இதனை பின்வருமாறு விளக்க முடியும். அதாவது இப்புவிப் பந்தில் வாழும் மனிதர்கள் ஆகாயத்தில் பறப்பவர்களை ஒத்தவர்கள். உதாரணத்திற்கு பல்வேறு கலாச்சாரப் பின்புலங்களைக் கொண்டோர் ஒரு விமானத்தில் ஏறுகிறார்கள் எனக் கொள்வோம், அந்த விமானம் அவர்களை எங்கு கொண்டு செல்கிறது, அதனை ஓட்டிச்செல்பவர் யார் என்பதோ அவர்களுக்குத் தெரியாது, அது மத்திமரமின்றி எல்லா காரியங்களையும் தாங்களே சுயமாக செய்து கொள்ளவேண்டும், விமானத்தின் உள்ளே ஏற்படும் அசௌகரியங்கள் கஷ்டங்கள் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் நிர்பந்திக்கப்படுகிறார்கள் என வைத்துக்கொள்வோம்.
அவ்வேளை விமானியிடமிருந்து விமானப்பணியாளர் குழு ஒருவர் மூலமாக ஒரு செய்தி அவர்களுக்கு கிடைக்கிறது. அவர் அவர்களிடம் வந்து விமானத்தில் இருப்பதன் நோக்கம் குறித்தும் அவர்கள் செல்லும் இடம் குறித்தும் விமானம் இறங்கும் இடம் குறித்தும் விவரிப்பதுடன், விமானியின் ஆளுமைப்பண்புகள் குறித்தும் அவருடன் தொடர்பு கொள்வதற்கான வழிகளையும் தெளிவு படுத்துகிறார் என்று நாம் வைத்துக்கொண்டால் இது குறித்த பயணிகளின் கருத்துக்கள் பின்வருமாறு அமையும்.
அதில் முதலாம் பயணி : உண்மையில் இந்த விமானத்திற்கு ஒரு விமானி (பைலட்) உள்ளார் என்றும் அவர் இரக்கசுபாவம் கொண்டவர் என்றும் நாம் தடுமாற்றத்தில் இருக்காது இருப்பதற்காக எமது சந்தேகங்களுக்கு பதிலளிக்கவே இவரை அனுப்பியுள்ளார் என்று கூறுகிறார்.
இரண்டாவது பயணி : இந்த விமானத்திற்கு எந்த விமானியும் (பைலட்டும்) கிடையாது, விமானியினால் அனுப்பப்பட்டவரை நான் நம்ப மாட்டேன் என்றும், நாம் எந்த ஒன்றின் துணையில்லாமலே வந்தோம், எனவே இங்கே எந்த நோக்கமும் கிடையாது என்று கூறுகிறார்.
மூன்றாவது பயணி : எம்மை யாரும் இங்கு கொண்டுவரவில்லை. நாமெல்லாம் தற்செயலாக ஒன்று திரட்டப்பட்டோம் என்று கூறுகிறார்.
நான்காம் ஒருவர் : விமானத்திற்கு ஒரு விமானி (பைலட்) இருக்கிறார், அவரால் அனுப்பப்பட்டவர் அவரின் மகனாவார், அந்த விமான ஓட்டி எம்முடன் இருப்பதற்காக அவரின் மகனின் தோற்றத்தில் வந்தார் என்கிறார்.
ஜந்தாமவர் : இந்த விமானத்திற்கு ஒரு விமான ஓட்டி (பைலட்) உண்டு, ஆனால் அவர் எவரையும் தகவலளிப்பதற்கு அனுப்பவில்லை என்கிறார். விமானி எங்களுடன் இருப்பதற்கு அவர் விரும்பிய தோற்றத்தில் எல்லாம் அவதாரம் எடுப்பார் என்றும் எங்களின் இப்பயணத்திற்கு முடிவு கிடையாது, நாம் இந்த விமானத்தின் உள்ளேதான் தொடர்ந்தும் இருப்போம் என்கிறார்.
ஆறாமவர் : இந்த விமானத்திற்கு எந்த விமானியும் (பைலட்) கிடையாது, அதனால் ஒரு அடயாளக் குறியீட்டு கற்பனை விமானியை நான் எடுத்துக்கொள்ள விரும்புகிறேன் என்று குறிப்பிடுகிறார்.
ஏழாமவர் : விமானத்திற்கு விமானி உண்டு. ஆனால் நாம் இந்த விமானத்தில் ஏறினோம் அது சுயமாக இயங்குகிறது. அந்த விமானியோ எமது விவகாரங்களிளோ விமானத்தின் விவகாரகங்களிலோ எந்த தலையீடும் செய்ய வில்லை என்கிறார்.
எட்டாவது ஒரு பயணி இவ்வாறு குறிப்பிடுகிறார் : இந்த விமானத்திற்கு ஒரு விமானி இருக்கிறார், அவரின் தூதுவரை நான் மதிக்கிறேன், ஆனால் விமானத்தினுள்ளே ஒரு செயல் நல்லதா கெட்டதா என்பதை தீர்மானிக்க, சட்டங்கள் தேவையில்லை. எமது செயற்பாடுகள் யாவும் எமது மனவிருப்பம் மற்றும் ஆசைகளின் அடிப்படையில் இருக்க வேண்டும் என விரும்புகிறோம். ஆகையால் எமக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் எல்லாவகையான விடயங்களையும் சுதந்திரமாக செய்வோம் என்கிறார்.
ஒன்பதாவது பயணி : இந்த விமானத்திற்கு ஒரு விமானஓட்டி (பைலட்) இருக்கிறார், அவர் எனக்குரிய ஒரே விமானியாக இருக்கிறார். நீங்கள் அனைவரும் எனக்கு பணிபுரிய வந்த ஊழியர்களே என்றும் எந்த சந்தர்பத்திலும் நீங்கள் உங்கள் இலக்கை அடைந்து கொள்ளமாட்டீர்கள் என்கிறார்.
பத்தாவது நபர் : பைலட் 'விமானியின்' இருப்பானது ஒப்பீட்டு ரீதியானது, அவர் இருப்பதை நம்புவோருக்கு அவர் இருக்கிறார், எவர்கள் இல்லையென்று நம்புகிறார்களோ அவர்களுக்கு இல்லையென்பதாகும். அதாவது ஒவ்வொரு பயணியும் அந்த விமானி பற்றியும் பயணத்தின் நோக்கம் குறித்தும் பயணிகளிளுடன் நடந்துகொள்ளும் முறை குறித்தும் எதனை கற்பனையில் கொண்டிருக்கிறார்களோ அவைகள் அனைத்தும் சரியானவையே என்று கூறுகிறார்.
இந்தக்கற்பனை கதையானது தற்போது இப்பூமியில் வாழும் மனிதர்களின் உண்மைக் கருதுகோள்கள் குறித்த விம்பத்தை குறிப்பிடுவதுடன், இந்தப் பூமியின் அடிப்படைத் தோற்றம் இவ்வாழ்க்கையின் இலக்கு குறித்த ஒரு தோற்றப்பாட்டையும் தருகிறது.
இந்த உதாரணத்தின் மூலமாக நாம் சாதாரணமாக விளங்கிக் கொள்ள முடியுமான ஒரு விடயம் என்னவெனில், இங்கே விமானத்தை செலுத்துவதற்குரிய பயிற்சியைப்பெற்ற ஒரு விமானி இருக்கிறார் என்பதும் அவர் குறிப்பிட்ட ஒரு இலக்கிலிருந்து இன்னொரு இலக்கு நோக்கி செலுத்துகிறார் என்பதையும் இவ்விடயத்தில் எவரும் முரண்படாது ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளனர் என்பதையும் புரிந்து கொள்ளமுடிகிறது.
விமானத்தின் பைலட் இருப்பதை மறுப்பவர் அல்லது அந்த விமானி குறித்து பல கருத்துக்களைக் கொண்டவர் இதற்கான விளக்கத்தையும் தெளிவுபடுத்தலையும் வழங்க வேண்டும், இவ்வாறான கருத்துக்கொண்டவரின் நிலை சரி மற்றும் தவறுக்கு உட்படக்கூடிய சாத்தியப்பாடு அதிகமாவே உள்ளது!.
இந்த சாதாரண உதாரணத்தை படைப்பாளனின் இருப்புக் குறித்த விடயத்தில் பிரயோகிப்போமேயானால் இந்த பிரபஞ்ச தோற்றம் குறித்து பல்வேறுவகையான கோட்பாடுகள் ஒரு குறிப்பிட்ட பொதுவான யதார்த்தத்தின் இருப்பை மறுதலித்துவிடாது என்பதை எம்மால் கண்டுகொள்ள முடியும். அப்பொதுவான யதார்த்தம் :
எந்த சந்ததியும், இணையும் இல்லாத ஏகனும் ஒரே படைப்பாளனுமாகிய இறைவன் தனது படைப்பினங்கிலிருந்து சுயாதீனமானவனாக உள்ளான். அவன் அந்தப் படைப்பினங்களின் எந்த ஒன்றின் வடிவிலும் பிரதிபலிக்க மாட்டான். இந்த உலகமே ஒன்று சேர்ந்து படைப்பாளனான கடவுள் உதாரணத்திற்கு ஒரு மிருகத்தின் வடிவிலோ அல்லது மனிதனின் தோற்றத்திலோ அவதாரமெடுப்பான் என்று ஒரு கருத்தாக்கத்தை ஏற்படுத்தி அதனை ஏற்றுக்கொள்ள முனைந்தாலும் ஏகவல்லோனாகிய கடவுள் அவ்வாறு மாற மாட்டார். இந்நிலையிலிருந்து அல்லாஹ் மிகவும் தூயவனகவும் உயர்ந்தோனாகவும் உள்ளான்.
படைப்பாளனான இறைவன் நீதியாளனாவான். நல்லனவற்றிற்கு வெகுமதியை வழங்குவதும், தீயனவற்றிற்கு தண்டனை வழங்குவதும் அவனின் நேர்மைக்கு சான்றாகும். அவன் எப்போதும் மனிதர்களுடன் தொடர்புள்ளவனாக இருப்பதுடன், அவன் மனிதர்களைப் படைத்து விட்டு அவர்களை கைவிடுபவனாக ஒரு போதும் இருக்க மாட்டான் என்பதே பேருண்மையாகும். இதன் காரணமாகத்தான் அவன் தனது நேரான பாதையை தெளிவு படுத்தி அவனை முறையாக வணங்குவதற்கு, எந்த ஒரு பாதிரியாரோ, துறவியோ அல்லது எந்த இடைத்தரகரோ இல்லாமல், அவனை மட்டுமே நாடி புகழிடம் தேட வேண்டும் என்பதற்கான வழிமுறையை எத்திவைப்பதற்காக அவனின் தூதர்களை அனுப்பிவைத்தான். இந்த வழியைப் பின்பற்றுபவர்கள் வெகுமதிக்கு தகுதியானவர்கள், அதே நேரத்தில் அதிலிருந்து விலகியவர்கள் தண்டனைக்கு தகுதியானவர்கள். இதன் விளைவு சொர்க்கத்தின் பேரின்பம் மற்றும் நரக வேதனையின் மூலம் மறுமை வாழ்வில் வெளிப்படுகிறது.
இந்த சீரிய வழிகாட்டலே 'இஸ்லாம் மார்க்கம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. இதுவே சத்திய மார்க்கமும் வழியுமாகும். இதனையே தனது அடியார்களுக்கு ஒரே மார்க்கமாக படைப்பாளனான இறைவன் ஏற்றுக்கொண்டிருக்கிறான்.
அவ்வாறு அமையாது. உதாரணத்திற்கு ஒரு முஸ்லீம் திரித்துவக் கோட்பாட்டில் நம்பிக்கை கொள்ளாததால்; அவர் இறைராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டார் என்ற அடிப்படையில் அவரை ஒரு காஃபிர் -கிறிஸ்துவத்தை ஏற்காதவர்- என்று கிறிஸ்தவர் கருதுகிறார்களே! இதே போன்றுதான் இஸ்லாத்தை வாழ்க்கைநெறியாக ஏற்காதவர் யாராயினும் அவர்களுக்கு அரபு மொழியில் காபிர் என்ற வார்தை பயன்படுத்தப்படுகிறது. 'குப்ர்' என்ற வார்த்தைக்கு உண்மையை அல்லது சத்தியத்தை மறுப்பது என்று பொருள், முஸ்லீம்களுக்கு உண்மை, சத்தியம் என்பது ஏகத்துவமாகும். கிறிஸ்தவர்களைப் பொருத்தவரை அவர்களது மதத்தின் அடிப்படையில் சத்தியம் என்பது திரித்துவமாகும்.