Applicable Translations English Español ગુજરાતી हिन्दी සිංහල 中文 Русский عربي

சரியான மார்க்கத்தை எத்தி வைத்தல்

ஜிஹாத் என்றால் என்ன?

ஜிஹாத் என்பது பாவங்களை தவிர்ப்பதில் ஆன்மாவுடன் போராடுதலைக் குறிக்கும் மேலும் ஒரு தாய் தனது பிள்ளையை சுமக்கும் வேளை வலிகளை தாங்கிக் கொள்வது தாயின் ஜிஹாதாகும் ஒரு மாணவன் தனது கற்றலின் போது அயராது உழைப்பதும் ஜிஹாதாகும் தனது செல்வம் மானம் மார்க்கத்தை பாதுகாப்பதற்காக போராடுவதும் ஜிஹாதாகும். இவைகள் மாத்திரமின்றி தொழுகை நோன்பு போன்ற ஈபாதத்துகளில் -வணக்க வழிபாடுகளில்- அதற்குரிய நேரத்தில் தன்னை அயராது ஈடுபடுத்திக்கொள்வது ஜிஹாதின் வகைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

ஆகவே ஜிஹாத் என்பதன் அர்த்தம் சிலர் விளங்கியிருப்பது போன்று முஸ்லிம் அல்லாத அப்பாவிகளையும், இணக்கப்பாட்டுடனும் சமாதானமாகவும் வாழுவோரையும் கொலை செய்தல் என்பதல்ல என்பதை நாம் புரிந்து கொள்கிறோம்.

இஸ்லாம் உயிரை மதிக்கும் மார்க்கமாகும். இதன் அடிப்படையில் சமாதானமாக வாழுவோர் மற்றும் சிவிலியன்களை கொலை செய்வதை தடை செய்வதுடன், போரின்போது கூட இவ்வாறானோரின் உடமைகளையும், குழந்தைகள் மற்றும் பெண்களையும் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்துகிறது. அது மட்டுமல்லாது போரில் கொலைசெய்யப்பட்ட எதிரிகளின் உடல்களை சிதைத்தல் மற்றும் சித்திரவதை செய்தல் போன்றவற்றை கண்டிப்பதுடன் அவை இஸ்லாமியப் பண்பாடுகள் அல்ல என்பதை வலியுறுத்தி குறிப்பிடுகிறது.

அல்லாஹ் கூறுகிறான் :

''எவர்கள் மார்க்கவிடயத்தில் உங்களுடன் போரிடவில்லையோ அவர்களுக்கும் மேலும் உங்களை உங்களது இல்லங்களை விட்டும் வெளியேற்ற வில்லையோ அவர்களுக்கும் நீங்கள் நன்மை செய்வதையும் அவர்களுடன் நீங்கள் நீதியாக நடப்பதையும் அல்லாஹ் உங்களுக்கு தடுக்கவில்லை. நிச்சயமாக அல்லாஹ் நீதியாக நடப்பவர்களை நேசிக்கிறான். எவர்கள் மார்க்க விடயத்தில் உங்களுடன் போரிட்டு உங்களை உங்களது இல்லங்களை விட்டும் வெளியேற்றினார்களோ அவர்களையும் மேலும் உங்களை வெளியேற்றிட உதவி செய்தார் களோ அவர்களையும் நேசத்திற்குரியவர்களாக எடுத்துக் கொள்வதையே அல்லாஹ் உங்களுக்கு தடுக்கின்றான். அவர்களை யார் நேசர்களாக எடுத்துக்கொள்கிறார்களோ அவர்கள்தாம் அநியாயக்காரர்கள்''. (அல் மும்தஹினா :8-9). تقدم

''இதன் காரணமாகவே நிச்சயமாக எவன் கொலைக்குப் பகரமாகவோ அல்லத பூமியில் குழப்பம் விளைவிப்பதற்காகவோ அன்றி மற்றொரு ஆன்மாவை கொலை செய்கின்றானோ அவன் மனிதர்கள் அனைவரையும் கொலை செய்தவன் போன்றாவான். என்றும் எவன் ஒருவன் அதனை வாழ வைக்கின்றானோ அவன் மனிதர்கள் அனைவரையும் வாழ வைத்தவன் போலாவான் என்றும் இஸ்ராஈலின் சந்ததிகள் மீது நாம் விதித்தோம். நிச்சயமாக அவர்களிடம் நமது தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தனர். பின்னர் நிச்சயமாக அவர்களில் அதிகமானோர் இதன் பின்பும் பூமியில் வரம்புமீறுவோராகவே இருந்தனர்''. (மாஇதா : 32). تقدم

முஸ்லிம் அல்லாதோர் பின்வரும் நால்வரில் ஒருவராக இருப்பார் :

முஸ்தஃமன் : பாதுகாப்பு அளிக்கப்பட்டவர்.

அல்லாஹ் கூறுகிறான் :

"(நபியே!) இணைவைத்து வணங்குபவர்களில் எவனும் உம்மிடம் பாதுகாப்பைக் கோரினால், அல்லாஹ்வுடைய வசனங்களை அவன் செவியுறும்வரை அவனுக்கு பாதுகாப்பு அளிப்பீராக. (அவன் அதை செவியுற்றும் நம்பிக்கை கொள்ளாவிட்டால்) அவனை அவனுக்கு பாதுகாப்புள்ள (வேறு) இடத்திற்கு அனுப்பிவிடுவீராக! ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் அறிவில்லாத மக்கள் ஆவர்". (அத்தவ்பா: 6). تقدم

முஆஹத் : முஸ்லிம்ளுடன் போர்செய்வதில்லை என உடன் படிக்கை செய்தவன்.

அல்லாஹ் கூறுகிறான் :

"(சத்தியம் செய்து) உடன்படிக்கை செய்து கொண்டதன் பின்னரும், அவர்கள் தங்கள் சத்தியங்களை முறித்து உங்கள் மார்க்கத்தைப் பற்றியும் தவறான குற்றங்குறைகள் கூறிக்கொண்டிருந்தால், நிச்சயமாக நிராகரிக்கும் (இத்தகைய) மக்களின் வாக்குறுதிகள் முறிந்துவிட்டன. ஆகவே, (இத்தகைய விஷமத்திலிருந்து) அவர்கள் விலகிக்கொள்வதற்காக நீங்கள் நிராகரிப்பை உடைய (அந்த) தலைவர்களிடம் போர் புரியுங்கள். (அத்தவ்பா :12). تقدم

திம்மீ அல்லது அஹ்லுத் திம்மா என்போர் : முஸ்லிம்களுக்கு வரி செலுத்துவதாக உடன்படிக்கை செய்தோர் ஆவர். அத்துடன் இவர்கள் தமது மார்க்கத்தை கடைப்பிடிப்பதற்கும் பாதுகாப்பை பெற்றுக் கொள்ளவதற்கும் ஈடாக சில நிபந்தனைகளை கடைபிடிக்க வேண்டும். இந்த வரியானது சாதாரண ஒரு தொகையாகும். அவர்களின் சக்திக்கேட்ப செலுத்துவர். அத்துடன் இத்தொகையானது இயலுமானோரிடம் மாத்திரமே பெறப்படும். போர் புரிவதற்கு இயலுமான பருவவயதை அடைந்த சுதந்திர ஆண்கள் மாத்திரம் தகுதி பெறுவர் மாறாக பெண்கள் பிள்ளைகள் புத்தி சுவாதீனமற்றவர்கள் இவ்வரிசெலுத்தலுக்குள் உட்படமாட்டார்கள். (ஸாகிரூன் என்பது இறைசட்டத்திற்கு கட்டுப்பட்டோர் என்ற கருத்தை தரும்). அதே வேளை இன்றைய நாளில் பல மில்லியன் கணக்கானோர் செலுத்தும் வரியானது அனைத்து தனிமனிதர்களையும் உள்ளடக்குவதோடு தங்களது விவகாரங்களை அரசு பராமறிக்கிறது என்பதற்காக மிகப்பெரும் தொகையை செலுத்துகின்றனர் அவர்கள் இந்த மனித சட்டங்களுக்கு உட்பட்டவர்களாக உள்ளனர்.

அல்லாஹ் கூறுகிறான் :

"(நம்பிக்கையாளர்களே!) வேதம் அருளப்பட்டவர்களில் எவர்கள் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்பிக்கை கொள்ளாமல், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் தடுத்தவற்றை தடுத்துக் கொள்ளாமலும், உண்மை மார்க்கத்தை தமது மார்க்கமாகக் கொள்ளாமலும் இருக்கின்றனரோ அவர்கள் சிறுமையடைந்தோராக (ஆள் வரி ) எனும் ஜிஸ்யாவை தமது கையால் வழங்கும் வரை அவர்களுடன் போராடுங்கள்''. (அத்தவ்பா:29). تقدم

முஹாரிப் : அதாவது முஸ்லிம்களுக்கெதிராக போர்பிரகடனம் செய்தவன். இவனுக்கு எந்த உத்தரவாதமோ பாதுகாப்போ பொறுப்போ கிடையாது இவர்கள் குறித்து அல்லாஹ் பின்வரும் வசனத்தில் பிரஸ்தாபிக்கிறான் :

"(நம்பிக்கையாளர்களே! இந்நிராகரிப்பவர்களின்) குழப்பம் முற்றிலும் நீங்கி, அல்லாஹ்வுடைய மார்க்கம் முழுமையாக நிலைபெறும் வரை (மக்காவாசிகளாகிய நிராகரிக்கும்) இவர்களுடன் போர் புரியுங்கள். (குழப்பம் செய்வதிலிருந்து) அவர்கள் விலகிக்கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை உற்று நோக்குகிறான்". (அல் அன்பால் : 39). تقدم

போர்பிரகடனம் செய்த பிரிவினர் என்பது எமக்கெதிராக போரடுவோரை மாத்திரமே குறிக்கும். ஆனால் இவர்களை கொலைசெய்யுமாறு அல்லாஹ் கட்டளை பிரப்பிக்கவில்லை. மாறாக போராடுமாறே பணித்துள்ளான். இரண்டிற்கும் மத்தியில் அதாவது கொலை செய்தல் போராடுதல் என்பதிற்கிடையில் மிகப்பெரிய வேறுபாடு உண்டு. போர் அல்லது சண்டை என்பது ஒரு போரளிக்கும் தனது உயிரைப் பாதுகாப்பதற்காக போரிடுபவருக்கு மத்தியில் நிகழும் சண்டையாகும். இதனை மனித சட்டங்கள் அனைத்தும் குறிப்பிடுகின்றன.

அல்லாஹ் கூறுகிறான் :

"உங்களை எதிர்த்து போர் புரிய முற்பட்டோரை அல்லாஹ்வுடைய பாதையில் நீங்களும் எதிர்த்து போர் புரியுங்கள். ஆனால், நீங்கள் அத்துமீறாதீர்கள். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் அத்துமீறுபவர்களை நேசிப்பதில்லை" (அல்பகரா:190). تقدم

இந்தப் பூமியில் அல்லாஹ்வைத்தவிர வேறு இறைவன் கிடையாது என்று முழங்கும் ஒரிறைக்கொள்கை காணப்படவில்லை என்ற கூற்றை முஸ்லிம் அல்லாதவர்களிடமிருந்து நாம் அதிகம் செவிமடுக்கிறோம். இவ்வாறானோர் முஸ்லிம்கள் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்களை வணங்குவதாகவும், கிறிஸ்துவர்கள் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை வணங்குவதாகவும், பௌத்தர்கள் கௌதம புத்தரை வணங்குவதாகவும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இந்த உலகத்தில் காணும் மதங்கள் யாவும் அவர்களின் உள்ளத்தில் காணப்படும் எண்ணங்களுடன் பொருந்தவில்லை.

இஸ்லாமிய வரலாற்றில் இடம் பெற்ற வெற்றிகளின் முக்கியத்துவம் பற்றி அறிவதற்கு பலரும் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பர். இந்த வெற்றிகள் யாவும் மார்க்த்தில் நிர்ப்பந்தம் கிடையாது எனும் வரையறைக்குள் ஏகதெய்வக் கொள்ளை பற்றிய தூதை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதை இலக்காக கொண்டிருந்தது. அதே வேளை முஸ்லிம் அல்லாதோரின் கௌரவத்தை, புனிதங்களை மதித்து, அவர்கள் தங்கள் மதத்தை தொடர்ந்து கடைப்பிடித்தொழுகவும், பாதுகாப்பை வழங்குவதற்கும் ஈடாக அரசுக்கு அவர்களின் கடமைகளை நிறைவேற்ற அவர்களுக்கு வகை செய்வதினூடாக இது நிகழ்ந்தது. இவ்வாறான நிகழ்வுகள் வரலாற்றில் எகிப்து மற்றும் அந்தலுஸ் போன்ற தேசங்களிலும் மேலும் பல வெற்றிகளின் போதும் இடம்பெற்றது.