Applicable Translations हिन्दी සිංහල English Español ગુજરાતી عربي

இறைவன் (படைப்பாளன்) ஏன் அவனின் படைப்பின் உருவத்தில் பிரதிபலிப்பதில்லை? தோன்றுவதில்லை?

விளக்கத்திற்காக மாத்திரம்- உயர்வான பண்பு அல்லாஹ்விற்கு மாத்திரமே- ஒரு உதாரணத்தை குறிப்பிடுகிறேன். ஒரு மனிதன் இலக்ட்ரோனிக் கருவியொன்றை பயன்படுத்தும் வேளை அவன் அதனை வெளியிலிருந்தே கட்டுப்படுத்துகிறான். இயக்குகிறான். அவன் ஒரு போதும் எந்த நிலையிலும் அதனுள் போவதில்லை என்பதை நாம் அறிவோம்

ஒரு சாதாரன கருவியை இயக்குவதற்கு சாதாரண ஒரு மனிதனின் நிலை இவ்வாறு இருக்கையில் நாம் அல்லாஹ்வுக்கு இதனை விட பண்மடங்காக செய்வதற்கு இயலும் என்று கூறக் காரணம் அவன் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவனாக இருப்பதினாலாகும். ஆகவே நாம் படைப்பாளனான இறைவன் ஒருவன் என்றும் அவன் தனித்துவமானவன் என்றும் முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறான பண்புள்ள ஒருவன் அவனின் கண்ணியத்திற்கு பொருத்தமற்றதை செய்யமாட்டான் என்பதையும் நாம் புரிய வேண்டும். அல்லாஹ்வுக்கு இணைகற்பித்து அவனது மகிமைக்கு பங்கம் விளைவிக்கும் அனைத்தைவிட்டும் அவன் மேலானவனாக உள்ளான்.

இன்னோர் உதாரணத்தை அவதானிப்போம். ஒரு மத போதகர் அல்லது மதரீதியான மரியாதையைப் பெற்ற ஒருவர் ஒரு போதும் பொதுப்பாதையில் நிர்வாணமாக திரியமாட்டார். அவருக்கு இதனை செய்யவதற்கு இயலுமை இருந்தும் மக்கள் முன் இவ்வாறான தோற்றத்தில் வரமாட்டார். காரணம் அவர் பெற்றிருக்கும் மதரீதியான அந்தஸ்த்து இச்செய்யற்பாட்டிட்ற்கு பொருந்தாது என்பதினாலாகும். ஆகவே மனிதனின் தோற்றத்தில் அல்லது படைப்பின் தோற்றத்தில் படைப்பாளன் -இறைவன்- தோன்ற வேண்டும் என்பது அறிவுபூர்வமற்ற ஒரு கேள்வி என்பதைப் புரிந்திருப்பீர்கள்.

படைப்பாளனை (இறைவனை) வணங்குவதில் இடைத்தரகர்களை எடுத்துக்கொள்வது நிரந்தர நரகத்திற்கு செல்ல காரணமாய் அமையும் என கூறப்படுவது ஏன்?

மனித சட்டத்தில் அரசனின் அல்லது அதிகாரம் படைத்தோரின் உரிமையை மீறுவது ஏனைய குற்றங்களுக்கு சமமானது அல்ல என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றாகும். இவ்வாறு மனித சட்டமே அதிகாரம் பெற்ற மனிதனின் உரிமையை மீறி நடக்கும் போது அதனை மிகப்பெரும் குற்றமாக கருதும் போது அரசர்களுக்கு எல்லாம் அரசனான அல்லாஹ்வின் உரிமையை மீறுவது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை. ஆகவே நபியவர்கள் குறிப்பிட்டது போன்று அடியார்கள் அல்லாஹ்வுக்கு- இறைவனுக்கு- செலுத்த வேண்டிய கடமை அவனை மாத்திரம் வணங்கி வழிபடுவதாகும் . இது குறித்து அவர்கள் குறிப்பிடுகையில் "அடியார்கள் அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய கடமை அவனை வணங்கி வழிபடுவதுடன் அவனுக்கு எதனையும் இணைவைக்காது இருப்பதுமாகும். இக்கடமையை அடியார்கள் நிறைவேற்றினால் அல்லாஹ் அடியார்களுக்கு செய்ய வேண்டியது என்ன என்பது பற்றி உனக்குத் தெரியுமா? என கேட்க, அதற்கு நான் இது குறித்து மிகவும் அறிந்தோர் அல்லாஹ்வும் அவனின் தூதருமாவார்கள். என்றேன். அதற்கு நபியவர்கள்: அடியார்களை வேதனை செய்யாது நரகத்திலிருந்து காப்பதுதான் அல்லாஹ் அடியார்களுக்கு செய்ய வேண்டிய கடமை" என்று நபியவர்கள் கூறியதாக முஆத் (ரலி) கூறினார்கள்.

அத்துடன் இவ்வாறு நாம் சிந்தித்தாலே இக்கேள்விக்கான சரியான பதிலை கண்டு கொள்ள முடியும். அதாவது நாம் ஒருவருக்கு ஒரு அன்பளிப்பை வழங்குகிறோம், அவரோ வேறொவருக்கு நன்றி கூறி அவரைப்பாராட்டுகிறார் என்றால் எம்மால் அதனை ஏற்க முடியுமா என்று சிந்தித்தால் நாம் இவ்விடயத்தில் தெளிவு பெற போதுமான சான்றாக இது அமைந்துவிடும். உயர் பண்புகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே, இந்த விடயத்தில் அடியார்களும் தங்களின் படைப்பாளனுடன் இவ்வாறுதான் உள்ளனர். அல்லாஹ் அவர்களுக்கு கணக்கிட முடியாத அருள்களை வழங்கியுள்ளான், அவர்களோ அவனல்லாத மற்றவர்களுக்கு நன்றி செலுத்துகின்றனர். ஆனால் படைப்பாளனான இறைவன் எல்லா நிலைகளிலும் தேவையற்றவன்.

படைப்பாளனான இறைவன் ஒருவனாக ஏகனாக இருக்கையில் தன்னை பற்றி குறிப்பிடும் போது பன்மைச் சொல் வடிவில் சுட்டிகாட்டுவது ஏன்?

அகில உலகங்களின் இரட்சகனான அல்லாஹ் தன்னைப் பற்றி குறிப்பிடுகையில் 'நாங்கள்' என்று அல்குர்ஆன் வசனங்களின் பயன்படுத்துவதானது, அவன் மாத்திரமே மேன்மை மற்றும் அழகு ஆகிய பண்புகளில் முழுவைதையும் ஒன்று சேர பெற்றிருப்பதினாலாகும். அரபு மொழியில் இப்பிரயோகம் பலம் -சக்தி- வல்லமை மேன்மை போன்ற அர்த்தத்தைக் காட்டவல்லது. அதே போல் ஆங்கில மொழியில் நாம் என்பது உடமை, சொந்தம், அதிகாரம் போன்ற கருத்தைக் காட்டும். அதாவது பன்மை பிரதிப் பெயரானது உயர் பதவியில் உள்ள நபரை சுட்டிக்காட்ட பயன் படுத்தப்படுகிறது. (உதாரணத்திற்கு அரசர், இளவரசர் அல்லது அதிகாரம் படைத்தவர்) என்றாலும் அல்குர்ஆன் எப்போதும் வணக்கம் வழிபாடு தொடர்பானவற்றில் அல்லாஹ்வின் ஏகத்துவத்தை கடுமையாக வலியுறுத்துவதைக் காணமுடியும்.

படைப்பாளனான அல்லாஹ் மனித இனத்திற்கு இறை விசுவாசம், இறை மறுப்பு விவகாரத்தில் தெரிவுரிமை விருப்பை அளித்தது ஏன்?

அல்லாஹ் கூறுகிறான் :

"சத்தியம் உங்களின் இரட்சகனிடமிருந்தே வந்துள்ளது. ஆகவே விரும்பியவர் நம்பிக்கை கொள்ளட்டும், விரும்பியவர் நிராகரிக்கட்டும் என்று கூறுவீராக". (அல் கஹ்ப் : 29). تقدم

படைப்பாளனான அல்லாஹ்வுக்கு எம்மை அவனுக்கு கட்டுப்பட்டு நடக்கவும், வணங்கிவழிபடவும் நிர்ப்பந்திக்க முடியும். என்றாலும் நிர்ப்பந்தித்தல் மனித படைப்பின் எதிர்பார்க்கப்பட்ட இலக்கை அடைந்துகொள்ள வழிவகுக்காது.

ஆக,தெய்வீக ஞானம், ஆதமை படைத்ததிலும், அறிவால் அவரை தனித்துவப்படுத்துவதிலும் பிரதிபலிக்கிறது.

"இன்னும் அவன் ஆதமுக்கு அனைத்துப்பெயர்களையும் கற்றுக் கொடுத்தான், பின்னர் அவற்றை வானவர்களுக்கு எடுத்துக்காட்டி,' நீங்கள் உண்மையாளரகாக இருப்பின் இவற்றின் பெயர்களை எனக்கறிவியுங்கள் (எனக் கூறினான்)". (அல்பகரா : 31). تقدم

அத்துடன் தெரிவு செய்வதற்கான திறனை அவருக்களித்தான்.

"ஆதமே! நீரும் உம் மனைவியும் இச்சுவர்க்கத்தில் குடியிருங்கள். மேலும், நீங்கள் இருவரும் விரும்பியவாறு தாராளமாக அதிலிருந்து புசியுங்கள். ஆனால் நீங்கள் இருவரும் இம்மரத்தை நெருங்க வேண்டாம். அவ்வாறெனில் நீங்கள் இருவரும் அநியாயக்காரர்களில் ஆகிவிடுவீர்கள்' என்றும் நாம் கூறினோம்".(அல்பகரா: 35). تقدم

தேர்வில் ஒருவருக்கு தவறு, பிழை, பாவம் ஆகியவை ஏதோ வகையில் ஏற்படும் என்பதினால் அவருக்கு தவ்பா மற்றும் பிரயச்சித்தத்திற்கான வாயில்களை திறந்து கொடுத்தான்.

"பின்னர் ஆதம் தனது இரட்சகனிடமிருந்து சில வார்த்தைகளைப் பெற்று அதன் மூலம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். அதனால் அவன் அவரை மன்னித்தான். நிச்சயமாக அவன்தான் மிக்க மன்னிப்பவனாகவும் நிகரற்ற அன்புடையோனுமாவான்". (அல் பகரா : 37). تقدم

அல்லாஹ் ஆதமை இந்தப் பூமியின் கலீபாவாக (தலைமுறையாக) இருக்க வேண்டுமென விரும்பினான்.

"(நபியே) இன்னும் உமது இரட்சகன் வானவர்களிடம் 'நிச்சயமாக பூமியில் நான் ஒரு தலைமுறையை தோற்றுவிக்கப்போகின்றேன்' என்று கூறியபோது: நாம் உம் புகழைத் துதித்துக்கொண்டும், உன்னைத் தூய்மைப்படுத்திக்கொண்டுமிருக்க, அதில் குழப்பத்தை விளைவித்து இரத்தங்களை சிந்துவோரையா தோற்றுவிக்கப்போகின்றாய் ? என்று அவர்கள் கூறினார்கள். அதற்கவன் நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நான் நன்கறிவேன் எனக் கூறினான். (பகரா : 30). تقدم

ஆகவே தெரிவுரிமைக்கான நாட்டம் (விருப்பம்) மற்றும் ஆற்றலானது அதனை சரியான வடிவிலும் முறையிலும் பயன்படுத்தப்பட்டால் உண்மையில் அது ஒரு அருளாக அமைவதுடன் மோசமாகவும் முறைகேடான நோக்கங்கங்களுக்கும் தேவைகளுக்கும் பயன்படுத்தப்பட்டால்; (சாபமாகவும்) மருளாகவும் அமைந்து விடும்.

உண்மையில் மனிதனுக்கு வழங்கப்பட்ட விருப்பும், தெரிவும் அபாயம், சிக்கல், கடும் சவால் மற்றும் உளப்போராட்டம் நிறைந்தவைகளாக உள்ளன. இது போலியான மகிழ்சிக்கு வழிவகுக்கும். அடிமைத்தனத்திலிருந்து காத்து மனிதனுக்கு மிகவும் உயர் அந்தஸ்த்தையும், கண்ணியத்தையும் வழங்கும் என்பதில் எவ்விதச் சந்தேகமுமில்லை.

அல்லாஹ் கூறுகிறான் :

"நம்பிக்கையாளர்களில் உரிய காரணமின்றி (போரில் கலந்து கொள்ளாது) தங்கியிருப்போர்களும், தமது செல்வங்களாலும், தமது உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவோரும் சமமாக மாட்டார்கள். தமது செல்வங்களாலும் தமது உயிர்களாலும் அறப்போர் புரிவோரை (போருக்குச் செல்லாது) தங்கியிருப்போரை விட அல்லாஹ் அந்தஸ்தால் சிறப்பாக்கி வைத்துள்ளான். அனைவருக்கும் அல்லாஹ் நல்லதையே வாக்களித்துள்ளான். இன்னும் (போருக்குச் செல்லாது) தங்கியிருப்போரை விட அறப்போர் புரிவோரை மகத்தான கூலியால் அல்லாஹ் சிறப்பாக்கி வைத்துள்ளான்.(அந்நிஸா : 95). تقدم

வெகுமதியை பெறுவதற்கான தெரிவு எமக்கு இல்லையெனில் கூலி மற்றும் தண்டனையின் பயன் என்ன?

மேற்கண்ட அனைத்தும் உண்மையில், இவ்வுலகில் மனிதனுக்கு இறைவனால் வழங்கப்பட்ட தெரிவுரிமையின் பரப்பானது வரையறுக்கப்பட்டதாகும் என்பதை புரிந்து கொள்ளவதுடனேயே அமைகின்றது. எமக்களித்த தெரிவுச் சுதந்திரத்திற்கு மாத்திரமே அல்லாஹ் எம்மை மறுமையில் விசாரிப்பான். ஆகவே நாம் வளர்ந்த சூழ்நிலைகள் மற்றும் ,சூழல் ஆகியவற்றில் எமக்கான எவ்வித தெரிவும் கிடையாது. இது நாம் எமது பெற்றோரை நாம் எப்படி தெரிவு செய்வில்லையோ, அதே போல் எமது தோற்றங்கள் மற்றும் நிறங்களை தெரிவு செய்வதில்; -வர்ணங்களில்- ஆதிக்கம் செலுத்துவதற்கான எவ்வித அதிகாரத்தையும் நாம் எப்படி பெறவில்லையோ அதனை ஒத்த விடயமாக உள்ளது.