Applicable Translations हिन्दी සිංහල English Español ગુજરાતી عربي

அல்குர்ஆனில் வந்த விடயங்கள் பிரயோக விஞ்ஞானத்தினுடன் முரண்படுகிறதா?

இஸ்லாம் ஒரு போதும் பிரயோக விஞ்ஞானத்துடன் முரண்படுவதில்லை. மாறாக அல்லாஹ்வை இறைவனை ஏற்றுக்கொள்ளாத மேற்குலக விஞ்ஞானிகளில் பலர் தங்களது அறிவியல் ஆய்வின் மூலமாக படைப்பாளனின் இருப்பு இன்றியமையாத ஒன்று என்ற முடிவுக்கு வந்துள்ளனர். இவ்வறிவியல் ஆய்வே அவர்களை இந்த யதார்த்தத்தின் பால் அழைத்துச்சென்றுள்ளது. இஸ்லாம் பகுத்தறிவு மற்றும் சாதாரண சிந்தனை சார் தர்க்கவியலை மிகைத்து பிரபஞ்சத்தைப் பற்றி சிந்திக்கவும் கூர்ந்து அவதானிக்கவும் அது தூண்டுகிறது.

மேலும், இஸ்லாம் அல்லாஹ்வின் அத்தாட்சிகளையும் பிரபஞ்சத்தின் அற்புதமான படைப்புகளையும் சிந்திக்குமாறு அனைத்து மனிதர்களுக்கும் அழைப்பு விடுப்பதோடு இந்தப் பூமியில் சுற்றித்திரிந்து, பிரபஞ்சத்தைக் நோட்டமிடுமாறும், பகுத்தறிவு,சிந்தனை மற்றும் சிந்தனை சார் தர்க்கத்தைப் பயன்படுத்தவும் ஊக்குவிக்கிறது. மேலும், இந்தப்பிரபஞ்சம் மற்றும் ஆன்மா குறித்த அற்புதங்களை பல தடவைகள் மீட்டிப்பார்க்குமாறு அழைப்பு விடுக்கிறது. இவற்றிற்கான பதில்களை தேடுவோர் இப்பிரபஞ்ச காரணகர்த்தாவை நிச்சயம் கண்டு கொள்வர் என்பதில் எவ்விதச் சந்தேகமில்லை. மேலும் இந்த பிரபஞ்சம் மிக நுணுக்கமாக, உயரிய நோக்கத்துடனும் நாட்டத்துடனும் வசப்படுத்தப்பட்டதாக உருவாக்கப்பட்ட ஒன்று என்ற முழுமையான உறுதிமிக்க முடிவுக்கு வருவதுடன், இறுதியில் இஸ்லாம் அழைப்புவிடுக்கும் அல்லாஹ்வைத் தவிர உண்மையான கடவுள் எவரும் கிடையாது என்ற முடிவுக்கு வந்து விடுவர்.

அல்லாஹ் கூறுகிறான் :

"அவனே ஏழு வானங்களையும் தட்டுத் தட்டாகப் படைத்தான். மகா கருணையாளனான அவனின் படைப்பில் நீ எவ்விதக் குறைபாட்டையும் காணமாட்டீர். அவ்வாறாயின் உனது பார்வையை அதனை நோக்கி செலுத்துவீராக, அவற்றில் ஏதேனும் அவற்றில் ஏதேனும் கோளாறுகளைக் காண்கிறீரா? மேலும் இரு முறைப் பார்! (இவ்வாறு நீ எத்தனை முறை துருவித் துருவிப் பார்த்த போதிலும் ஒரு குறையையும் காண முடியாது.) உன் பார்வைதான் அலுத்து, கேவலமுற்று உன்னிடம் திரும்பிவிடும்". (அல்முல்க்:3-4). تقدم

"நிச்சயமாக இவ்வேதம் உண்மையானதுதான் என்று அவர்களுக்குத் தெளிவாகும் பொருட்டு, நம் அத்தாட்சிகளை (உலகத்தின்) பல பாகங்களிலும் காண்பிப்பதுடன், அவர்களுக்குள்ளாகவும் அதிசீக்கிரத்தில் நாம் (நமது அத்தாட்சிகளைக்) காண்பிப்போம். (நபியே!) உமது இறைவன் நிச்சயமாக அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது (உமக்கு) போதாதா?". (புஸ்ஸிலத் : 53) . - تقدم

"வானங்கள் மற்றும் பூமியைப் படைத்ததிலும், இரவு பகல் மாறி மாறி வருவதிலும், மனிதர்களுக்குப் பயன் தருபவற்றை கடலில் கொண்டு செல்லும் கப்பல்களிலும், வானத்திலிருந்து அல்லாஹ் மழையை இறக்கி பூமி இறந்த பின் அதனை அவன் இதன் மூலம் உயிர்ப்பிப்பதிலும், எல்லாவிதமான உயிரினங்களை அவன் பரவச் செய்திருப்பதிலும், காற்றுகளை சுழலச்செய்வதிலும், வானம் பூமிக்கிடையில் வசப்படுத்தப்பட்டுள்ள மேகத்திலும் விளங்கிக் கொள்ளும் சமூகத்திற்கு பல அ த்தாட்சிகள் உள்ளன". (அல்பகரா:164). تقدم

"அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் உங்களுக்காக (படைத்துத்) தன் அதிகாரத்துக்குள் வைத்திருக்கிறான். (அவ்வாறே) நட்சத்திரங்கள் அனைத்தும் அவனுடைய கட்டளைக்கு உட்பட்டவையாகவே இருக்கின்றன. நிச்சயமாக இதிலும் சிந்தித்து அறியக்கூடிய மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன". (அந்நஹ்ல் :12) تقدم

"(எவருடைய உதவியுமின்றி) நம் சக்தியைக் கொண்டே வானத்தை அமைத்தோம். நிச்சயமாக நாம் (அதை அவர்களின் அறிவிற்கெல்லாம் எட்டாதவாறு) மிக்க விசாலமாக்கியும் வைத்திருக்கிறோம்". (அத்தாரியாத் : 47). تقدم

"(நபியே!) நிச்சயமாக அல்லாஹ்தான், மேகத்திலிருந்து மழையை பொழியச் செய்து, அதைப் பூமியில் ஊற்றுக்களாக ஓடச் செய்கிறான். பின்னர், அதைக் கொண்டு பல நிறங்களையுடைய (பலவகைப்) பயிர்களை வெளிப்படுத்துகிறான். பின்னர், அவை (கருக்கொண்டு) மஞ்சள் நிறமாக இருக்கக் காண்கிறீர்கள். பின்னர், அதைக் காய்ந்த சருகுகளாக ஆக்கிவிடுகிறான் என்பதை நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக இதில் அறிவுடையவர்களுக்கு நல்ல படிப்பினை இருக்கிறது''. (அஸ்ஸுமர் :21). நவீன அறிவியலால் இப்போது கண்டுபிடிக்கப்பட்ட நீர் சுழற்சி 500 ஆண்டுகளுக்கு முன்பு விவரிக்கப்பட்டது. அதற்கு முன், கடலில் இருந்து தண்ணீர் வந்து நிலத்தில் ஊடுருவி, அதனால் நீரூற்றுகள் மற்றும் நிலத்தடி நீர் உருவானது என்று மக்கள் நம்பினர். மண்ணில் உள்ள ஈரம் குவிந்து நீரை உருவாக்குவதாகவும் நம்பப்பட்டது. 1400 ஆண்டுகளுக்கு முன்பு நீர் எப்படி உருவானது என்பதை அல்குர்ஆன் தெளிவாகக் கூறியுள்ளது.

"நிச்சயமாக வானங்களும் பூமியும் இணைந்தே இருந்தன. நாமே அவ்விரண்டையும் பிரித்தோம், என்பதையும் உயிருள்ள ஒவ்வொன்றையும் நீரிலிருந்து நாமே உருவாக்கினோம் என்பதையும் நிராகரித்தோர் அறியவில்லையா? அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா?". (அல் அந்பியாஃ : 30). நவீன அறிவியலால் நீரில் உயிர் உருவானது என்றும் முதல் செல்லின் (உயிர் கலத்தின்) அடிப்படைக் கூறு நீர் என்றும் கண்டுபிடிக்க முடிந்தது. இந்த தகவல் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. அதே போல் தாவர உலகின் சமநிலை குறித்த விடயமும் இவ்வாறுதான். இந்த விடயங்களை முஸ்லிம்கள் அறிவியல் கண்டுபிடிப்பிற்கு முன்னரே அல்குர்ஆனின் ஊடாக அறிந்திருநதனர். இதன் மூலம் அல்குர்ஆன் நபி முஹம்மது மனோ இச்சைப்பிரகாரம் எதையும் பேசுவதில்லை என்பதை நிரூபித்துள்ளது.

"நிச்சயமாக நாம்(ஆரம்பத்தில் முதல்) மனிதனை களிமண்ணின் மூலத்திலிருந்து படைத்தோம். பின்னர் பாதுகாப்பான ஓரிடத்தில் அவனை நாம் இந்திரியத்துளியாக வைத்தோம். பின்னர் இந்திரியத்துளியை கருவறைச்சுவரில் ஒட்டிக்கொள்ளக் கூடியதாகப் படைத்தோம், பின்னர் (கருவறைச்சுவரில்) ஒட்டிக் கொள்ளக்கூடியதை சதைப்பிண்டமாக்கினோம். பின்னர் சதைப்பிண்டத்தைப் எலும்பாக்கி, எலும்பை சதையால் போர்த்தினோம். பின்னர் அவனை வேறொரு படைப்பாக ஆக்கினோம். படைப்பாளர்களில் மிகச்சிறந்தவனான அல்லாஹ் மிக உயர்ந்தவனாவான்”.(அல்முஃமினூன் : 12- 14). கனேடிய விஞ்ஞானி, கீத் மூர், உலகின் மிக முக்கியமான உடற்கூறியல் மற்றும் கருவியல் வல்லுநர்களில் ஒருவர், அவர் பல பல்கலைக்கழகங்களில் உயர் பதவிகளை வகித்தவர், அத்துடன்; கனடா மற்றும் அமெரிக்காவில் உள்ள உடற்கூறியல், கருவியல் நிபுணர் சங்கம் மேலும் உயிரியல் விஞ்ஞான ஒன்றியம் (கவுன்சில்) போன்ற பல சர்வதேச அறிவியல் சங்கங்களுக்குத் தலைவராகவும் இருந்துள்ளார், அதே போல் 1980 இல் கனடாவின் ரோயல் மெடிக்கல் சொசைட்டி, இன்டர்நேஷனல் அகாடமி ஆஃப் சைட்டாலஜி, அமெரிக்கன் ஃபெடரேஷன் ஆஃப் அனாடமிகல் பிசிஷியன்ஸ் மற்றும் அசோசியேஷன் ஆஃப் தி அனாடமி ஆகியவற்றின் உறுப்பினராகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1980 ஆம் ஆண்டில்,கீத் மூர்' புனித குர்ஆனையும், கரு உருவாவது தொடர்பான வசனங்களையும் படித்த பிறகு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். அந்த வசனங்கள் நவீன அறிவியலுக்கு முன்னே கரு வளர்ச்சி தொடர்பான விடயங்களை துல்லியமாக குறிப்பிட்டிருந்தன. இதுவே அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்கான பிரதான காரணமாக அமைந்தது. அவர் இஸ்லாத்திற்கு மாறிய கதையை பின்வருமாறு விவரிக்கிறார்: நான் எழுபதுகளின் பிற்பகுதியில் மொஸ்கோவில் நடைபெற்ற அறிவியல் அற்புதங்கள் பற்றிய சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டேன். அந்த மாநாட்டில் சில இஸ்லாமிய அறிஞர்கள் பிரபஞ்ச அற்புதம் குறித்த வசனங்களை எடுத்துக்காட்டினர். குறிப்பாக ஸுறா ஸஜ்தாவின் பின்வரும் இறை வசனத்தைக் குறிப்பிட்னர். ''வானத்திலிருந்து பூமி வரை காரியங்களை அவனே நிர்வகிக்கின்றான். பின்னர், நீங்கள் கணிக்கின்ற ஆயிரம் வருடங்களுக்கு சமமான ஒரு நாளில் அவனின்பால் அது உயர்ந்து செல்லும்". (ஸுறதுஸ்ஸஜ்தா:வசனம் :05). தொடர்ந்தும் இஸ்லாமிய அறிஞர்கள் கருவின் உருவாக்கம் மற்றும் மனித உருவாக்கம் பற்றிப் பேசும் வேறு பல வசனங்களை தொடர்ந்தும் விவரித்தனர். அல் குர்ஆனின் மற்ற வசனங்களை விரிவாக அறிந்து கொள்வதில் எனக்கு இருந்த ஆர்வத்தின் காரணமாக, நான் தொடர்ந்து கேட்டேன். இந்த வசனங்கள் அனைவருக்கும் தக்க பதிலை கொடுத்தது. அந்த வசனங்கள் எனக்குள் ஒரு சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தியது. நான் அறிய விரும்பிய விடயமல்லவா இது என உணரலானேன். இதையல்லவா நான் பல ஆண்டுகளாக ஆய்வகங்கள் மற்றும் ஆராய்ச்சிகள் ஊடாகவும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியும் தேடிக் கொண்டிருக்கிறேன்!. ஆனால் தொழில்நுட்பம் மற்றும் அறிவியலுக்கு முன் அல் குர்ஆன் விவரித்த கருவளச்சி தொடர்பான விடயங்கள் விரிவானதாகவும் முழுமையானதாகவும் இருந்தது என்கிறார்.

''மனிதர்களே! (மரணித்த பின்)மீண்டும் எழுப்பப்படுவது பற்றி சந்தேகத்தில் இருந்தீர்களானால், (அறிந்து கொள்ளுங்கள்;) நிச்சயமாக நாம்தான் உங்களை (முதலில்) மண்ணிலிருந்தும், பின்னர் இந்திரியத்திலிருந்தும், பின்பு கருவரைச்சுவரில் ஒட்டிக் கொள்ளக் கூடியதிலிருந்தும் பின்னர் வடிவமைக்கப்பட்டதும்; வடிவமைக்கப்படாததுமான சதைப் பிண்டத்திலிருந்தும் படைத்தோம். உங்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவே (இதனை விவரிக்கிறோம்). மேலும், நாம் நாடியவற்றை ஒரு குறிப்பிட்ட காலம் வரை கருப்பையில் தரிபடுத்துகிறோம். பின்பு உங்களை சிசுவாக வெளியேற்றுகின்றோம். பின்பு நீங்கள் உங்கள் வாலிபத்தை அடையும்படிச் செய்கிறோம். அன்றியும், (இதனிடையில்) உங்களில் சிலர் மரிப்பவர்களும் இருக்கிறார்கள். அறிந்த பின் ஒன்றுமே அறியாதவர்களைப் போல் ஆகிவிடக்கூடிய தளர்ந்த வயது வரை விட்டுவைக்கப்படுபவர்களும் இருக்கிறார்கள், இன்னும், நீங்கள (தரிசாய்க் கிடக்கும்) வரண்ட பூமியைப் பார்க்கின்றீர்கள்; அதன் மீது நாம் (மழை) நீரைப் பொழியச்செய்தால் அது அதிர்வுற்று வளமாகி அழகான பல்வகைப் புற்பூண்டுகளை முளைப்பிக்கிறது". (அல் ஹஜ்: 5). நவீன அறிவியல் கண்டுபிடித்தது போல் கரு வளர்ச்சியின் துள்ளியமான சுழற்சி இதுதான். (هذا الكلام يوضع عقب كلام كيث مور ، وقبل موضوع النبي الخاتم