Applicable Translations हिन्दी සිංහල English Español ગુજરાતી عربي

இஸ்லாத்தில் தனக்கோ பிறருக்கோ தீங்கிழைத்தல் கூடாது

சிவப்பு மற்றும் வெள்ளை மாமிசத்தை (இறைச்சியை) புசிப்பதற்கு இஸ்லாம் ஏன் அனுமதித்தது?

இறைச்சி புரதச்சத்தைப் பெற்றுக்கொள்வதற்கான அடிப்படையாகும். மேலும் மனிதர்களுக்கு தட்டையான மற்றும் கூர்மையான பற்கள் உள்ளன, அவை இறைச்சியை மெல்லவும் அரைக்கவும் ஏற்றாற் போல் அமைந்துள்ளது. தாவரங்களையும், விலங்குகளையும், சாப்பிடுவதற்கு ஏற்ற விதமாக பற்களை அல்லாஹ் மனிதர்களில் படைத்துள்ளான். மேலும் தாவர மற்றும் விலங்கு சார் உணவுகளை ஜீரணிக்கக்கூடிய செரிமான அமைப்பை உருவாக்கியுள்ளான். இவை யாவும் தாவரங்கள் மற்றும் மாமிசங்கள் உட்கொள்ளப்படுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதற்கான சான்றாக அமைந்துள்ளது.

அல்லாஹ் கூறுகிறான் :

''கால் நடைகள் உண்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளன'' . (அல்மாஇதா : 1). تقدم

உணவுகள் தொடர்பான சில விதிகளை அல்குர்ஆன் குறிப்பிட்டுள்ளது :

"(நபியே!) கூறுவீராக: ‘‘மனிதன் புசிக்கக்கூடியவற்றில் எதுவும் தடுக்கப்பட்டு விட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்ட வஹ்யில் நான் காணவில்லை. ஆயினும், செத்தவை, வடியக்கூடிய இரத்தம், பன்றியின் மாமிசம் ஆகியவை நிச்சயமாக அசுத்தமாக இருப்பதனால் இவையும், அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் கூறுவது பாவமாய் இருப்பதனால் அவ்வாறு கூறப்பட்டவையும் (தடை செய்யப்பட்டுள்ளன.)'' தவிர வரம்பு மீறி பாவம் செய்யும் நோக்கமின்றி எவரேனும் நிர்ப்பந்திக்கப்பட்டு (இவற்றை புசித்து) விட்டால், (அது அவர்கள் மீது குற்றமாகாது.) நிச்சயமாக உமது இறைவன் மிக்க மன்னிப்பவன், மிகக் கருணையுடையவன். (ஆகவே, மன்னித்து விடுவான்)". (அல் அன்ஆம் : 145). تقدم

"தானாகச் செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாதோர்க்கு அறுக்கப்பட்டவையும் உங்களுக்குத் தடைசெய்யப்பட்டுள்ளன. மேலும் கழுத்து நெறிக்கப்பட்டுச் செத்தது, அடிபட்டுச் செத்தது, உயரத்தில் இருந்து வீழ்ந்து செத்தது, கொம்பால் குத்தப்பட்டுச் செத்தது, வனவிலங்கு கடித்துச் செத்தது ஆகியவையும் (தடைசெய்யப்பட்டுள்ளன. இவற்றில் உயிருடன் கண்டு) முறைப்படி நீங்கள் அறுத்தவற்றைத் தவிர. மேலும் (வணக்கத்திற்காக) நடப்பட்டவற்றிக்கு அறுக்கப்பட்டவையும், நீங்கள் அம்பெறிந்து குறிபார்ப்பதும் (தடைசெய்யப்பட்டுள்ளன) இவை பாவமாகும்". (மாஇதா : 3). تقدم

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்:

''உண்ணுங்கள் பருகுங்கள் வீண்விரயம் செய்யாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் வீண்விரயம் செய்வோரை நேசிக்கமாட்டான்''. (அல் அஃராப் :31). تقدم

இப்னுல் கைய்யிம் ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள் : 'அளவு மற்றும் தரத்தின் அடிப்படையில், உடலுக்கு தேவையான நன்மைபயக்கும் உணவு மற்றும் நீராகாரங்களை தமது உடலுக்கு வழங்க வேண்டும் என அல்லாஹ் தனது அடியார்களுக்கு வழிகாட்டியுள்ளான். இது எப்போது மீறப்படுமோ அது வீண்விரயமாக மாறிவிடும். உண்ணாமல் மற்றும் பருகாமல் இருத்தல், அல்லது அளவுக்கதிகமாக சாப்பிடுதல் அல்லது பருகுதல் ஆகியவை ஒருவரின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதோடு நோய்கள் ஏற்படுவதற்கும் காரணமாக அமையும். எனவே, முழுமையாக ஆரோக்கியம் பேணல் என்பது இந்த இரண்டு வார்த்தைகளில் உள்ளது'. (ஸாதுல் மஆத் 4-213) تقدم

மேலும் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் விடயத்தில் அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான் : ''அவர் அவர்களுக்கு நல்லவற்றை அனுமதித்து, தீங்கானவற்றை தடைசெய்கிறார்''. (அல்அஃராப் : 157). மேலும் அல்லாஹ் கூறுகிறான் : "நபியே தங்களுக்கு உண்பதற்கு அனுமதிக்கப்பட்டவை எவை? என அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். அதற்கு நீர் அவர்களுக்கு தூய்மையானனை எனக் கூறுவீராக". (அல் மாஇதா : 4). تقدم تقدم

ஆகவே நல்லவை அனைத்தும் அனுமதிக்கப்பட்டதாகும், தீயன அனைத்தும் தடைசெய்யப்பட்டதாகும்.

மேலும் நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒரு இறைவிசுவாசி உண்ணல் மற்றும் பருகுதலில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை தெளிபடுத்தினார்கள். அவர்கள் குறிப்பிடுகையில் : “ஆதமுடைய மக்களின் நிரம்பக் கூடிய பைகளில் மிகவும் கெட்டது அவர்களின் வயிறாகும். ஆதமுடைய மகனுக்கு தனது முதுகெலும்பை நேராக்கிக் கொள்ளும் அளவு உணவே போதுமானது. அதுவும் அவனுக்கு போதாது என்றால் தன் வயிற்றில் மூன்றில் ஒரு பகுதியை உணவுக்கும் மற்றொரு பகுதியை தண்ணீருக்கும் மற்றொரு பகுதியை அவன் சீராக மூச்சு விடுவதற்கும் ஆக்கிக் கொள்ளட்டும்". (ஆதாரம் : திர்மிதி) . تقدم

"ஒருவர் தமக்கோ பிறருக்கோ தீங்கிழைத்தல் கூடாது" என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : இப்னு மாஜா) . تقدم

இஸ்லாத்தில் மிருகங்களை அறுக்கும் முறை மனிதாபினாமற்றதாக கருதப்படாதா?

கூர்மையான கத்தியினால் அறுவைமிருகத்தின் உணவுக் குழாயையும், மூச்சுக் குழாயையும் மிக வேகமாக வெட்டி விடுவதே இஸ்லாத்தின் அறுப்பு முறையாகும். இந்த முறை மிருகங்கள் நோவினைப்படுவதற்கு காரணமாக அமையும் மின்அதிர்வு, மற்றும் கழுத்தை நெரித்துக் கொல்லல் போன்ற வழிமுறைகளை விடவும் கருணை நிறைந்தது. மூளைக்கான இரத்த ஓட்டம் தடைபட்டால், விலங்கு வலியை உணராது. ஒரு மிருகம் அறுக்கப்படும்போது ஏற்படும் துடிப்புக்கு வலி காரணம் அல்ல, மாறாக இரத்தத்தின் விரைவான வெளியேற்றமே இதற்கான காரணமாகும். இவ்வாறு துடிப்பது உடலில் இருந்து இரத்தம் முழுமையாக வெளியேற உதவுகிறது. இது விலங்குகளின் உடலுக்குள் இரத்தத்தை உரைய வைக்கும் ஏனைய அறுப்பு முறைகளுக்கு மாற்றமானது. இரத்தம் வெளியேறாத நிலையில் கொல்லப்பட்ட மிருகத்தின் இறைச்சியை புசிப்போரின் ஆரோக்கியம் பெரிதும் பாதிக்கப்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ''நிச்சயமாக அல்லாஹ் எல்லா விடயங்களையும் மிகவும் அழகிய முறையில் செய்ய வேணடும் என விதித்துள்ளான். ஆகவே நீங்கள் கொலை செய்தால் அழகிய முறையில் கொல்லுங்கள். நீங்கள் ஒரு மிருகத்தை அறுத்தால் அழகிய முறையில் அறுங்கள். எனவே உங்களில் அறுக்கும் ஒருவர் தனது கத்தியை கூர்மையாக்கிக் கொள்ளட்டும், அறுவைப் பிராணிக்கும் ஆருதலைக் கொடுக்கட்டும்'. அறுக்கும் மிருகங்களின் கஷ்டங்களை எளிதாக்கக்கட்டும்". (ஆதாரம் : முஸ்லிம்). تقدم