Applicable Translations English Español ગુજરાતી हिन्दी සිංහල 中文 Русский عربي

படைப்பாளனின் இருப்புக்கான உறுதியான ஆதாரம் என்ன?

நாம் எமது வெற்றுக்கண்களால் வானவில் மற்றும் காணல் நீரைக் காண்கிறோம். ஆனால் அதற்கென்று ஒரு இருப்பு அல்லது யதார்த்தம் கிடையாது! ஆனால் வெறுமனே இயற்கை விஞ்ஞானம் புவியீர்ப்பு விசை இருப்பதை நிரூபித்திருப்பதால் அதனை நாம் காணமலே நம்புகிறோம். இதே போல் கடவுளை (இறைவனை) நம் வெற்றுக் கண்களுக்கு புலப்படவில்லை என்பதால் அவன் இருப்பை மறுக்க முடியாவதல்லவா?

அல்லாஹ் கூறுகிறான் :

"பார்வைகள் அவனை அடைய முடியாது. அவனோ பார்வைகள் அனைத்தையும் அறிந்து கொள்கிறான். அவன் (எவரின் பார்வைக்கும் அகப்படாத) மிக நுட்பமானவன், மிக்க அறிந்தவன்".(அன்ஆம் : 103). تقدم

இக்கருத்தை விளக்க பின்வவரும் எடுத்துக்காட்டை குறிப்பிட முடியும். அதாவது 'சிந்தனை' என்ற சடப்பொருளல்லாத ஒன்றை எடுத்துக்கொள்வோம். ஒரு மனிதனால் பொருளற்ற இவ்வாறான ஒன்றின் நிறையை கிரேமிலோ அதன் நீளத்தை சென்டிமீட்டரிலோ, அதில் உள்ளடங்கியுள்ள இரசாயன கலவையையோ, நிறத்தையோ, அதன் உள்ளே காணப்படும் அழுத்தத்தையோ, தோற்றத்தையோ வடிவத்தையோ விவரிக்க முடியாது.!

உய்த்தறிதல் –உள்ளுணர்தல்- நான்கு வகைப்படும் :

புலன் சார்ந்தது : உதாரணத்திற்கு பார்வை புலன்மூலம் ஒன்றை காணுதல்.

கற்பனை (சிந்தனை) சார்ந்தது : அதாவது உங்கள் ஞாபகத்தில்- நினைவில்- உள்ள ஒரு வடிவத்தை உங்களின் கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிட்டுப்பார்த்து ஒரு விடயத்தை உணர்தல் -புரிந்து கொள்ளுதல்.

ஊகம் சார்ந்தது : இது பிறரின் உணர்வுகளை உணர்தலைக் குறிக்கிறது. அதாவது உமது மகன் கவலையாக உள்ளான் என்பதை உணர்வது போல.

இந்த மூன்று நிலைகளிலும் மனிதனும் மிருகமும் ஒன்று படுகின்றன.

பகுத்தறிவுரீதியாக புரிந்து கொள்ளல் : இதில் மனிதன் மாத்திரம் தனித்தவம் பெற்றவனாக திகழ்கிறான்.

இவ்வகை புரிதலை முற்றாக நீக்கி மனிதனை மிருகத்துடன் சமப்படுத்தவே நாத்திகவாதிகள் விரும்புகின்றனர். பகுத்தறிவுரீதியான புரிதலே ஒன்றை உணர்ந்தறிவதில் மிகவும் பலமிக்க ஒன்றாக கருதப்படுவதுடன் அதுவே புலன்களின் பார்வையையும் சரிசெய்கிறது என்பதே யதார்த்தமுமாகும். முன்கூறிய உதாரணம் போன்று ஒரு மனிதன் வெற்றுக்கண்களால் காணலைப் பார்த்தால் பகுத்தறிவு அது நீர் அல்ல வெறும் காணல் நீர் என்று கூறுகிறது. இது மணலின் மீது படும் ஒளியின் பிரதிபலிப்பால் தோன்றும் ஒரு மாயத்தோற்றம், இதற்கென யதார்த்த நிலை அடிப்படையில் கிடையாது. இங்கே அவர் பார்வை புலனால் ஏமாற்றப்பட்டு பகுத்தறிவால் வழிப்படுத்தப்படுகிறார் என்பதை நாம் காண்கிறோம். நாத்திகர்கள் பகுத்தறிவு ஆதாரங்களை நிராகரித்து, பௌதீக ஆதாரங்களைக் கோருவதுடன் அவர்கள் இந்த வார்த்தையை 'அறிவியல் சான்றுகள்' என்ற பிரயோகத்துடன் சுருக்கிக் கொள்கின்றனர். எனவே பகுத்தறிவு மற்றும் தர்க்கரீதியான சான்றுகள் அறிவியல் பூர்வமானவை இல்லையா? உண்மையில், இது அறிவியல் ஆதாரமாக உள்ளது. ஆனால் பௌதீக ரீதீயான ஆதாரம் கிடையாது. அத்துடன் (500) ஐநூறு ஆண்டுகள் இப்பூமியில் வாழ்ந்த ஒரு நபருக்கு வெற்றுக் கண்ணுக்குத் தெரியாத சிறிய நுண்ணுயிர்கள் இருப்பதைப் பற்றிய கருத்தை நீங்கள் கற்பனை செய்தால் அதன் எதிர்வினை எப்படி இருக்கும்?. (https://www.youtube.com/watch?v=P3InWgcv18A ஸுலைமான் பாழில்) تقدم

பகுத்தறிவைப் பொறுத்த வரை அது படைப்பாளனின் இருப்பையும் அவனின் சில பண்புகளை அறியும் இயலுமை இருப்பினும் அதற்கென்று வரம்புகள் உள்ளன. சில விடயங்களின் நுட்பங்களை அதனால் அறிந்து கொள்ள முடிகிறது, சிலவற்றின் நுட்பங்களை அதனால் அறிய முடியாது உள்ளது. உதாரணத்திற்கு ஐன்ஸ்டைன் போன்ற ஒரு பௌதீக விஞ்ஞானியின் பகுத்தறிவினால் எவரும் படைப்பின் நுட்பங்களை அறிய முடியாது.

அல்லாஹ் உயர் முன்மாதிரிக்கு சொந்தக்காரன், ஒருவர் வெறுமனே தன்னால் அல்லாஹ்வை (இறைவனை) முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும் என்ற இயலுமை இருப்பதாக எண்ணுவது அவனின் முழுமையான அறியாமையின் குறியீடாகும். அதாவது ஒரு வாகனம் உம்மை கடற்கரைக்கு அழைத்துச் செல்லலாம், ஆனால் அதில் மூழ்குவதற்கு உனக்கு அது வழி சமைக்காது. உதாரணத்திற்கு கடல் நீர் எத்தனை லீட்டருக்கு சமம் என்று நான் உம்மிடம் கேட்கும் போது ஏதாவது இலக்கத்தைக் கூறி பதிலளிப்பீராயின் நீ ஒரு முட்டாளாக கருதப்படுவாய். எனக்குத் தெரியாது என்று பதில் கூறின் நீ ஒரு அறிவாளி எனக் கருதப்படுவாய். எனவே உண்மைக் கடவுளை அறிய ஒரே வழி அவனின் பிரபஞ்ச மற்றும் அல்குர்ஆனின் அத்தாட்சிகள் மட்டுமே என்பதை புரிய வேண்டும்!. அஷ்ஷேய்க் முஹம்மத் ராதிப் அன்னாபுல்ஸியின் கூற்றின் ஒரு பகுதி.

எனவே இஸ்லாத்தின் அறிவுமூலாதாராமாக அல்குர்ஆன், ஸுன்னா எனும் நபி வழிமுறை, மற்றும் ஆதாரத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட அறிஞர்களின் ஏகோபித்த முடிவு ஆகியவை திகழ்கிறன. பகுத்தறிவானது அல்குர்ஆன் மற்றும் நபி வழிமுறையின் கட்டுக்கோப்புக்குள் இயங்கங்கூடியதாக இஸ்லாத்தில் இருப்பதால் அவ்வாறான சீரிய பகுத்தறிவு கூறும் விடயங்கள் இறைவெளிப்பாட்டுடன் எப்போதும் முரண்படமாட்டாது. அதே போன்று அல்லாஹ் பிரபஞ்ச அத்தாட்சிகளின் மூலமும், இறைவெளிப்பாட்டிற்கு முரண்படாது அதன் யதார்த்தாங்களுக்கு சான்றுபகரக் கூடிய புலன்சார் விடயங்கள் மூலமும் வழிகாட்டல்களை பெறக்கூடியதாகவே பகுத்தறிவை ஆக்கியுள்ளான்.

அல்லாஹ் கூறுகிறான் :

"அல்லாஹ் எவ்வாறு முதன் முறையாகப் படைத்து, பின்னர் அதனை மீட்டுகிறான் என்பதை அவர்கள் அறியவில்லையா? நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு மிக எளிதானதாகும். நீங்கள் பூமியில் பயணித்து அவன் படைப்பை எப்படி ஆரம்பித்தான்? என்பதைப் பாருங்கள், பின்பு அல்லாஹ்வே மறுதடவையும் உற்பத்தி செய்கிறான். நிச்சயமாக அல்லாஹ் யாவற்றின் மீதும் பேராற்றலுடையவன்". (அன்கபூத் : 19-20). تقدم

"அப்பால், (அல்லாஹ்) அவருக்கு (வஹீ) அறிவித்ததையெல்லாம் அவர், அவனுடைய அடியாருக்கு (வஹீ) அறிவித்தார்". (அந்நஜ்ம் :10). تقدم

அறிவில் உள்ள அழகே அதற்கு கரைகள் கிடையாது என்பதுதான். நாம் அறிவுத்துறையில் எவ்வளவு ஆழமாகச் செல்கிறோமோ அங்கு வேறு பல அறிவுகளையும் எம்மால் கண்டு கொள்ள முடிகிறது. அதனால் அறிவின் முழுமையை எம்மால் ஒரு போதும் அடைந்து கொள்ள முடியாது. மிகவும் திறமையான விவேகமுள்ள மனிதன் யாரெனில் எல்லாவற்றையும் விளங்கி அறிந்து கொள்ள வேண்டும் என்றிருப்பவன். மிகவும் மடத்தனம் நிறைந்த மனிதன் யாரெனில் தனக்கு அனைத்தும் விளங்கும் -புரியும்- என்றிருப்பவனாகும்.

அல்லாஹ் கூறுகிறான் :

"(நபியே!) நீர் கூறுவீராக! என் இரட்சகனின் வாக்கியங்களுக்கு (-அதை எழுதுவதற்கு) கடல் (நீர்) யாவும் மையாக இருந்தாலும் என் இரட்சகனின் வாக்கியங்கள் (எழுதி) முடிவதற்கு முன்னதாகவே, கடல் (நீர்) முடிந்து (செலவாகி)விடும்- அதுபோன்றதை (இன்னொரு கடலையும்) நாம் உதவிக்கு கொண்டு வந்தபோதிலும் சரியே.".(அல்கஹ்ப் :109). تقدم