Applicable Translations हिन्दी සිංහල English Español ગુજરાતી عربي

இஸ்லாமிய நாகரீகத்தின் தனித்துவம் :

இஸ்லாமிய நாகரீகம் எவ்வாறு தனித்துவம் பெற்றுள்ளது?

உண்மையில் இஸ்லாமிய நாகரீகமானது படைப்பாளனுடனான உறவை மிகச் சிறப்பான முறையில் பேணுவதுடன், படைப்பாளனுக்கும் படைப்பினங்களுக்கும் இடையிலான உறவையும்; மிகச்சரியான இடத்தில் வைத்துள்ளது. அதே வேளை ஏனைய மனித நாகரீகங்கள் அல்லாஹ்வை நிராகரித்து, நம்பிக்கை மற்றும் வணக்க வழிபாடுகளில் இறைவனின் படைப்பினங்களை அவனுக்கு நிகராக ஆக்கி, இறைவனின் கண்ணியம் மற்றும் புகழுக்கு எவ்விதத்திலும் பொருந்தாத விதத்தில் அவனுடைய அந்தஸ்தை குறைத்து அவனுடன் உறவு பேணுவதில் தவறாக நடந்து கொண்டுள்ளது.

உண்மையான முஸ்லிம் நாகரீகம் மற்றும் நகரமாயக்கல் விஷயங்களுக்கு மத்தியில் குழப்பமடைய மாட்டான். சிந்தனைகள் மற்றும் அறிவியலை கையாளும் முறையை வரையறுப்பதில் நடுநிலை கோட்பாட்டை பின்பற்றுவார். நாகரீகம் மற்றும் பண்பாடு (குடிமை) ஆகியவற்றிற்கிடையில் பின்வருமாறு வேறுபடுத்துவார் :

நாகரீகக் காரணி (கூறு) : இது மத மற்றும் அறிவு, சிந்தனை நடத்தை மற்றும் பண்பாட்டியல் பெருமானங்களை உள்ளடக்கியது.

நகரமயமாக்கள் கூறா (காரணி)னது, அறிவியல் சாதனைகள், பெருட் கண்டுபிடிப்புகள் மற்றும் கைத்தொழில் கண்டுபிடிப்புகள் போன்றவற்றை உள்ளடக்கியது.

ஆகவே ஒரு முஸ்லிம் இந்த அறிவியல் மற்றும் கண்டு பிடிப்புகளிலிந்து அவனின் நம்பிக்கை மற்றும் நடத்தை சார் புரிதல்களின் வரையறைகளுக்கு உட்பட்டு எடுத்துக் கொள்வான்.

கிரேக்க நாகரீகமானது இறையிருப்பை நம்பி ஏற்றுக்கொண்டது. ஆனால் அந்த இறைவனின் ஏகத்துவப் பண்பை ஏற்றுக்கொள்ளாது அந்தக் கடவுளால் எந்தப் பயனோ தீங்கோ கிடையாது என விவரித்தது.

ரோம நாகீகமானது ஆரம்பத்தில் படைப்பாளனை மறுத்து, அது கிறிஸ்துவத்திற்கு மாறியபோது அந்த இறைவனுக்கு இணை கற்பித்து அதன் நம்பிக்கை கோட்பாடுகளினுள் பல தெய்வ வணக்கம் மற்றும் சக்தியின் வெளிப்பாடுகள் போன்ற பிற மதக் கலாச்சாரங்கள் உட்புகுந்தன.

இஸ்லாத்திற்கு முன் பாரசீக நாகரீமானது அல்லாஹ்வை மறுத்து அவனைத் தவிர்த்து சூரியனை வணங்கி நெருப்புக்கு சாஸ்டாங்கம் செய்து அதனை புனிதப்படுத்தும் நிலை காணப்பட்டது.

இந்து நாகரீமானது படைப்பாளனை வணங்குவதை விட்டு படைப்பினங்களை கடவுளாகக் கொண்டு வழிப்பட்டது. இவ்வாறு வழிப்பட்ட கடவுள்கள் பரிசுத்த திரித்துவத்தில் உருவான மூன்று கடவுள்களாகும். அவைகளாவன : சிருஷ்டி கர்த்தாவின் வடிவில் பிரம்மா எனும் கடவுள், காப்பவர் என்ற வடிவில் விஷ்னுக் கடவுளும் அழிப்பவர் என்ற வடிவில் சிவாவும் காணப்படுகின்றனர்.

பௌத்த நாகரீமானது படைப்பாளனான கடவுளை நிராகரித்து, படைப்பான கௌம புத்தரை கடவுளாக மாற்றியது.

ஸாபிஈன் நாகரீகம் இவர்கள் வேதம் கொடுக்கப்பட்டோர், தங்களது இரட்சகனை மறுத்து விட்டு கோல்களையும், நட்சத்திரங்களையும் வணங்கினர். அல் குர்ஆன் குறிப்பிடும் ஓரிறைக் கொள்கையை ஏற்ற முஸ்லிம்களான சில பிரிவினர் இதில் விதிவிலக்கானோர் ஆகும்.

பிர்அவ்னிய நாகரிகமானது, அகெனாட்டனின் ஆட்சியில் ஏகத்துவவம், இறைபரிசுத்தம் போன்றவற்றில் உயரிய நிலையை அடைந்திருந்தது. என்றாலும் கடவுளை சூரியன் மற்றும் ஏனைய உயிரினங்களுக்கு ஒப்பாக்குதல்; மற்றும் உருவகப்படுத்தல் போன்றவற்றை அது கைவிடவில்லை. அவை கடவுளின் அடையாளமாகவும் மாறிவிட்டன. மூஸா நபியின் காலத்தில் பிர்அவன் தனக்கு தெய்வீகத்தன்மை உள்ளதாகவும் தானே சட்டங்களை உருவாக்கும் முதல் அதிகாரம் பெற்றவன் என வாதிட்ட போது இறை நிராகரிப்பு அதன் உச்சக்கட்டத்தை அடைந்தது.

அரேபிய நாகரீமானது படைத்தவனை வழிபடுவதை விட்டு விட்டு சிலைகளை வணங்கியது.

கிறிஸ்தவ நாகரீகமானது இறை ஏகத்துவத்தை முற்றாக மறுத்து கடவுளை இயேசு கிறிஸ்துவுக்கும் மற்றும் அவரின் தாயாருக்கும் நிகராக இணையாக்கி, திரித்துவக் கோட்பாட்டை கட்டமைத்தது. அதாவது மூவரில் பிரதிபலிக்கும் பிதா, குமாரன் பரிசுத்த ஆவி போன்றோர் உள்ளடங்கியுள்ள ஒரிறைக் கொள்கையாகும்.

யூத நாகரிகமானது தனது படைப்பாளனை மறுத்து, தனக்கென தனித்துவமான கடவுளொன்றை தேர்வு செய்து அதனை தமது சமூகத்திற்கு மாத்திரமான ஒரு கடவுளாக மாற்றியது. இந்நாகரீகமானது காளைமாட்டை வணங்கி வழிப்பட்டது. இவர்கள் கடவுளை பொருத்தமற்ற மனிதப்பண்புகளால் தமது நூல்களில் விவரித்துமுள்ளனர்.

முன்னைய நாகரிகங்கள் அழிந்து, யூத மற்றும் கிறிஸ்தவ நாகரீகமானது முதலாலித்துவம் சோஸலிசம் எனும் பெயர்களால் மதமற்ற நாகரீகங்களாக மாறின. கொள்கை ரீதியாகவும், சிந்தனா ரீதியாகவும் கடவுள் மற்றும் வாழ்வு குறித்த இரு நாகரிகங்களினதும் அனுகுமுறைகளுக்கேட்ப, அவை இரண்டும் வளர்ச்சியடையாது பின்தங்கிய நிலையில் உள்ளதுடன், சிவில் மற்றும் அறிவியல் தொழிற்துறை போன்றவற்றில் முன்னேற்றத்தின் உச்சத்தை அவைகள் அடைந்திருப்பினும் மிருகத்தனமும் ஒழுக்கேடும் நிறைந்ததாகவும்; காணப்படுகிறன. நாகரீக முன்னேற்றங்கள் இதனை அளவுகோளாகக் கொண்டு அமைவதில்லை!.

உண்மையில் சிறந்த நாகரீக முன்னேற்றத்தின் அளவுகோலானது, பகுத்தறிவு சான்றுகள் மற்றும் கடவுள், மனிதன், பிரபஞ்சம் மற்றும் வாழ்க்கை பற்றிய சரியான சிந்தனையை அடிப்படையாகக் கொண்டது. சீரிய உயர் நிலை நாகரீகமயமாவது என்பது கடவுள் (அல்லாஹ்) பற்றியும் தனது படைப்பினங்களுடனான அவனது தொடர்பு மற்றும் அவனின் இருப்பிற்கான ஆதாரத்தையும் முடிவையும் அறிந்து கொள்ளவும் சரியான கருத்துக்களின் பால் வழிகாட்டும். மேலும் இந்த உறவை அதற்கே உரிய சரியான இடத்தில் வைக்கும். இந்த வகையில் இந்த நாகரிகங்களுக்கு மத்தியில் தேவையான சமநிலையை இஸ்லாமிய நாகரிகம் மாத்திரம் அடைந்துள்ளதால் அதுவொன்றே முன்னேற்றமடைந்த நாகரிகமாக காணப்படுகிறது என்ற முடிவுக்கு வரமுடிகிறது. (நூல்:அல்லாஹ் குறித்த முதலாளித்துவம் மற்றும் கம்யூனிஸத்தின் தவறான கற்பிதம் : பேராசியர் கலாநிதி காஸி இனாயா). تقدم

இஸ்லாமிய மார்க்கமானது இவ்வுயர் நிலையில் இருக்கையில் முஸ்லிம்களின் நிலை குழப்பகரமானதாகவும், தெளிவற்றதாகவும் இருப்பது ஒரு வகை முரண்பாடல்லவா?

இஸ்லாமிய மார்க்கம் சிறந்த பண்பாடுகளை கடைப்பிடித்து, தீய செயற்பாடுகளை விட்டும் விலகி நடக்குமாறு அழைப்பு விடுக்கிறது. அத்துடன் சில முஸ்லிம்களிடத்தில் காணப்படுகின்ற தவறான நடத்தையானது, அவை அவர்களின் கலாச்சார பழக்கவழக்கங்கள்; அல்லது மார்க்கம் குறித்த அவர்களின் அறியாமை, சரியான மார்க்த்தை விட்டு விலகியிருத்தல் போன்றவைகளால் ஏற்படுகின்றன.

மேற்குறிப்பிட்ட விடயத்தில் எவ்வித முரண்பாடுமில்லை என்பதற்கு பின்வரும் உதாரணத்தை குறிப்பிட முடியும். ஆடம்பரமான உயர்ரக கார் ஒட்னர் ஒருவர் அதனை செலுத்துவதற்கான அடிப்படைகளை கற்காது, அதனை ஒட்டியதானல் மிகப் பயங்கரமான விபத்திற்கு உட்பட்டார் எனில் அது உயர்ரக காரின் தவறு என்று ஒரு போதும் கூறுவதில்லை. அதை முறையாக செலுத்தத் தவறியவரையல்லவா நாம் குற்றம் சுமத்துகிறோம். ஆகவே இதே கண்ணோட்டத்தில் இஸ்லாத்தையும் சில முஸ்லிம்களின் நடத்தையும் நாம் அனுகினால் அது முரண்பாடாக அமையமாட்டாது!