திரத்தை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு காணப்பட்டது. அதே போல் இஸ்லாத்தில் கைதிகள் முறைமையைப் பொறுத்தவரை அவர்களில் எந்தக் குழந்தைகளும் தமது தாயிடமிருந்தோ, அல்லது தனது சகோதரனிடமிருந்தோ பிரித்து வைக்கப்படவில்லை.

போரில் சரணடையும் போராளிகளுடன் கருணையுடன் நடந்து கொள்ளுமாறும் இஸ்லாம் பணித்தது.

அல்லாஹ் கூறுகிறான் :

"(நபியே!) இணைவைத்து வணங்குபவர்களில் எவனும் உம்மிடம் பாதுகாப்பைக் கோரினால், அல்லாஹ்வுடைய வசனங்களை அவன் செவியுறும்வரை அவனுக்கு பாதுகாப்பு அளிப்பீராக. (அவன் அதை செவியுற்றும் நம்பிக்கை கொள்ளாவிட்டால்) அவனை அவனுக்கு பாதுகாப்புள்ள (வேறு) இடத்திற்கு அனுப்பிவிடுவீராக! ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் அறிவில்லாத மக்கள் ஆவர்".(அத்தவ்பா : 6). تقدم

அதே போல் அடிமைகள் தங்களை விடுவித்துக்கொள்ள முஸ்லிம்களின் பொது நிதி அல்லது அரச கரூவுலத்திலிருந்து உதவி செய்ய முடியும் என்றும் இஸ்லாம் ஆணை பிறப்பித்தது. இந்த வகையில் நபியவர்களும் அவர்களின் தோழர்களும் அரச பொது நிதியிலிருந்து இதற்கான உதவிகளை வழங்கினர்.

பெற்றோர் மற்றும் உறவினர்களின் உரிமைகள் பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு யாது?

அல்லாஹ் கூறுகிறான் :

"(நபியே!) உமது இறைவன் தன்னைத் தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்றும், தாய் தந்தைக்கு உபகாரம் புரியும் படியும் கட்டளையிட்டிருக்கிறான். உம்மிடம் இருக்கும் அவர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ முதுமையை அடைந்து விட்ட போதிலும் அவர்களை விரட்டவும் வேண்டாம்; அவர்களை (நிந்தனையாகச்) ‘சீ' என்றும் சொல்லவும் வேண்டாம். அவர்களிடம் (எதைக் கூறியபோதிலும்) மிக்க மரியாதையாக(வும் அன்பாகவுமே) பேசுவீராக. அவர்களுக்கு மிக்க அன்புடன் பணிந்து நடப்பீராக! மேலும், ‘‘என் இறைவனே! நான் குழந்தையாக இருந்த பொழுது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்துப் பாதுகாத்தவாறே நீயும் அவ்விருவர் மீது அன்பும் அருளும் புரிவாயாக!'' என்றும் பிரார்த்திப்பீராக!".(அல் இஸ்ரா :23, 24). تقدم

"மனிதன் தன் தாய் தந்தைக்கு உபகாரம் புரியும் படி நாம் அவனுக்கு நல்லுபதேசம் செய்தோம். அவனுடைய தாய், சிரமத்துடனேயே அவனை (கர்ப்பத்தில்) சுமந்திருந்து சிரமத்துடனேயே பிரசவிக்கிறாள். அவள் கர்ப்பமானதிலிருந்து, அவன் பால்குடி மறக்கும் வரை, முப்பது மாதங்கள் (மிக்க சிரமத்துடன்) செல்கின்றன. அவன் வாலிபமாகி நாற்பது வயதையடைந்தால் ‘‘என் இறைவனே! நீ என் மீதும், என் தாய் தந்தை மீதும் புரிந்த அருளுக்காக உனக்கு நான் நன்றி செலுத்தி, உன் திருப்தியை அடையக்கூடிய நற்செயல்களைச் செய்யும்படி(யான நல்லறிவை) நீ எனக்குத் தந்தருள்வாயாக! எனக்கு உதவியாக இருக்கும்படி என் குடும்பத்தை சீர்திருத்தி வைப்பாயாக. நிச்சயமாக நான் உன்னிடம் பாவமன்னிப்புக் கோரி மீண்டு விட்டேன். (உனக்கு) முற்றிலும் வழிபட்டவர்களில் நானும் ஒருவன்'' என்று கூறுவான்". (அல்அஹ்காப்: 15). تقدم

"உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் அவரவர்களுடைய உரிமைகளைக் கொடுத்து வரவும். (செல்வத்தை) அளவு கடந்து வீண் செலவு செய்யவேண்டாம்". (அல் இஸ்ரா : 26). تقدم

அண்டைவீட்டார் உரிமைகள் குறித்த இஸ்லாத்தின் நிலைப்பாடு என்ன?

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன் என்று (மூன்று முறை) நபி (ஸல்) அவர்கள கூறினார்கள். அப்போது அவன் யார்? அல்லாஹ்வின் தூதரே! என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் எவனுடைய தீங்கிலிருந்து அவனுடைய அண்டை வீட்டார் பாதுகாப்பு பெறவில்லையோ அவன்தான் என்று பதிலளித்தார்கள்".(புஹாரி, முஸ்லிம்). تقدم

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "அண்டைவீட்டாரே தனது அண்டைவீட்டாரின் சொத்தை வாங்குவதற்கு மிகவும் அருகதை உடையவர். (வேறு நபர் ஒருவர் குறித்த சொத்தை உடமையாக்கிக்கொண்டால் அதனை பலவந்தமாக எடுப்பதற்கும் உரிமைபெற்றவராக அண்டை வீட்டார் மாறிவிடுகிறார்;). குறித்த நிலத்திற்கு செல்லும் பாதை ஒன்றாக இருந்து அண்டைவீட்டார் இல்லாதிருந்தால் அவருக்காக காணி உரிமையாளர் எதிர்பார்த்திருத்தல் வேண்டும்'' (முஸ்னதுல் இமாம் அஹ்மத்). تقدم

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : “அபூதர்ரே! நீ குழம்பு வைத்தால் அதில் தண்ணீரை அதிகப்படுத்து! உன் பக்கத்து வீட்டாரை (அதைக் கொடுத்து) கவனித்துக் கொள்!". (ஆதாரம் : முஸ்லிம்). تقدم

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "ஒருவரிடம் நிலமிருந்து அதனை விற்க நாடினால் அதனை தனது அண்டைவீட்டாரிடம் முன்வைக்கட்டும்'' (ஆதாரம் இப்னு மாஜஹ், இது ஆதாரபூர்வமான ஹதீஸாகும்). تقدم