Applicable Translations हिन्दी සිංහල English Español ગુજરાતી عربي

இறுதி வேதம் :

அல்குர்ஆன் என்றால் என்ன?

அல்குர்ஆன் என்பது அகிலத்தின் இரட்சகனிடமிருந்து அனுப்பட்ட வேதங்களில் இறுதி வேதமாகும். முஸ்லிம்களைப் பொருத்தவரை அல்குர்ஆனுக்கு முன் அனுப்பப்பட்ட அனைத்து வேதங்களையும் அதாவது இப்ராஹீம் அலை அவர்களின் ஸுஹுபுகள் உட்பட ஸபூர் தவ்ராத் இன்ஜீல் அவை அல்லாத இறைவேதங்களை நம்புகின்றனர். அத்துடன் எல்லா இறைவேதங்களும் தூய ஏகத்துவத்தை அதாவது "அல்லாஹ்வை இறைவனாக நம்பி வணக்கத்தை அவனுக்கு மாத்திரமே செலுத்தல்" என்ற கோட்பாட்டை அடிப்படையாக கொண்ட உண்மை செய்தியை –தூதுத்துவத்தை உள்ளடக்கியதாக இருந்தது என்பதை உறுதியாக ஏற்றுக்கொள்கின்றனர். இருப்பினும் அல்குர்ஆன் முந்தைய இறைவேதங்களைப் போன்று, குறிப்பிட்ட குழு அல்லது பிரிவினருக்கு மாத்திரம் ஏகபோக உரிமை கொண்டதாக இல்லை. அதே போன்று பல்வேறு வித்தியாசமான பிரதிகளும் கிடையாது. அது எந்த மாற்றத்திற்கும் உட்படவுமில்லை, மாறாக அது அனைத்து முஸ்லிம்களுக்கும் ஒரே பிரதியாக மாத்திரமே காணப்படுகிறது. அல்குர்ஆன் வாசகம் எந்த மாற்றமோ அல்லது திரிபோ இன்றி அதன் அஸல் (அடிப்படை) மொழியான அறபு மொழியிலேயே காணப்படுகிறது. அது இன்று வரையிலும் பாதுகாக்கப் பட்டதாகவே தொடர்ந்தும் உள்ளது, எதிர்காலத்திலும் அகிலத்தாரின் இரட்சகனான அல்லாஹ் வாக்களித்தது போன்று இப்பூவுலகம் அழிக்கப்படும் வரையில் அது நிலைத்திருக்கும். அல்குர்ஆன் அனைத்து முஸ்லிம்களினதும் கைகளில் பரிமாறப்படும் ஒரு நூலாக இருப்பதுடன், அதிகமானோரின் உள்ளங்களில் பதியவைத்து பாதுகாக்கப்பட்டுள்ளது. பல்வேறு மொழிகளிலும் அல்குர்ஆன் மொழிபெயர்ப்புகள் மக்களின் புலக்கத்தில் பரவாலாக உள்ளன. அவைகள் யாவும் அல்குர்ஆனின் கருத்துக்களை பிரதிபலிக்கும் மொழிபெயர்ப்பு மாத்திரமே என்பதை கருத்திற் கொள்ளவும். அன்றைய அரேபியர்கள் சொற்பொழிவு, சொல்லாட்சி, கவிதை போன்றவற்றில் தலைசிறந்தவர்களாக இருந்த போதிலும், குர்ஆன் போன்ற ஒன்றைத் கொண்டுவருமாறு அகிலங்களின் இரட்சகனான அல்லாஹ் அரேபியர்களுக்கும் அரேபியர் அல்லாதவர்களுக்கும் சவால் விடுத்தான். இருப்பினும், இந்த குர்ஆன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரிடமிருந்தும் வர முடியாது என்பதை அவர்கள் உறுதியாக ஏற்றுக்கொண்டனர். ஆனாலும் இந்த சவால் பதினான்கு நூற்றாண்டுகளுக்கும் மேலாக இருந்தும், எவரும் இச்சவாலை எதிர்கொள்ள முடியவில்லை. இதுவொன்றே இந்தக் குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து கிடைத்த வேதம் என்பதற்கு மிகப் பெரிய சான்றுகளில் ஒன்றாகத் திகழ்கிறது.

முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அல்குர்ஆனை தவ்ராத்திலிருந்து பிரதி செய்தாரா?

அவ்வாறு தவ்ராத்திலிருந்து பிரதிசெய்யப்பட்டு யூதர்களிடமிருந்து இந்த அல்குர்ஆன் வந்திருந்தால் மனிதர்களில் அதனை தங்களுக்குரியது என்பதாக உரிமை பாராட்டுவதில் அவர்கள் முந்திக்கொண்டிருப்பர். வேத இறைவெளிப்பாடு (வஹி) இறங்கிய காலத்தில் இவ்வாறான வாதமொன்றை அவர்கள் முன்வைத்தனரா என்று நாம் கேள்வியெழுப்பினால் அதற்கு இல்லையென்பதே பதிலாகும்.

அத்துடன் இன்னோரு வகையில் சிந்திப்பின், தொழுகை ஹஜ் மற்றும் ஸகாத் போன்ற ஷரீஆ மற்றும் கொடுக்கல்வாங்கல் சட்டங்கள் வித்தியாசப்படுபவனாக இல்லையா? மேலும், மற்ற வேதங்களுடன் ஒப்பிடுகையில் குர்ஆனின் தனித்துவம் மற்றும் அதன் மனிதகையாடல்களுக்கு உட்படாத தன்மை மற்றும் அறிவியல் அற்புதங்களை உள்ளடக்கியது குறித்து முஸ்லிமல்லாதவர்களின் சாட்சியத்தை நோக்க வேண்டியதும் அவசியமாகும். ஒரு கொள்கையுடையவர் தன்னுடைய கொள்கைக்கு முரணான ஒரு கோட்பாட்டினை சரியென ஏற்றுக்கொண்டால், அதுவே அதன் உண்மைக்கு மிகப்பெரிய சான்றாகும். ஆகவே அகிலத்தாரிடமிருந்து கிடைத்த ஒரே தூதாக இது இருப்பதால் இது ஒன்றாக இருப்பதே அவசியமாகும். நபியவர்கள் கொண்டுவந்த இவ்விறைவேதமானது மோசடிக்கான ஆதாரமன்று! மாறாக அவரின் நேர்மைக்கான ஆதாரமாகும். அல்லாஹ் அறபு அணியிலக்கினக்கலையில் திறன்மிக்கோராக கருதப்பட்ட அறபுகள் மற்றும் அறபுகள் அல்லாதோரிடமும் இவ்வேதத்தைப் போன்ற அல்லது இது போன்று ஒரு வசனத்தையேனும் கொண்டு வருமாறு சவால் விடுத்தான். அவர்கள் அச்சாவாலுக்கு முகம் கொடுக்க இயலாது தோற்றுப்போனார்கள் என்பதே வரலாறாகும். அந்த சவால் இன்று வரை தொடர்ந்து கொண்டேயிருக்கிறது!.

நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அல்குர்ஆனில் வந்ததை ஆரம்ப கால நாகரிகங்களிலிருந்து எடுத்தாரா?

புராதன –பண்டைய நாகரிங்களில் சரியான சில விடயங்கள் காணப்பட்டன. அதில் மிகவும் அதிகமானவை கட்டுக்கதைகளும், புனைவுகளுமே. வரண்ட பாலை நிலத்தில் வளர்ந்த எழுதப்படிக்கத் தெரியாத ஒரு தீர்கதரிசிக்கு இவ்வாறான நாகரிங்களில் உள்ள (சிறப்பான) சரியான விடயங்களை மாத்திரம் (நகல் செய்து) பிரதி செய்துவிட்டு கட்டுக்கதைகளையும் புராணங்களையும் விட்டு விடுவதற்கு எவ்வாறு முடிந்தது? என்பது சிந்திக்கத் தக்க விடயமல்லவா!?.

அல்குர்ஆன் அறபு மொழியில் இறக்கப்பட்டது ஏன்?

உலகத்தில் பல்லாயிரக்கணக்கான மொழிகளும், வழக்கு மொழிகளும் பரவலாக காணப்படும் ஒரு விடயாமாகும். இவ்வாறாக காணப்படும் எந்த மொழியில் அல்குர்ஆன் இறக்கப் பட்டாலும் ஏன் மற்றைய மொழியொன்றில் இறக்கப்பட்டிருக்கக் கூடாது, அல்லது இறங்கியிருக்க வேண்டுமே என்ற கேள்வியை சாதாரணமாக மக்கள் கேட்கவே செய்வர். உண்மையில் அல்லாஹ் தனது தூதர்களாக அவர்களின் சமூகத்தாரின் மொழியை பேசக்கூடியவரையே அனுப்பி வைத்தான் இந்த அடிப்படையில் இறுதித்தூதராக முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸலம் அவர்களை தேர்வு செய்தான். எனவே நபியவர்களினதும் அவர்களின் சமூகத்தின் மொழியும் அறபாக இருந்தது ஆகையால் அவர்களின் மொழியான அறபு மொழியில் அல்குர்ஆனை அல்லாஹ் இறக்கினான். அதனை மறுமை நாள் வரையில் எந்த திரிபுமின்றி பாதுகப்பான். இதே போல் அல்லாஹ் ஈஸா அலை அவர்களின் வேதநூலின் மொழியாக அராமிக் மொழியை தெரிவு செய்தான்.

அல்லாஹ் கூறுகிறான் :

''நாம் எந்தத் தூதரையும் அவர் தனது சமூகத்திற்கு தெளிவு படுத்துவதற்கு அவர்களது மொழியிலேயே தவிர அனுப்பவில்லை''. (இப்ராஹீம் : 4). تقدم

அந்நாஸிஹ் வல்மன்ஸுஹ் என்றால் என்ன? நாஸிஹ் என்பது புதிய சட்டத்தையும் (மாற்றியது) அல் மன்ஸூஹ் என்பது பழைய சட்டத்தையும் (மாற்றத்திற்குட்பட்ட முந்தைய சட்டத்தையும்) குறிக்கும்.

அந்நாஸிஹ் வல்மன்ஸுஹ் கோட்பாடானது இஸ்லாமிய ஷரீஆ சட்டங்களில்- தீர்ப்புகளில் ஏற்பட்ட ஒரு வளர்ச்சியாகும். இக்கோட்பாடானது முன்னைய ஒரு சட்டத்தீர்ப்பின் செயற்பாட்டை நிறுத்துவது, அல்லது குறிப்பிட்ட பிரச்சினை தொடர்பாக வந்த புதிய சட்டத்தை அனுமதித்தல் அல்லது பொதுவாக குறிப்பிடப்பட்ட ஒரு விடயத்தை வரையறுத்தல் அல்லது குறிப்பாக வந்துள்ள ஒரு தீர்ப்பை பொதுமைப்படுத்தல் போன்ற விடயங்களை முன்வைக்கும். இது ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவரகள் முதல் முன்னைய சட்டங்களில் காணப்பட்ட எல்லோராலும் அறியப்பட்ட ஒரு விவகராமாகும். இதற்கு உதாரணமாக பின்வரும் விடயங்களை குறிப்பிட முடியும். ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் காலத்தில் நலனை கருத்திற்கு கொண்டு ஒரு சகோதரர் தனது சொந்த சகோதரியை திருமணம் முடித்துக்கொள்வதற்கான அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் ஏனைய காலங்களில் வந்த இறை சட்டதிட்டங்களில் இது தீமையாக கருதப்பட்டு மாற்றப்பட்டது. அதே போன்று சனிக்கிழமை அன்று உழைத்தல் என்பது நலன் என்ற அடிப்படையில் இப்ராஹீம் அலை அவர்களினது ஷரீஆவிலும் முன்பிருந்த நபிமார்கள் மற்றும் ஏனைய எல்லா இறைசட்டங்களிலும் அனுமதிக்கப்பட்ட ஒரு காரியமாக இருந்து வந்தது. அந்த நலவானாது மூஸாஅலை அவர்களின் சட்டத்தில் தீங்காக மாறியது. அதாவது அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதே போன்று அல்லாஹ் இஸ்ரவேலர்கள் காளை மாட்டின் கன்றை வணங்கியமைக்குப் பின் அவர்கள் ஒவ்வொருவரும் தங்களையே மாய்த்துக்கொள்ளுமாறு அல்லாஹ் கட்டளையிட்டான். இந்த சட்டம் அதன் பின்னர் நீக்கப்பட்டது. இவையல்லாத இது போன்ற உதாரணங்கள் அதிகம் காணப்படுகின்றன. ஆக ஒரே மார்க்கச்சட்டத்தில் ஒரு சட்டத்தீர்ப்பு இன்னொரு சட்டத்தீர்ப்பின் மூலம் மாற்றப்பட்டுள்ளது என்பதையும் அல்லது இரு தனித்தனியான மார்க்கச்சட்டங்களுக்கு இடையில் மார்க்கத் தீர்ப்புகளில் வித்தியாசம் இடம்பெற்றுள்ளது என்பதை மேற்குறிப்பிட்ட உதாரணங்களிலிருந்து விளங்கிக்கொள்கிறோம்.

உதாரணத்திற்கு குறிப்பிட்ட வைத்தியரொருவர் தன்னிடம் சிகிச்சைக்காக வந்த நோயாளிக்கு குறிப்பிட்ட சில மருந்துகளின் மூலம் சிகிச்சையை துவங்குவார். காலம் செல்ல குறித்த நோயாளியின் சிகிச்சையில் ஏற்பட்டிருக்கும் படிமுறை மாற்றத்தின் காரணமாக அந்த மருந்தின் அளவை அதிகரிப்பார் அல்லது அதனை குறைத்து விடுவார். இவ்வாறாக இருக்கும் ஒரு மருத்துவரை பெரும் ஞானியாகவல்வா குறிப்பிடுகிறோம். அவ்வாறு இருக்கையில் அல்லாஹ் மனித நலன்களையெல்லாம் அறிந்தவன் என்ற அடிப்படையில் அவனுக்கே உயர் முன்மாதிரி உண்டு. அந்த வகையில் இஸ்லாமிய சட்டங்களில் -தீர்ப்புகளில் புதிய சட்டம் பழைய சட்டம் - என்றிருப்பது அல்லாஹ்வின் உயர்ஞானத்தை பறைசாட்டும் ஒரு விடயமாகும்.

அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் காலத்தில் ஒன்று திரட்டப்பட்ட அல்குர்ஆன் உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் காலத்தில் எரிக்கப்பட்டது என்பதின் விபரம் யாது?

உண்மையில் ஒரு விடயத்தை புரிந்து கொள்ளல் அவசியம். அதாவது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தமது தோழர்கள் ஓதுவதற்காகவும் பிறருக்கு கற்றுக் கொடுப்பதற்காகவும் அல்குர்ஆனை பதிவு செய்யப்பட்ட ஒரு ஆவணமாகவே விட்டுச்சென்றார்கள். அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆட்சிப்பொறுப்பை ஏற்றதும் பல ஏடுகளில் தொகுக்கப்பட்டதை பார்ப்பதற்கு இலகுபடுத்தல் என்ற நோக்கில் ஒரே இடத்தில் சேகரிக்குமாறு பணித்தார்கள். உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் காலத்தில் நகரங்களில் வசித்து வந்த ஸஹாபாக்களிடம், பல்வேறு அரேபிய வழக்குமொழிகளில் காணப்பட்ட ஏடுகளையும் பிரதிகளையும் ஏரித்து விடுமாறு பணிப்புரை விடுத்து, நபியவர்கள் விட்டுச்சென்ற மூலப்பிரதியான அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களால் ஒன்று திரட்டப்பட்டு வைக்கப்பட்ட அல்குர்ஆனின் புதிய பிரதிகளை அவர்களுக்கு அனுப்பிவைத்தார். இதன் மூலம் நபியவர்கள் விட்டுச்சென்ற ஒரே மூலப் பிரதியை இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் அனைத்து நகரங்களிலும் மக்கள் பயன்படுத்துவதற்கான உத்தரவாதத்தை ஏற்படுத்திக்கொடுத்தார்.

ஆக அல்குர்ஆன் எந்த மாற்றமுமின்றி அதன் மூல வடிவில் இன்றுவரை இருந்து கொண்டிருக்கிறது. அது முஸ்லிம்களின் வாழ்வோட்டத்தில் எல்லாக் காலங்களிலும் இணைபிரியா ஒரு அம்சமாகவும் காணப்படுகிறது. அவர்கள் அதனை தங்களுக்கு மத்தியில் பகிர்ந்து கொள்வதுடன் அதனை தொழுகைகளிலும் அன்றாடம் ஓதியும் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.