Applicable Translations English Español ગુજરાતી हिन्दी සිංහල 中文 Русский عربي

அரசிலிருந்து மதம் பிரிக்கப்பட்டு, மேற்கத்திய நாடுகளில் போன்று அதிகாரபீடங்கள் மனித சிந்தனைக்கு அமைவாக ஏன் இருக்கக்கூடாது?

மேற்கத்திய அனுபவமானது, மத்திய காலத்தில் தேவாலயமும் அரசும் சேர்ந்து மக்களின் வளங்களை சுரண்டி அவர்களின் அறிவியலுக்கு எதிராக செயற்பட்டபோது அதற்கு எதிர்வினையாகும் முகமாக வெளிப்பட்ட ஒரு நிகழ்வாக உள்ளது. இஸ்லாமிய கோட்பாட்டின் நடைமுறையும் சீரிய தன்மையும் காரணமாக இஸ்லாமிய உலகானது இவ்வாறான சிக்கலை ஒரு போதும் எதிர்கொள்ளவில்லை.

உண்மையில் எமக்கு மனித வாழ்வின் எல்லா நிலைகளுடனும் பொருந்திப்போகும் உறுதியான இறை சட்டத்தின் தேவையே காணப்படுகிறது. வட்டி, ஓரினச்சேர்க்கை போன்றவற்றை ஹலாலாக்கும் நிலையிலுள்ள மனித இச்சைககள், அவனின் விருப்பு வெறுப்புகளையும் எதிர்பார்ப்புகளையும் அடிப்படையாகக் கொண்ட அதிகார சட்டபீடங்களின் தேவை எமக்கில்லை. அதே போல் முதலாளித்துவக் கோட்பாட்டில் காணப்படுவது போல் பெரும் பலசாலிகள் மூலம் பலவீனர்களுக்கு சுமையை ஏற்படுத்தும் விதத்தில் எழுதப்பட்ட சட்ட ஏற்பாடுகளிலோ, தனிமனித சொத்துரிமையை தடுத்து, மனித இயல்பூக்கத்துடன் முரண்படும் விதத்தில் அமைந்த பொதுவுடமை கோட்பாடுகளிலோ எந்தத் தேவையும் கிடையாது.

இஸ்லாம் ஜனநாயகத்தை அங்கீகரிக்கிறதா?

ஒரு முஸ்லிமிடம் ஜனநாயகத்தைவிடவும் அதி சிறந்த ஷுரா அமைப்பொன்றுள்ளது.

ஜனநாயகம் என்பது உமது குடும்பம் தொடர்பான தீர்க்கமான முடிவொன்றை எட்டுவதற்கு குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களில் முன்பள்ளி குழந்தை முதல் அனுபவசாலியான தாத்தாவரை அவர்களின் அனுபவம் வயது, அறிவு ஆகியவற்றை கருத்திற் கொள்ளாது அவர்களின் கருத்தைப் பெறுவதைக் குறிக்கும். அதாவது முடிவெடுப்பதில் அவர்களின் கருத்துக்களை சரிசமமாக கருத்திற் கொள்வதைக் குறிக்கும்.

ஷூரா என்பது குறித்த விடயம் பொருத்தமானதா இல்லையா என்பதை தீர்மானிக்க வயதிலும், அந்தஸ்திலும் உயர்ந்தவர்களிடமும் அனுபவ சாலிகளிடத்திலும் ஆலோசனை பெறுதலைக் குறிக்கும்.

மேற்குறிப்பிட்ட இரண்டு கோட்பாடுகளுக்கிடையிலான வேறுபாடு மிகவும் தெளிவானதாகும். ஜனநாயகத்தில் காணப்படும் மிகப்பெரும் கோளாறுகளில் ஒன்றாக, உள்ளுணர்வு, மதம், பழக்க வழக்கங்கள் மற்றும் மரபுகளுக்கு முரணாகக் காணப்படும ஓரினச்சேர்க்கை, வட்டி மற்றும் ஏனைய அருவருப்பான செயற்பாடுகளுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு கிடைக்கப்பெற்றமையினால் சில நாடுகள் இவைகளுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் அளித்துள்ளதை குறிப்பிட முடியும். இந்த வகையில் பெரும்பான்மை வாக்குகள் மூலம் ஒழுக்கச் சீர்கேட்டிற்கு அழைப்புவிடுக்கும் ஜனநாயகம் ஒழுக்கக்கேடான சமூக அமைப்பை உருவாக்க பெரிதும் பங்களித்துள்ளது.

இஸ்லாமிய ஷூராவிற்கும் மேற்கத்திய ஜனநாயகத்திற்குமிடையிலான வேறுபாடு, அடிப்படையில் சட்டமியற்றும் அதிகாரத்துடன் தொடர்பான விடயமாகும். ஜனநாயகம் சட்டமியற்றும் அதிகாரத்தை (சட்ட இறையாண்மையை) குடிமக்களுக்கும் சமூகத்திற்கும் உரியதானதாக ஆக்கியுள்ளது. ஆனால் இஸ்லாமிய ஷூராவானது சட்டமியற்றும் அதிகாரத்தை முதலில் இறைசட்டத்திற்கே வழங்கியுள்ளது, ஆகவே இதுவே ஷரீஆ சட்டமாக இருப்பதால் மனிதனால் உருவாக்கப்பட்ட சட்டங்களுக்கு அங்கு இடமில்லை. ஆக சட்டம் இயற்றுவதில் இறைசட்டத்தின் மீது அதனை அடிப்படையாக் கொண்டு கட்டமைக்கும் அதிகாரத்தை தவிர வேறு எந்த அதிகாரமும் வழங்கப்படுவதில்லை. அதே போல் இறைசட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்படாத விடயங்களில் -இஜ்திஹாத்- செய்யும் அதிகாரத்தை வழங்கியுள்ளது. இவையெல்லாம் மனித அதிகாரமானது ஹலால் மற்றும் ஹராம் என்ற வட்டவரைக்குள் இருந்து செயற்படுவதற்காகும். (-இஜ்திஹாத்- என்பது : அல் குர்ஆன், ஸுன்னாவில் நேரடியாகத் தீர்வு காணப்படாத ஒரு பிரச்சினைக்கு ஓர் இஸ்லாமிய சட்டவறிஞர் ஷரீஆ மூலாதாரங்களையும், சட்டவாக்க வழிமுறைகளையும் பின்பற்றி தீர்வு காண முற்படுதல் இஜ்திஹாத் எனப்படும்).

இஸ்லாமிய சட்டமானது பகுத்தறிவிற்கு முரண்படாத மிகவும் தனித்துவமான ஒரு சட்ட ஏற்படாகும். அவ்வாறாயின் குற்றவியல் சட்டங்கள் ஏன்? அவற்றிற்கான தேவை என்ன?

குற்றவியல் தண்டனையானது இந்தப்பூமியில் குழப்பம் விளைவிக்க நாடி அட்டகாசங்கள் புரிவோரைத் தண்டித்து அவர்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தவே இயற்றப் பட்டுள்ளது. ஆனால் இந்தத் தண்டனைகள் பல்வேறு சூழ்நிலைகளின் போது ரத்துச் செய்யப்பட்டதாக மாறிவிடுகிறது. தவறாக ஒருவரைக் கொல்லுதல், பசி மற்றும் பட்டினியின் காரணமாக களவெடுத்தல் போன்றன தண்டனை ரத்துச் செய்யப்பட்டதாக மாறும் சில நிலைகளாகும். அதே போன்று குழந்தை, புத்திபேதலித்தோர், மனநோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கும் தண்டனைகள் அமுல்படுத்தப் படமாட்டாது. இக்குற்றவியல் தண்டனைகள் யாவும் அடிப்படையில் சமூகத்தை பாதுகாப்பதற்கேயாகும். இத்தண்டனைகள் மிகவும் கடுமையானதாக இருப்பது சமூகத்தைப் பாதுகாக்கும் உண்ணத நலனோடு தொடர்பானதாகும். எனவே இஸ்லாமிய சமூகத்தின் ஒவ்வொரு உறுப்பினர்களும் இதுகுறித்து மகிழ்ச்சியடைய வேண்டும். இவ்வாறான தண்டனைகள் இருப்பது மனிதர்களுக்கான மிகப்பெரும் அருளாகும். இதன் மூலமே அவர்களுக்கு பாதுகாப்புக் கிடைக்கிறது. இந்த குற்றவியல் தண்டனைகளை தங்களது உயிர்களுக்குப் ஆபத்து வந்து விடும் என்ற பயத்தில் குற்றவாளிகளும், கொள்ளையர்களும், குழப்பக்காரர்களுமே குறுக்கீடு செய்து எதிர்க்கின்றனர். மரண தண்டனை போன்ற இஸ்லாமிய தண்டனைகளுள் பல மனிதனால் இயற்றப்பட்ட சட்டங்களிலும் காண்படுகின்றன.

இந்தத் தண்டனைகளைக் குறைகூறுவோர் குற்றவாளியின் நலனைக் கருத்திற்கொண்டு சமூக நலனை மறந்துவிடுகின்றனர். குற்றவாளியின் மீது அனுதாபப்படும் அவர்கள் பாதிக்கப்பட்டவரை மறந்து விடுகின்றனர். தண்டனை அதிகம் எனக்கருதுகின்றனர். குற்றச்செயலின் கொடூரம் குறித்து அலட்சியமாக இருந்து விடுகின்றனர்.

உண்மையில் அவர்கள் தண்டனையை குற்றத்துடன் ஒப்பிடுசெய்து பார்ப்பார்களேயானால் இஸ்லாமிய தண்டணைகளின் நீதியையும் அவை குற்றச்செயல்களுக்கு சமாந்திரமாக இருப்பதையும் அவர்கள் ஏற்றுக்கொள்வர். இதனை மேலும் தெளிவு படுத்திட ஒரு கள்வனின் செயலை உதாரணமாகக் கொள்வோம். அவன் மாறுவேடம் பூண்டு இருளில் சென்று, பூட்டை உடைத்து, ஆயுதத்தைக் காட்டி மிரட்டி, வீட்டிலிருக்கும் அப்பாவிகளை பயமுறுத்தி, வீடுகளின் புனிதத்தை மீறி, உள்ளே நுழைந்து தன்னை எதிர்ப்பவர்களை கொன்று விடுவதாகவும் கூறுகின்றான். இவ்வாறான ஒரு கள்வனின் நிலையை சற்று மனக்கண்முன் கொண்டுவந்தால் இதன் அபாயத்தை சற்று புரிந்து கொள்ள முடியும். அதிகமான சந்தர்ப்பங்களில் திருடன் தனது திருட்டை முடிக்கவும் அல்லது அதன் விளைவுகளிலிருந்து தப்பித்துக் கொள்ளவும் பயன்படுத்தும் ஒரு வழிமுறையாகவே கொலை அடிக்கடி நிகழ்கிறது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் எவ்வித வேறுபாடுமின்றி தனக்கு முன்னிருப்பவர்களை கொலை செய்துவிடுகிறான். இந்தத் திருடனின் செயலை சிந்திக்கும் போது இஸ்லாம் விதித்திருக்கும் கடுமையான தண்டனைகளின் உயர் நோக்கத்தை எம்மால் உணர முடிகிறது.

ஏனைய இஸ்லாமிய தண்டனைகளின் நிலையும் இவ்வாறே காணப்படுகிறது. ஆகவே நாம் குறிப்பிட்ட குற்றங்கள் குறித்தும் அதில் காணப்படுகின்ற அபாயங்கள், தீங்குகள், அநியாயம் அத்துமீறல் போன்றவற்றை நாம் எமது மனக்கண்முன் கொண்டு வரல் வேண்டும். அவ்வாறு நாம் சிந்திக்கும் போது அல்லாஹ் ஒவ்வொரு குற்றத்திற்குமுரிய பொருத்தமான தண்டனைகளை விதித்துள்ளதை உறுதியாக ஏற்றுக்கொள்ள முடியும். அத்துடன் அவன் ஒவ்வொரு வினைக்கும் அதற்குரிய வெகுமதியை வழங்கியுள்ளான். செயலுக்கேற்ற கூலியையே வைத்துள்ளான்.

அல்லாஹ் கூறுகிறான் :

"உமது இரட்சகன் எவருக்கும் அநியாயம் இழைக்கமாட்டான்" (ஸூறதுல் கஹ்ப் : 49). تقدم

இஸ்லாம், கடுமையான தண்டனைகளை விதிப்பதற்கு அல்லது- தீர்மானிக்க முன், குற்றவாளிகளை அவர்கள் செய்த குற்றத்திலிருந்து விலக்கி வைக்க, போதிய பயிற்சிகளையும் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளையும் முன்வைத்துள்ளது. இவ்வாறான பயிற்சிகளையும் பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றுவது அவரவர் உள்ளத்தைப் பொருத்ததாகும். குற்றம் செய்த நபர் எவ்வித நியாயமான காரணமோ, எவ்வித நிர்ப்பந்தத்திற்கு உட்படாத வகையில் சந்தேகமின்றி அக்குற்றத்தை செய்தார் என அவர் உத்தரவாதமளிக்கும் வரையில் இஸ்லாம் எந்தத் தண்டனையையும் அவருக்கு விதிக்க மாட்டாது. இவ்வாறான நியாமான காரணங்களுக்கு அப்பால் குறித்த நபர் குற்றம் செய்தால் அது அவரது ஒழுங்கீனம் மற்றும் முறைகேடான செயற்பாட்டடிற்கு சான்றாக அமைந்து விடுவதால் கடுமையான தண்டனைக்கு உரித்தவராக மாறிவிடுகிறார்.

இஸ்லாம் செல்வத்தை நியாயமாகப் பகிர்ந்தளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் பணக்காரர்களின் செல்வங்களில் ஏழைகளுக்கு என குறிப்பிட்ட ஒரு பகுதியை ஒதுக்கியுள்ளது. மேலும் மனைவி மற்றும் நெருங்கிய உறவுகளுக்காக செலவு செய்வதை வலியுறுத்தியுள்ளதுடன் அது ஒரு கடமை என்று குறிப்பிட்டுள்ளதுடன், விருந்தாளியை கௌரப்படுத்தி உபசரிக்குமாறும், அண்டைவீட்டாருக்கு உபகாரம் செய்யுமாறும் உத்தரவு பிறப்பித்துள்ளது. குடிமக்கள் கௌரமாகவும் சிறப்பகாவும் வாழ்வதற்கு தேவையான அத்தியவசியமான உணவு, உடை, உறையுள் மற்றும் பிற தேவைகளை குடிமக்களில் ஒவ்வொரு தனிமனிதனும் பெற்றுக்கொள்ள கூடிய வகையில் முழுமையான முன்னேற்பாடுகளை செய்து அவர்களின் கண்ணியமான வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கும் பொறுப்பை இஸ்லாம் அரசுக்குரிய கடமையாக ஆக்கியுள்ளது. மேலும், குடிமக்களில் திறமையானதோர் சிறப்பான வேலை வாய்ப்புகளை பெற்றுக்கொள்வதற்கும், ஒவ்வொரு தனிநபரும் தங்கள் திறமைக்கு ஏற்றவாறு வேலை செய்வதற்குமான சம வாய்ப்புக்களை அனைவருக்கும் பெற்றுக்கொள்வதற்கான உத்தரவாதத்தை அளிக்கிறது.

ஒரு நபர் வீடு திரும்பியதும், கொள்ளை அல்லது பழிவாங்கும் நோக்கத்துடன் யாரோ ஒருவரால் அவரது குடும்ப உறுப்பினர்கள் கொல்லப்பட்டதைக் காண்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அதிகாரிகள் வந்து குற்றவாளியை கைது செய்து, குற்றவாளிக்கு ஒரு குறிப்பிட்ட காலம் சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது. விதிக்கப்பட்ட சிறை தண்டனைகக் காலம் நீண்டதாகவோ, குறுகியதாக இருப்பினும் அக்காலப்பகுதியில் குற்றவாளி உணவை உட்கொள்வதோடு, சிறையில் வழங்கப்படும் சேவைகளிலிருந்து பயனடைவார், இவ்வாறான சேவைகளை குற்றவாளி பெறுவதற்கான நிதிகளை பாதிக்கப்பட்ட அந்நபரும் வரி செலுத்தலின் மூலம் இதற்கு பங்களிப்புச் செய்கிறார் என்றால்,

குற்றவாளி பாதுகாப்பாக இவ்வாறு இருக்கும் நிலையில் இத்தருணத்தில் பாதிக்கப்பட்டவனின் எதிர்வினை எவ்வாறு இருக்கும்? அவன் இந்தத் துன்பத்தினால் பைத்தியம் போன்ற நிலைக்கோ அல்லது இந்த கோர சம்பவத்தினால் ஏற்பட்ட வலிகளை மறக்க போதைக்கு அடிமையாகி தனது உயிரை துறக்கும் நிலைக்கு கொண்டு போய்சேர்த்துவிடலாம்!. ஆனால் இதே நிலை இஸ்லாமிய ஷரீஆ அமுல்படுத்தப்படும் ஒரு இஸ்லாமிய நாடாக இருப்பின் அரச அதிகாரிகளின் நடவடிக்கை வித்தியாசமாக அமையும். அவர்கள் கைது செய்த அக்குற்றவாளிக்கான தண்டனையை தீர்மானிப்பதற்காக அவனை பாதிக்கப்பட்ட குடும்பத்தின் முன் நிறுத்தி, உண்மையில் நீதி என்ற அடிப்படையில் அவனைப் பலிதீர்க்கவோ, அல்லது உயிருக்குப் பதிலீடாக இழப்பீடு தீர்மானம் மேற்கொள்வதற்கு அவர்களுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்படும், அல்லது மன்னிப்பே மிகவும் சிறப்பானது என்ற அடிப்படையில் அவனை மன்னிப்பதற்கான கோரிக்கை முன்வைக்கப்படும். இவ்வாறான நடவடிக்கைளால் பாதிப்புக்குள்ளானவன் தனக்கு நீதி கிடைத்து அவன் மன நிம்மதி பெற வேண்டும் என்று இஸ்லாம் விரும்புகிறது.

அல்லாஹ் கூறுகிறான் :

''நீங்கள் சகித்து பொருட்படுத்தாது மன்னித்தும் விட்டால் நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன் நிகரற்ற அன்புடையவன்". (அத்தகாபுன்: வசனம் : 14). تقدم

இஸ்லாமிய சட்டத்தை ஆய்வு செய்யும் ஒவ்வொருவரும் இஸ்லாமிய குற்றவியல் தண்டனைகள் (ஹுதூத்) வெறுமனே பழிவாங்கும் நடவடிக்கையாக இருப்பதை விடவும் அல்லது குற்றம் நிகழ்ந்தவுடன் ஆர்வக்கோளாரினால் உடனே இந்தத் தண்டனைகளைச் அமுல்ப்படுத்த வேண்டும் என்பதை விடவும் தற்காப்பு –தடுப்பு- மற்றும் சமூகத்தை ஒழுங்குபடுத்தி பயிற்விப்பதற்கான அடிப்படையாக இத்தண்டனைகள் அமைந்திருப்பதை புரிந்து கொள்வர். உதாரணத்திற்கு

தண்டனைகளை நிறைவேற்ற முன் குறித்த குற்றத்தை உறுதிப்படுத்தும் விடயத்தில் நிதானத்துடனும், மிக எச்சரிக்கையுடனும் நடந்து கொள்வதுடன் சந்தேகங்களை தவிர்ப்பதற்கு நியாயமான காரணங்களை தேடுவதும் அவசியமாகும். இது குறித்து அல்லாஹ்வின் தூதர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள் : 'தண்டனைகளில் சந்தேகங்களை தவிர்ந்து கொள்ளுங்கள்' குறிப்பு : அதவாது தண்டிக்க முன் குற்றம் எவ்வித சந்தேகத்திற்கிடமின்றி தெளிவாக உறுதிப்படுத்திட வேண்டும் என்று வழிகாட்டுவது நிரபராதி ஒருபோதும் தண்டனைக்குள்ளாகி விடலாகாது என்று இதன் மூலம் வழிகாட்டுகிறார்கள். உதாரணத்திற்கு:

யாரேனும் ஒரு தவறைச் செய்து, அதை அல்லாஹ் மறைத்து, அவர்கள் தங்கள் பாவத்தை மற்றவர்களுக்கு வெளிப்படுத்தாமல் இருந்தால், அவருக்கு தண்டனை நிறைவேற்றப் படமாட்டாது. இஸ்லாம் மக்களின் குறைகளை தேடுவதையோ, அவர்களின் தனிப்பட்ட விடயங்களை உளவு பார்ப்பதையோ ஊக்குவிக்கவில்லை.

பாதிக்கப்பட்டவரின் மன்னிப்பு தண்டனையை தடுத்து விடும். இது குறித்து அல்குர் ஆன் பின்வருமாறு குறிப்பிடுகிறது.

''கொலை செய்தவனுக்கு கொல்லப்பட்டவனின் வாரிசாகிய அவனின் இஸ்லாமியச் சகோதரன் மூலம் அவனுக்கு ஏதேனும் மன்னிப்பு வழங்கப்பட்டால் நல்ல முறையாக நடந்து கொள்ளல் வேண்டும். கொலையாளி நஷ்டஈட்டை அழகிய முறையில் அவனிடம் ஒப்படைக்க வேண்டும். இது உங்கள் இரட்சகனிடமிருந்து வழங்கப்பட்ட சலுகைiயும் அருளுமாகும்". (அல் பகரா:178). تقدم

தண்டனையை பெருவதற்கான நிபந்தனைகளில் ஒன்றாக குற்றவாளி அக்குற்றத்தை நிர்ப்பந்தத்தில் அல்லாது சுயவிருப்பத்துடன் செய்திருத்தல் வேண்டும். நிர்ப்பந்தத்தில் குற்றம் புரிந்தோனுக்கு தண்டனை விதிக்கப்படமாட்டாது. அல்லாஹ்வின் தூதர் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்:

'தவறு, மறதி மற்றும் நிர்ப்பந்தம் போன்றவைகளினால் நிகழும் குற்றங்கள் யாவும் எனது சமூகத்தினருக்கு மன்னிக்கப்படும்'. (ஆதாரபூர்வமான ஹதீஸ்). تقدم

கொலைக்கான மரண தண்டனை, (திருமனமானபின்னரான) விபச்சாரறிக்கு கல்லெறிதல், திருட்டுக்கு கை துண்டித்தல் மற்றும் பிற தண்டணைகள் யாவும் கொடூரமான அல்லது காட்டுமிராண்டித்தனமானது என (சிலர் நம்பிக்கொண்டிருப்பது போல்) சிலரால் வர்ணிக்கப்படுகிறது. ஆனால் இஸ்லாமிய சட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட தண்டனைகளின் தீவிரத்தன்மையின் பின்னணியில் உள்ள உயர்ந்த ஞானம் -நோக்கம் யாதெனில் மேற்குறிப்பிடப்பட்ட இந்தக் குற்றங்கள் யாவும் இஸ்லாத்தில் மிக அடிப்படையான மற்றும் கொடூரமான குற்றங்களாகக் கருதப்படுகிறது. இவைகள் ஒவ்வொன்றும் ஐந்து முக்கிய மனித அடிப்படை நலன்களான (மதம், உயிர், பரம்பரை, செல்வம் மற்றும் அறிவு) ஆகியவற்றிற்கு எதிரான அத்துமீரலாகும். இந்த அடிப்படை நலன்கள் இல்லாது வாழ்க்கை சீராக முடியாது என்பதால், வரலாற்றில் உள்ள அனைத்து சட்ட அமைப்புகளும், சட்டங்களும் ஒருமித்து இந்த நலன்களைப் பாதுகாத்தல் மற்றும் பாதுகாப்பதன் அவசியத்தை ஏற்றுக் கொண்டுள்ளன.

இதன் காரணமாவே மேற்குறிப்பிட்ட நலன்களுக்கு எதிராக அத்துமீறுவோருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படுகிறது. ஆக இவ்வாறான தண்டனைகள்தான் குற்றவாளியையும் பிறரையும் இவ்வாறான குற்றங்களிலிருந்து தடுக்கும்.

ஆகவே இவ்வாறான தண்டனைச் சட்டங்கள் அமுல்படுத்தப்பட இஸ்லாமிய கோட்பாடு முழுமையாக கடைப் பிடிக்கப்படுதல் அவசியம். பொருளாதாரம் மற்றும் சமூகவியல் தொடர்பான இஸ்லாமிய போதனைகளை கருத்திற்கொள்ளாது இஸ்லாமிய தண்டனைகளை அமுல்படுத்திட முடியாது. மார்க்கத்தின் உண்மையான போதனைகளிருந்து விலகி நடப்பதானது சிலரை இவ்வாறான மாபாதகக் குற்றச்செயல்களை செய்வதற்கு தூண்டுகிறது. இஸ்லாமிய ஷரீஆ சட்டங்கள் அமுல்படுத்தப்படாத அதிகமான நாடுகளில் மிகப்பெரும் இக்குற்றச்செயல்கள் புயல் போன்று எல்லா இடங்களிலும் பரவிச்சென்றுகொண்டிருக்கிறது. இந்த நாடுகள் விஞ்ஞான மற்றும் தொழிநுட்பத்தில் உச்ச நிலை அடைந்து, நிறைவான வளங்கள் மற்றும் திறன்களை பெற்றிருந்தும் இந்நிலை காணப்படுகிறது.

அல்குர்ஆன் 6348 வசனங்களை கொண்டுள்ளது. இவற்றுள் குற்றவியல் தண்டனைகள் தொடர்பான வசனங்கள் (10)பத்தை விடக் குறைவானது. இவ்வசனங்கள் யாவும் நுணுக்கமானவனும், ஞானமிக்கோனுமாகிய அல்லாஹ்வினால் மிக உயரிய நோக்கத்துடன் குறிப்பிடப்பட்டுள்ளன. முஸ்லிமல்லாத பலர் இந்த தனித்துவமான வழிமுறையைப் படித்து மகிழும் வாய்ப்பை, பத்து வசனங்களுக்குப் பின்னால் உள்ள ஞானத்தையும் உயரிய நோக்கத்தையும் அறியாத காரணத்தால் இழக்கின்றனரா?!