Applicable Translations हिन्दी සිංහල English Español ગુજરાતી عربي

இஸ்லாமிய கருத்தியல் (சித்தாந்தம்) :

இஸ்லாத்தில் புனிதர்கள் மற்றும் சான்றோர் என விசேடமான ஆன்மீக வாதிகள் உள்ளனரா? முஹம்மது நபியின் தோழர்களை ஓரு முஸ்லிம் புனிதப்படுத்துவாரா?

ஒரு முஸ்லிம் சான்றோரினதும், இறைதூதரின் தோழர் வழியையும் பின்பற்றி நடப்பதுடன், இவ்வாறான புனிதர்களை நேசித்து, இவர்களைப் போன்று நல்லவராக இருக்க வேண்டு என முயற்சி செய்து அவர்கள் நடந்து கொண்டது போல் அல்லாஹ்வை மாத்திரம் வணங்க வேண்டும். ஆனால் அவர்களை கடவுளின் நிலைமையில் வைத்து புனிதப்படுத்துவதோ, அல்லாஹ்வுக்கும் அவருக்கும் இடையில் ஒரு இடைத்த தரகராக வைத்துக் கொள்வதோ கூடாது.

அல்லாஹ் கூறுகிறான் :

"அல்லாஹ்வையன்றி எங்களில் சிலர் சிலரை கடவுளர்களாக எடுத்துக் கொள்ளவும்மாட்டோம்". (ஆல இம்ரான் : 64). تقدم

ஷீஆக்கள் மற்றும் ஸுன்னிகளுக்கிடையிலான வித்தியாசம் என்ன?

முஹம்மத் நபி அவர்கள் ஸுன்னியாகவோ ஷீஆவாகவோ இருக்கவில்லை. மாறாக சத்தியமார்க்கத்தைப் பின்பற்றி நடக்கும் ஒரு உண்மை முஸ்லிமாகவே இருந்தார். ஈஸா அவர்கள் ஒரு கத்தோலிக்கராகவே, அல்லது வேறு எந்தவொன்றின் அங்கத்தவராவோ இருக்கவில்லை. இவர்கள் இருவரும் எந்த தரகரும் இல்லாது இறைவனை (அல்லாஹ்வை) மாத்திரம் வணங்கும் உண்மை முஸ்லிம்களாகவே இருந்தனர். ஈஸா (அலை) அவர்கள் தன்னையோ தனது தாயையோ வணங்குபவராக இருக்கவில்லை. அதே போன்று முஹம்மத் நபியும் தன்னையோ தனது பெண்பிள்ளையையோ, அல்லது தனது மகளின் கணவரையோ வணங்குபவராக இருக்கவில்லை.

அரசியல் பிரச்சினைகளும், சரியான மார்க்க வழிமுறைகளை விட்டு நெறிபிரழ்ந்து சென்றமையும், மற்றும் வேறு பல காரணங்களின் விளைவாக இஸ்லாமிய வரலாற்றில் வழிகெட்ட பிரிவினர் தோன்றத்தான் செய்தன. இப்பிரிவுகளுக்கும், தெளிவான மற்றும் மிகவும் எளிய மார்க்கமாகிய உண்மை மார்க்கத்திற்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது. பொதுவாக எல்லா சந்தர்ப்பத்திலும் 'ஸுன்னா' எனும் வார்த்தையானது நபியவர்களின் வழிமுறையை முழுமையாக பின்பற்றுதல் என்ற கருத்தையே குறித்து நிற்கிறது. 'ஷீஆ' எனும் வார்த்தை பொது முஸ்லிம்கள் பின்பற்றி நடக்கும் வழிமுறைகளிலிருந்து பிரிந்து சென்ற மக்கள் குழுவைக் குறிக்கும். அத்துடன், 'ஸுன்னி முஸ்லிம்கள்' தூதரின் வழிமுறையைப் பின்பற்றுவோராகவும், பொதுவாக அனைத்து விவகாரங்களிலும் இஸ்லாத்தின் சரியான அணுகுமுறையைப் பின்பற்றிச் செல்வோராகவும் உள்ளனர். ஆனால் ஷியாக்களோ இஸ்லாத்தின் சரியான அணுகுமுறையிலிருந்து விலகிய ஒரு பிரிவினர்.

அல்லாஹ் கூறுகிறான் :

''எவர்கள் தனது மார்க்கத்தைப் பிரித்து பல பிரிவினர்களாக ஆனார்களோ அவர்களின் எவரிடத்திலும் நீர் இல்லை. அவர்களின் விடயம் அல்லாஹ்விடமே உள்ளது. பின்னர் அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி அவர்களுக்கு அவன் அறிவிப்பான்''. (அல் அன்ஆம்: 159). تقدم

இஸ்லாத்தில் இமாம் என்பவர் கிறிஸ்துவ மதத்தில் பாதிரியைப் போன்றவரா?

இமாம் என்ற வார்த்தையின் அர்த்தம், மக்களுக்கு தொழுகை வழிபாட்டை முன்னின்று நடத்துபர் அல்லது அவர்களின் விவகாரங்களில் தலைமை தாங்கி வழி நடத்துபவரையும் குறிக்கும் ஒரு சொல்லாகும். இது குறிப்பிட்ட நபர்களுக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்ட, அல்லது மட்டுப்படுத்தப்பட்ட மத அந்தஸ்த்து -தகுதி- கிடையாது. மார்க்கம் அனைவருக்குமானது என்ற வகையில் இஸ்லாத்தில் வர்க்கமோ அல்லது புரோகிதமோ (சமயகுருப்பதவியோ) இல்லை. குறிப்பு : பொதுவாக இது பள்ளிவாசலில் வழிபாடு நேரத்தில் வழிபாட்டை தலைமை ஏற்று நடத்துபவரையும் நாட்டுத் தலைமையையும் குறிக்கும் ஒரு சொல்லாகும். மேலும் இமாம் என்பவர் தொழுகையை நடத்துபவர் மட்டுமல்லாமல் மதத் தலைவராகவும், மதம் தொடர்பான விடயங்களை ஆளமாக கற்று மக்களுக்கு அவற்றை கற்றுக்கொடுப்பவராகவும் இருப்பார். இஸ்லாத்தில் மனிதர்கள் யாவரும் அல்லாஹ்வின் முன் சீப்பின் பற்களைப்போல் சமமானவர்கள். ஆகையால் இறையச்சம் நற்செயல் ஆகியவைகளின் மூலமேயன்றி, அரபி,அரபி அல்லாதவர் என்ற வேறுபாடுகிடையாது. மக்களுக்கு தொழுகை நடாத்துவதற்கு மிகவும் தகுதியானவர் அல்குர்ஆனில் பெரும் பகுதியை மனனம் செய்தவரும், தொழுகை வழிபாட்டுடன் தொடர்பான சட்டதிட்டங்களில் கட்டாயம் அறிந்திருக்க வேண்டியவற்றை கற்றறிந்தவருமாவார். முஸ்லிம்களிடத்தில் ஒரு இமாம் எவ்வளவு மதிப்புக்குரியவராக இருந்தாலும் பாதிரியாரைப் போன்று அவரால் பாவ ஒப்புதல் வாக்குமூலத்தை ஏற்கவோ பாவங்களை மன்னிக்கவோ முடியாது.

அல்லாஹ் கூறுகிறான் :

"இவர்கள் அல்லாஹ்வைத் தவிர்த்து தங்கள் பாதிரிகளையும், சந்நியாசிகளையும், மர்யமுடைய மகன் மஸீஹையும், (தங்கள்) கடவுள்களாக எடுத்துக் கொண்டிருக்கின்றனர். எனினும், வணக்கத்திற்குரிய ஒரே ஓர் இறைவனைத் தவிர மற்றெவரையும் வணங்கக் கூடாதென்றே இவர்கள் அனைவரும் ஏவப்பட்டு இருக்கின்றனர். வணக்கத்திற்குரிய இறைவன் அவனைத் தவிர (வேறெவனும்) இல்லை. அவர்கள் இணைவைக்கும் இவற்றைவிட்டு அவன் மிகவும் பரிசுத்தமானவன்". (அத்தவ்பா : 31). تقدم

நபிமார்கள் தங்களுக்கு அல்லாஹ்விடமிருந்து எத்திவைக்கப்பட்ட விடயங்களில் தவறுசெய்வதிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள் என இஸ்லாம் வலியுறுத்துவதுடன், மதப்புனிதருக்கோ அல்லது பாதிரிக்கோ இறைவெளிப்பாடு –வஹ்யு- மற்றும் தவறுகளிருந்து பாதுகாப்பு என்ற நிலை கிடையாது என்றும் குறிப்பிடுகிறது. உதவிதேடுதல், கோரிக்கை ஒன்றை முன்வைத்தல் போன்ற விடயங்களில், குறித்த வேண்டுதல் நபிமார்களிடத்திலாயினும் அல்லாஹ் அல்லாதோரை நாடுதல் இஸ்லாத்தில் முற்றாக தடை செய்யப்பட்ட விடயமாகும். ஏனெனில் தன்னிடம் இல்லாத ஒன்றை எவருக்கும் கொடுக்கமுடியாது அல்லவா!. தனக்கே உதவிக்கொள்ள இயலாத நிலையில், ஒரு மனிதன் பிறரிடம் உதவியை தனக்கென எவ்வாறு கோர முடியும்? இறைவனிடம் உதவி கோரல் உயர்வாகும். அவன் அல்லாதோரிடத்தில் உதவி கோருவது இழிவாகும். ஒரு வேண்டுதலை அரசனிடத்தில் முன்வைப்பதும், சாமான்ய மக்களிடத்தில் முன்வைப்பதும் சமமானது என்பது பகுத்தறிவுக்குட்பட்ட ஒரு விடயமாகுமா? ஆக இந்த கருத்தை பகுத்தறிவும் தர்கவியலும் முற்றாக நிராகரிக்குமல்லவா!? அல்லாஹ்வி (கடவுளி) ன் இருப்பை விசுவாசித்து அவன் அனைத்து விடயங்களிலும் வல்லமை படைத்தவன் என்ற கோட்பாட்டுன் அவன் அல்லாதோரிடம் வேண்டுதலை முன்வைப்பது ஒரு வகை சிறுமைத்தனமாகும். இது இஸ்லாத்திற்கு முரணான இணைவைத்தல் எனும் மிகப்பெரும் குற்றமாகும்.

அல்லாஹ் தனது தூதரின் வார்த்தையின் மூலம் இவ்வாறு பிரஸ்தாபிக்கிறான் :

"(மேலும், நபியே) நீர் கூறுவீராக: ‘‘அல்லாஹ் நாடினாலே தவிர நான் எனக்கு ஒரு நன்மையையோ தீமையையோ செய்து கொள்ள சக்தி பெறமாட்டேன். நான் மறைவானவற்றை நான் அறிந்தவனாக இருந்திருந்தால், நன்மைகளையே அதிகமாகத் தேடிக் கொண்டிருப்பேன், தீமை என்னைத் தொட்டிருக்காது, நான் விசுவாசங்கொண்ட சமுதாயத்தினருக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனும், நன்மாராயங் கூறுபவனுமேயன்றி வேறில்லை''.(அல்அஃராப் : 188). تقدم

மேலும் அல்லாஹ் கூறுகிறான் :

"நான் உங்ளைப் போன்ற மனிதன்தான், (உண்மையாகவே) வணங்கப்படத்தகுதியான உங்கள் இரட்சகன் ஒருவனே என்று எனக்கு வஹி அறிவிக்கப்படுகிறது. என நபியே கூறுவீராக. எவர் தனது இரட்சகனை சந்திப்பதை ஆதரவு வைக்கிறாரோ அவர் நல்லறம் செய்யட்டும், மேலும் தனது இரட்சகனின் வணக்கத்தில் எவரையும் இணையாக்காதிருக்கட்டும்". (கஹ்ஃப் : 110). تقدم

"நிச்சயமாக பள்ளிவாசல் (மஸ்ஜிது) களெல்லாம், அல்லாஹ்வை வணங்குவதற்காக உள்ளன. ஆகவே, (அவற்றில்) அல்லாஹ்வுடன் மற்றெவரையும் (பெயர் கூறி) அழைக்காதீர்கள்". (ஜின் : 18). تقدم