தடை செய்யப்பட்ட மரத்தின் கணியை சாப்பிட்டதின் காரணமாக மனித குலத் தந்தை ஆதத்தின் தவ்பாவை ஏற்றுக்கொண்டதன் மூலம் மனிதனுக்கு மிகப்பெரும் பாடத்தைக் கற்றுத்தருகிறான். அதுதான் மனித குலத்தின் இரட்சகன் அல்லாஹ் மனிதர்களுக்கு வழங்கிய முதல் மன்னிப்பாகும். ஒருவரின் பாவத்தை -குற்றத்தை- இன்னொருவர் சுமக்க மாட்டார் என்ற அடிப்படையில் கிறிஸ்துவர்கள் நம்பிக்கொண்டிருக்கும் ஆதமிடமிருந்து அனந்தரமாக பெற்ற பாவம் என்ற நம்பிக்கைக்கு எந்த அர்த்தமும் கிடையாது. ஆகவே ஒவ்வொரு மனிதரும் அவரவர் பாவத்தையே சுமக்கிறார். இது இறைவன் எம்மீது செய்த கருணையாகும். அதாவது மனிதன் எவ்விதக்குற்றமும் பாவமுமின்றி தூய்மையாகவே பிறக்கிறான். அவன் பருவ வயதை அடைந்ததிலிருந்தே அவனின் செயலுக்கு வகைகூறுபவனாக மாறுகிறான்.
ஒரு மனிதன் அவன் செய்யாத குற்றத்திற்கு விசாரிக்கப்படவும் மாட்டான். அதே போல் இறைவிசுவாசம் மற்றும் நற்செயல் இன்றி ஒரு போதும் வெற்றியடையவும் முடியாது. அல்லாஹ் மனிதனுக்கு உயிரை -வாழ்க்கை- கொடுத்து, அவனை சோதிப்பதற்காகவும், பரீட்சிக்கவும் வேண்டி விருப்பத்தை- நாட்டத்தை வழங்கினான். எனவே அவனின் நடவடிக்கைகளுக்கு அவன் மாத்திரமே பொறுப்புக்கூறக் கூற வேண்டியவனாக உள்ளான்.
அல்லாஹ் கூறுகிறான் :
''எந்த ஒர் ஆன்மாவும் மற்றதன் பாவச் சுமையை சுமக்காது, பின்னர் உங்கள் மீளுதல் உங்கள் இரட்சகனிடமே உள்ளது. அப்போது நீங்கள் முரண்பட்டுக் கொண்டிருந்தவைப் பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான். (அஸ்ஸுமர்:7). تقدم
மேலும் பழைய ஏற்பாட்டில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது :
"குழந்தைகளுக்காக பெற்றோர் கொல்லப்படமாட்டார்கள், பெற்றோர்களுக்காக குழந்தைகள் கொல்லப்படமாட்டார்கள், ஒவ்வொருவரும் அவரவர் பாவத்திற்காக -குற்றத்திற்காக- வே கொல்லப்படுவார்". (உபாகமம் : 24:16). تقدم
மன்னிப்பு நீதியுடன் முரண்படமாட்டாது. அதே போல் நீதியானது மன்னிப்பையும் கருணையையும் தடுத்திடவுமாட்டாது.
சிருஷ்டிகர்த்தாவான இறைவன் நித்திய ஜீவன், எல்லாவற்றையும் நிர்வகிப்பவன், எவ்விதத் தேவையுமற்றவன், சக்கியுள்ளவன். இவ்வாறான பண்புகளைப் பெற்றவனுக்கு, கிறிஸ்தவர்கள் நம்பிக் கொண்டிருப்பது போல் மனிதர்களுக்காக இயசுவின் தோற்றத்தில் ஒருவரை பிரதிபலிக்கச் செய்து அவரை சிலுவையில் அறைந்து மரணிக்கச் செய்யவேண்டும் என்ற எந்தத் தேவையும் அவனுக்குக் கிடையாது. அவனே உயிரைக் கொடுக்கிறான், மேலும் அதனை பரிக்கவும் செய்கிறான், இதனால் அவன் ஒரு போதும் மரணிப்பதில்லை. அதே போன்று மீண்டும் உயிர்த்தெழுவதுமில்லை. அவனின் தூரதர்களான இப்ராஹீமை நெருப்புக் குண்டத்திலிருந்தும், மூஸாவை பிர்அவ்ன் மற்றும் அவனின் படைகளிடமிருந்து காப்பாற்றியது போல் அவனின் தூதரான இயேசுவையும் கொலை மற்றும் சிலுவையில் அறையப் படுவதிலிருந்து அவனே காப்பாற்றினான். இவ்வாறே அல்லாஹ் தனது நல்லடியார்களை எப்போதும் பாதுகாத்த வண்ணம் உள்ளான்.
அல்லாஹ் கூறுகிறான் :
"மேலும், ‘‘அல்லாஹ்வுடைய தூதர், மர்யமுடைய மகன் ஈஸா மஸீஹை நிச்சயமாக நாம் (சிலுவையில் அறைந்து) கொலை செய்துவிட்டோம்'' என்று அவர்கள் கூறியதனாலும், (அவர்களைச் சபித்தோம்). அவரை அவர்கள் கொலை செய்யவும் இல்லை. அவரை அவர்கள் சிலுவையில் அறையவும் இல்லை. (அவர் இருந்த அறைக்குள் அவரைத் தேடிச் சென்றவன் அவரைப்போல் ஆக்கப்பட்டு விட்டான். தேடிச்சென்ற மற்றவர்கள் அவனையே சிலுவையில் அறைந்தனர். இதனால்) அவர்கள் சந்தேகத்திற்கு உள்ளாக்கப்பட்டு விட்டனர். ஆகவே, எவர்கள் இதற்கு மாறான அபிப்பிராயம் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் வீண் சந்தேகத்திலேயே ஆழ்ந்துவிட்டனர். வீண் சந்தேகத்தைப் பின்பற்றுவதைத் தவிர அதில் அவர்களுக்கு உண்மையான ஞான (ஆதார)ம் கிடையாது. நிச்சயமாக அவர்கள் அவரைக் கொலை செய்யவே இல்லை". எனினும், அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக்கொண்டான். அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவனாக, ஞானமுடையவனாக இருக்கிறான்". (அந்நிஸா : 157-158) . تقدم
ஒரு முஸ்லிம் கணவர் தனது கிறிஸ்தவ அல்லது யூத மனைவியையும் அவளின் வேதத்தையும், அவளின் தூதரையும் மதித்து நடப்பார். இதன் மூலமே அவரின் இறைவிசுவாசம் உறுதிப் படுத்தப்படுகிறது. மேலும் தனது மனைவி மார்க்கக்கிரிகைகளை செய்வதற்கான சுதந்திரத்தையும் வழங்குவார். ஆனால் இதற்கு மாற்றமாக ஒரு முஸ்லிம் பெண் இவ்வாறு நடந்து கொள்வது இஸ்லாத்தில் அங்கீகரிக்கப்பட்டதல்ல. மாறாக எப்போது ஒரு கிறிஸ்தவர் அல்லது யூதர் அல்லாஹ்வைத் தவிர உண்மையாக வணங்கப்படக்கூடியவன் வேறுயாறும் கிடையாது என்றும் முஹம்மத் அல்லாஹ்வின் தூதர் என்றும் நம்பி ஏற்றுக் கொள்கிறாரோ அவருக்கு நாம் எமது பெண்மக்களை திருமணம் முடித்துக் கொடுப்போம்.
இஸ்லாம் என்பது நம்பிக்கைக் கோட்பாட்டிற்கான மேலதிக அம்சமும், முழுமை பெறுவதற்கான ஒரு அடிப்படையாகும். உதாரணமாக, ஒரு முஸ்லிம் கிறிஸ்தவத்தைத் தழுவ விரும்பினால், அவர் முஹம்மது மற்றும் அல் குர்ஆன் மீதான நம்பிக்கையைத் துறக்க வேண்டும். மேலும் அவர் திரித்துவத்தை நம்பி, பாதிரியார்கள் மற்றும் மதகுருமார்கள் இவர்கள் அல்லாதோரை நாடுவதன் மூலம் பிரபஞ்சத்தின் இறைவனுடனான நேரடி உறவை இழந்து விடுகிறார். அவர் யூத மதத்தைத் தழுவ விரும்பினால், இயேசுவின் மீதும் சரியான இன்ஜீலின் மீதான தனது நம்பிக்கையைத் துறக்க வேண்டும். இருப்பினும் யூத மதத்திற்கு மாறுவது அவ்வளவு சுலபமான காரியமல்ல, காரணம் அது ஒரு தேசிய தனி மதமாகும், உலகலாவிய மதம் அல்ல என்பது அதன் தேசிய அடிப்படைவாதத்தின் மூலம் மிகத் தெளிவாகத் தெரிகிறது.