முதலாம் வசனம்: "இம்மார்க்கத்(தைத் தழுவுவ)தில் எவ்வித நிர்ப்பந்தமும் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி தெளிவாகிவிட்டது''. (அல் பகரா :256). - இந்த வசனமானது மார்க்கத்தை ஏற்றுக்கொள்ள செய்வதில் நிர்ப்பந்தத்தை (வற்புருத்தலை) பிரயோகித்தலை தடை செய்தல் எனும் மார்க்கத்தின் மிகப்பெரும் இஸ்லாமிய அடிப்படையொன்றை நிறுவுகிறது. அதே வேளை இரண்டாவது வசனமானது : ''அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொள்ளாமல் இருப்பவர்களோடு போராடுங்குள்'' என்று குறிப்பிடுகிறது. (அத்தவ்பா : 29). குறிப்பு: 'இந்த வசனத்தை முழுமையாக படிப்பதன் மூலம் இந்த வசனம் குறிப்பிட வந்த விடயத்தை புரிந்து கொள்ளலாம்' இந்த வசனம் குறிப்பிடும் கருத்து பிரத்தியேகமானதே தவிர பொதுவானதல்ல. அதாவது இஸ்லாத்தை எதிர்த்து, இஸ்லாமிய பிரச்சாரத்தை பிறர் ஏற்றுக்கொள்வதை தடுப்பவர்களுடன் சம்பந்தப்பட்டது. ஆகவே இந்த வகையில் இரண்டு வசனங்களுக்குமிடையில் உண்மையில் எவ்வித முரண்பாடுமில்லை. تقدم تقدم
ஈமான் (இறைவிசுவாசம்) என்பது அடியானுக்கும் அவனின் இரட்சகனுக்குமிடையிலான தொடர்பாகும். எப்போது இத்தொடர்பை ஒருவர் முறித்துக்கொள்ள விரும்புகிறாரோ அவரின் முடிவு அல்லாஹ்விடமே உள்ளது. ஆனால் யார் இதனை பகிரங்கப் படுத்தி இஸ்லாத்தை எதிர்ப்பதற்கும் அதன் தோற்றத்தை சிதைத்து கொச்சைப்படுத்தவும் (மத நிந்தனை செயற்பாட்டில்) அதற்கு துரோகம் இழைப்பதற்கும் நாடுகிறாரோ மனிதனால் இயற்றப்பட்ட சாதாரண போர்விதிகள் மற்றும் சட்டங்களின் அடிப்படையில் அவன் கொல்லப்படவேண்டும் என்பதே தீர்ப்பாகும். இதில் யாரும் மாற்றுக்கருத்துக் கொள்ளமாட்டர்கள் என்பதே அடிப்படையாகும்.
மதமாற்றத்திற்கான தண்டனை பற்றிய குற்றச்சாட்டு தொடர்பான பிரச்சினையின் அடிப்படை விடயம் என்னவென்றால் இக்குற்றச்சாட்டை சுமத்துவோர் அனைவரும் எல்லா மதங்களும் உண்மையானவை, ஒரே தரமானவை என்று யூகிப்பதாகும். மேலும், படைப்பாளனை நம்பி, அவனுக்கே வணக்கத்தை செலுத்தி அனைத்து வகையான குறைகளை விட்டும் தூய்மைப்படுத்துவதும், அவன் இருப்பை நம்ப மறுப்பதும், அல்லது அவன் ஒரு மனித மற்றும் கல்லின் வடிவத்தில் பிரதிபலிக்கிறான், அவனுக்கு சந்ததி உண்டு என நம்புவதும் ஒன்றே என்று கருதியதினால் ஏற்பட்ட விளைவாகும். இவ்வாறான கற்பிதங்களிலிருந்தும், மாயைகளிலிருந்தும் அல்லாஹ் மிகத்தூயவானாக உள்ளான். இந்த மாயைக்கு இன்னொரு காரணம் மத சார்பியம் அல்லது எம்மதமும் சம்மதம் என்ற நிலைப்பாடாகும். அதாவது, எல்லா மதங்களும் சரியாக இருக்க முடியும் என்ற நம்பிக்கை. இந்த நம்பிக்கையானது தர்க்கத்தின் சாதாரண அடிப்படைகளை அறிந்தவர் கூட ஏற்காத அல்லது இக்கருத்துடன் ஒத்துப்போகாத விடயமாகும். ஈமானானது -இறைவனை நம்புதல்- நாஸ்திகம் மற்றும் இறைமறுப்புடன் முரண்படுகிறது என்பது மிகத்தெளிவான விடயமாகும். இதனால் சீரிய நம்பிக்கையை ஏற்ற ஒருவர் -இறைவன் ஒருவன் என ஏற்றவன்- உண்மை சார்பியம் -ஒப்பீட்டு உண்மை- குறித்த கூற்றை ஒரு தர்கரீதியான தவறும் மடமைத்தனமுமாகும் என்றே கருதுவார். இதன் அடிப்படையில், இரண்டு முரண்பட்டட நம்பிக்கைகள் ஒரே நேரத்தில் சத்தியத்தில் உள்ளது எனக் குறிப்பிடுவதில் எந்த உண்மையும் கிடையாது.
சத்தியத்தை ஏற்றதன் பின் மார்க்கத்தை விட்டுவிலகிச் சென்றோர் யாவரும், தமது மதமாற்றத்தை பிரகடனப்படுத்தும் வரையில் இத்தண்டனைக்கு உட்படுவோர் அல்லர். இதனை அவர்கள் நன்கு தெரிந்து வைத்துள்ளார்கள். என்றாலும் அவர்கள் தங்களை இம்மார்க்கத்திலிருந்து வெளியேறிய சுதந்திரபுருஷர்களாக தன்னைக் காட்டிக்கொண்டு அல்லாஹ்வையும் அவனது தூதரையும் ஏளனம் செய்து பரப்புரை செய்வதற்கு முஸ்லிம் சமூகம் வழி திறக்க வேண்டும் என்று அவர்கள் கோருவதுடன் மற்றவர்களை இறைமறுப்பு மற்றும் ஒழுக்கமின்மை போன்றவற்றிற்கு தூண்டுகிறார்கள். இவர்களின் இச்செயற்பாட்டிற்கு பின்வரும் உதாரணத்தைக் குறிப்பிடமுடியும். பூமியில் உள்ள எந்த அரசனும் -ஆட்சியாளரும்- தனது இராட்சியத்தில், ஒரு அரசன் இருப்பதை ஏற்றுக்கொள்ளாதிருத்தல் அல்லது அவரை அல்லது அவரது பரிவாரங்களை கேலி செய்வது அல்லது அரசனின் பதவிக்கு பொருந்தாத ஒன்றை அவருக்கு கூறுவது போன்ற விடயங்களை எந்த அரசனாலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு சாதாரண விடயமாகும். இது இவ்வாறிருக்க அரசர்களுக்கெல்லாம் அரசனும் யாவற்றையும் படைத்தவனுமாகிய இறைவனுக்கு எவ்வாறு பொருந்தும்؟
ஒரு முஸ்லிம் இறைநிராகரிப்புக்குரிய விடயங்களை செய்தால் அவருக்கு உடனே ரித்தத் மதமாற்றத்திற்கான தண்டனை அமுல் படுத்தப்படும் என்று சிலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அடிப்படையில் அவரை காபிராக (இஸ்லாத்தை விட்டு வெளியேறிவராக) கருதுவதற்கு அறியாமை, வியாக்கியானம், பலவந்தம், தவறு போன்ற பல நியாயமான காரணங்கள் தடையாக இருக்கலாம் என்பதே இது குறித்த சரியான கருத்தாகும். இந்த வகையில், பெரும்பாலான அறிஞர்கள் ஒரு முர்தத்திற்கு சத்தியத்தை அறிவதில் குழப்பம் ஏற்பட வாய்ப்பிருப்பதால் அவருக்கு தவ்பா செய்யுமாறு வலியுறுத்து கின்றனர். ஆனால் இத்தீர்ப்பிலிருந்து போராளியாக செயற்படும் முர்தத் விதிவிலக்களிக்கப் படுகிறார். அதாவது அவர் கொலை செய்யப்பட வேண்டும் என்பது முடிவாகும். (இப்னு குதாமா ரஹிமஹுல்லா தனது முஃனி என்ற நூலில் இதனை குறிப்பிட்டுள்ளார்). - تقدم
முஸ்லிம்கள் நயவஞ்சகர்களை சக முஸ்லிம்களை நடத்துவது போல் நடாத்தினர், நபியவர்கள் அவர்களைப்பற்றி அறிந்திருந்தும் அவர்களுக்கு முஸ்லிம்களுக்கான அனைத்து உரிமைகளையும் வழங்கினார்கள். அவர்களின் பெயர்களை ஸஹாபி ஹுதைபாவுக்கு நபியவர்கள் தெரிவித்திருந்தார்கள். இருப்பினும், நயவஞ்சகர்கள் தங்கள் இறைநிராகரிப்பை பகிரங்கப்படுத்த வில்லை. இந்த நடை முறை இஸ்லாத்தை பகிரங்கமாக விமர்சிக்காது இருந்தால் அவர்களுக்கான உயிர் உத்தரவாதத்தை இஸ்லாம் வழங்குகிறது என்பது பொருளாகும்.
மூஸா மற்றும் தாவூத் அலைஹிமஸ்ஸலாம் இருவரும் போராளிகளாக இருந்தனர். மூஸாவும் முஹம்மதும் (அலைஹிமஸ்ஸலாம்) அரசியல் மற்றும் உலக விவகாரங்களில் பல பதவிகளை பொறுப்பேற்றிருந்தனர். இருவரும் சிலைவணக்கம் நிறைந்த சமூகத்தை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு புலம் பெயர்ந்து சென்றனர். மூஸா நபி தனது சமூகத்தாருடன் எகிப்தைவிட்டு வெளியேறினார். தனது சொந்த தேசத்தின் அரசியல் மற்றும் இராணுவ ஆதிக்கத்தலிருந்து விடுபட்டு தனது மார்க்கத்தை பாதுகாக்க முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் யத்ரிபுக்கு -மதீனாவுக்குச்- சென்றார்கள். அதற்கு முன் தனது தோழர்கள் அபீஸீனியாவிற்கு ஹிஜ்ரத் செய்திருந்தனர். மூஸா மற்றும் முஹம்மத் ஆகியோரின் பிரச்சாரங்கள் எகிப்திலும் அரபு நாட்டிலும் காணப்பட்டன. அவ்விரண்டு சூழல்களும் விக்கிரக வழிபாட்டு சார்ந்த சூழலாகும். ஆனால் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிரச்சாரம் சிலை வணங்கிகள் அல்லாத யூத சமூகத்திற்கானதாக இருந்தது. இதுவே ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிரச்சாரம் சற்று வித்தியசப்படக் காரணம். அத்துடன் அவர் இருந்த சூழ்நிலையும் மிகக் கடினமானதாகக் காணப்பட்டது. மூஸா மற்றும் முஹம்மத் அலைஹிமஸ்ஸலாம் ஆகியோரின் பிரச்சாரப் பொறுப்பானது சிலை வணக்கத்திலிருந்து ஏகத்துவத்தின் பால் மாற்றுகின்ற மிகப்பாரியதும் அடிப்படையுமான ஒன்றாகக் காணப்பட்டது.
அத்துடன் இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் காலத்தில் நடைபெற்ற போர்களில் பலியானோரின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டவில்லை. அக்காலத்தில் நடைபெற்ற போர்கள் யாவும் தற்காப்பு, அத்துமீறலைத் தடுத்தல் அல்லது மதத்தைப் பாதுகாத்தல் போன்றவற்றை நோக்காகக் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதே வேளை ஏனைய மதங்களில் மதத்தின் பெயரால் நடைபெற்ற போர்களில் பலியானோர் எண்ணிக்கை பல மில்லியன்களாகும்!
இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் கருணை மக்காவின் அதிகாரம் கிடைத்த அந்நாளில் வெளிப்பட்டது. அவ்வேளை அவர்கள் இன்றைய தினம் கருணையின் தினமாகும் எனக் கூறி முஸ்லிம்களுக்கு நோவினையும் தொல்லையும் கொடுப்பதில் அயராது ஈடுபாடுட்ட குறைஷியருக்கு பொது மன்னிப்பபை பிரகடனப்படுத்தி கௌரவப்படுத்தினார்கள். இதன் மூலம் உபத்திரத்திற்கு பதிலாக உபகாகரத்தையும்; கொடுமை செய்வதற்குப் பதிலாக நல்ல முறையில் நடந்துகொள்வதையும் சன்மானமாக வழங்கினார்கள்.
அல்லாஹ் கூறுகிறான் :
"நன்மையும் தீமையும் சமமாக மாட்டா, நீங்கள் (தீமையை) நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்வீராக! அப்பொழுது, யாருக்கும் உமக்கிடையே, பகைமை இருந்ததோ, அவர் உற்ற நண்பரே போல் ஆகிவிடுவார்". (புஸ்ஸிலத் : 34). تقدم
இறையச்சமுடையோரின் பண்புகளில் சிலவை குறித்து அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான் :
''கோபத்தை மென்று, மனிதர்களை மன்னிப்பவர்களாகவும் இருப்பார்கள். நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கின்றான்''. (ஆல இம்ரான் : 134). تقدم