உயிரை கொடையாய் அளித்தவன், உயிரைப்பெற்றவனிடம் அதனை அழித்துக்கொள்ளவும் எந்தக்குற்றமுமின்றி உள்ள அப்பாவிகளின் உயிர்களை துவம்சம் செய்யவும் உத்தரவு பிரப்பிப்பது தர்க்கரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும். உயிரை கொடையாய் அளித்த வல்லோன் இவ்வாறு கூறுகிறான்: ''உங்களின் உயிர்களை நீங்களே மாய்த்துக்கொள்ள வேண்டாம்''. (அந்நிஸா:29). - இவ்வசனமும் இதுபோன்ற அதிகமான வசனங்களும் மதத்திற்கோ அதன் நோக்கங்களுக்கோ தொடர்பில்லாத குழுக்களின் நலனுக்காக, புனிதங்களை மீறாமல், ஒருவரின் உயிரைப் பணயம் வைக்காமல் அல்லது அழிவுக்கு உட்படுத்திக் கொள்ளாமல், பழிவாங்குதல் அல்லது அத்துமீறலைத் தடுத்தல் போன்ற நியாயமான காரணங்களுக்காக அன்றி ஒரு உயிரைக் கொல்வதை தடைசெய்கிறது. இதுவே இந்த மகத்தான மார்க்கத்தின் உயரிய நெறிமுறையாகும். ஹுருல்ஈன் பெண்களை அடைந்துகௌ்ளல் எனும் குறுகிய நோக்கத்திற்காக மாத்திரம் சுவர்க்கம் நிறுவப்பட வில்லை. சுவர்க்க இன்பம் என்பது கண்கள் காணாத, காதுகள் கேட்டிராத, எந்த மனிதனின் உள்ளத்திலும் உதித்திராத பேரின்பமாகும். تقدم
பொருளாதார சூழ்நிலைகள், திருமணம் முடிப்பதற்கு தேவையான பொருட்களை பெற்றுக்கொள்ள முடியாமை போன்ற நெருக்கடிக்குள் சிக்கித்தவிக்கும் இன்றைய இளைஞர்களே இச்சிந்தனையை ஊக்குவிப்போரின் பசப்பு வார்த்தையில் மயங்கி இவ்வாறான ஈனத்தனமான செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு முன்செல்கிறார்கள். குறிப்பாக போதைப்பொருளுக்கு அடிமையானோர் மற்றும் மனக்குழப்பத்திற்கு ஆற்பட்டோர் இதில் அடங்குவர். ஆக,இவ்வாறான கருத்தை ஊக்குவிப்போர் உண்மையாளர்களாக இருந்தால் இப்பணிக்காக இளைஞர்களை அனுப்பமுன் தாங்களே இதனை செய்வதற்கு முன்வர வேண்மல்லவா.!
முதலாவது வாள் என்ற வார்த்தை அல்குர்ஆனில் ஒரு தடவையேனும் குறிப்பிடப்படவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாமிய வரலாற்றில் போரே நிகழாத நாடுகளில்தான் உலக முஸ்லிம்களின் பெருந்தொகையினர் வசித்து வருகின்றனர். இதற்கு இன்துநேஷியா, இந்தியா, சீனா போன்ற நாடுகள் சிறந்த உதாரணமாகும். முஸ்லிம்கள் வெற்றிகொண்ட தேசங்களில் இன்றுவரையில் கிறிஸ்தவர்களும் இந்துக்களும் ஏனையோரும் வாழ்ந்து வருவது, இஸ்லாம் வாளால் பரப்பபடவில்லை என்பதற்கான சான்றாகும். அதே வேளை முஸ்லிம் அல்லாதோரால் காலணித்துவத்திற்கு உட்பட்ட நாடுகளில் முஸ்லிம்கள் சிறு தொகையினரே உள்ளனர். கூட்டுப் படுகொலையும், சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரையும் தமது மதத்தை ஏற்குமாறு பலவந்தப் படுத்தியமையும் இதற்குக் காரணமாகும். சிலுவைப்போர் இதற்கு சிறந்த உதாரணமாக காணப்படுகிறது.
ஜெனீவா பல்கலைக்கழகத்தின் இயக்குனர் எட்வார்ட் மான்டெட் தமது விரிவுரையொன்றில் இவ்வாறு கூறினார்: 'இஸ்லாம் ஒரு வேகமாக பரவி வரும் மதம், இது நிறுவனமயப்படுத்தப்பட்ட அமைப்புகளின் எந்த ஊக்குவிப்பு ஏதுமின்றி தானாகவே பரவுகிறது. ஏனென்றால், ஒவ்வொரு முஸ்லிமும் இயல்பிலேயே மதப்பிரச்சாரகர்களாவர். முஸ்லிமைப் பொருத்தவரை அவர்; இறைவிசுவாசத்தில் மிகவும் உறுதியானவர். அவருடைய இறைவிசுவாசத்தின் பலமானது அவரது இதயத்தையும் பகுத்தறிவையும் ஆகர்சித்துள்ளது. இது ஏனைய மதத்தில் உள்ள ஒருவருக்கு இல்லாத இஸ்லாத்திற்கேயுரிய ஒரு தனித்துவமாகும். இதன் காரணமாக இறைவிசுவாசத்தால் ஆகர்ஷிக்கப்பட்டு ஈமான் நிரம்பிய ஒரு முஸ்லிம் எங்கு சென்றாலும், எங்கு தங்கினாலும் தனது மதத்தைப் பிரச்சாரம் செய்பவராகவே திகழ்வார். அத்துடன் இவ்வாறான பலமான இறைவிசுவாசமிக்க முஸ்லிமுடன் தொடர்பு கொள்ளும் பலதெய்வ விசுவாசிகளிடத்திலும் இந்த நம்பிக்கை சென்றடையும். இறைநம்பிக்கையுடன் சேர்த்து, இஸ்லாம் சமூக மற்றும் பொருளாதார நிலைமைகளுடன் இணைந்து செல்வதுடன், இந்த பலமான மார்க்கம் வேண்டிநிற்கும் சூழலுக்கு ஏற்ப தன்னை அனுசரித்து, இம்மார்க்கம் வாழும் சூழலை மாற்றியமைக்கும் அற்புதமான திறனையும் கொண்டுள்ளது'. (நூல் ஹதீகா ஆசிரியர் :ஸுலைமான இப்னு ஸாலிஹ் அல் கராஷி). تقدم