பொதுவான தோற்றம் -அடிப்படை- குறித்த பரிணாமாவியல் கருத்திற்கான திருப்தியான ஆதாரங்களை அறிவியல் முன்வைக்கிறது. அதனையே அல்குர்ஆனும் குறிப்பிடுகிறது.
அல்லாஹ் கூறுகிறான் :
''உயிருள்ள அனைத்தையும் நீரிலிருந்தே நாம் படைத்தோம், அவர்கள் நம்ப வேண்டாமா?'' (அன்பியாஃ : 30). تقدم
அல்லாஹ் உயிரினங்களை திறன்வாய்ந்ததாகவும், இயல்பில் தமது சூழலுடன் இயைந்து செல்லக் கூடியதாகவும் படைத்துள்ளான். அவைகளின் அளவு, தோற்றம் மற்றும் நீளம் போன்றவை விருத்தியடைய முடியும். உதாரணத்திற்கு செம்மறியாட்டை எடுத்துக் கொள்வோம். அவை குளிரான பிரதேசத்தில் வாழ்பவையாக இருப்பின் அக்குளிரிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்குரிய தோலையும் பெற்றிருக்கும். சீதோசன வெப்ப நிலைக்கேட்ப -அதன் உரோமங்கள் -கம்பளி குறைவாகவோ அல்லது அதிகமானதாகவே இருக்கலாம். ஆகவே வடிவங்களும் வகைகளும் சூழல் வேறுபாட்டிற்கேட்ப வித்தியாசப்படும். இவ்விவகாரத்தில் மனிதர்களும் கூட அவர்களின் நிறம், குணம், மொழி, வடிவம் ஆகியவற்றில் வேறுபட்டுள்ளனர். அந்தவகையில் ஒரு மனிதனை ஒத்த இன்னொரு மனிதன் இருக்க முடியாது. என்றாலும் அவர்கள் அனைவரும் மனிதர்களாவே உள்ளனர். விலங்குளின் இன்னொரு வகையினராக மாறமாட்டார்கள். அல்லாஹ் கூறுகிறான் :
"வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதும், உங்கள் மொழிகளும், நிறங்களும் வெவ்வேறாக இருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். இதிலும் அறிவுடையோருக்கு நிச்சயமாகப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன". (அர்ரூம் : 22). تقدم
"மேலும், எல்லா உயிர்ப் பிராணிகளையும் அல்லாஹ் நீரிலிருந்து படைத்துள்ளான்; அவற்றில் தன் வயிற்றின் மீது நடப்பவையும் உண்டு; அவற்றில் இரு கால்களால் நடப்பவையும் உண்டு; அவற்றில் நான்கு (கால்)களை கொண்டு நடப்பவையும் உண்டு; தான் நாடியதை அல்லாஹ் படைக்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கின்றான்".(நூர்:45). تقدم
ஒரு படைப்பாளனின் இருப்பை மறுப்பதை நோக்காகக் கொண்டு உருவாக்கப்பட்ட பரிணாமக் கோட்பாடு, அனைத்து உயிரினங்கள், விலங்குகள் மற்றும் தாவரங்கள் யாவும் ஒரு பொதுவான தோற்றம் கொண்டவை என்றும், அவை ஒரே தோற்றத்தில் இருந்து உருவானது என்றும், இது ஒரு உயிர் கலம் என்றும் கூறுகிறது. முதல் உயிரணு உருவாக்கமானது நீரில் உள்ள அமினோ அமிலங்களின் கலவையின் விளைவாகும். இது டிஎன்ஏ வின் முதல் கட்டமைப்பை உருவாக்கியது. இது உயிரினத்தின் மரபணு பண்புகளைக் கொண்டுள்ளது. இந்த அமினோ அமிலங்களின் கலவையுடன், ஒரு உயிரணுவின் முதல் அமைப்பு உருவாக்கப்பட்டது. அத்துடன் பல்வேறு சுற்றுச்சூழல் மற்றும் வெளிப்புற காரணிகளின் விளைவாக, இந்த உயிரணுக்களின் பெருக்கத்திற்கு வழிவகுத்தது, இது முதல் விந்தணுவை உருவாக்கியது, பின்னர் ஒரு அட்டையாக வளர்ந்தது, அதன் பின்னர் ஒரு சதைத் துண்டாக உருவானது.
இங்கே நாம் அவதானிக்கும் அடிப்படையில் மேற்குறிப்பிட்ட உயிரின உருவாக்கத்திற்கான இந்நிலைகள் யாவும் தாயின் வயிற்றில் மனித உருவாக்கத்தின் நிலைகளுடன் மிகவும் ஒத்துப்போவதை காணமுடிகிறது. இருப்பினும், உயிரினங்கள் அதன் வளர்ச்சியுடன் நின்றுவிடுகிறது. DNAவில் கொண்டுள்ள அதன் மரபணு பண்புகளின்படிக்கு ஏற்பவே ஒரு உயிரினம் உருவாகிறது. உதாரணத்திற்கு தவளைகளை எடுத்துக்கொள்வோம். அவை அதன் வளர்ச்சி –விருத்தி- முழுமைபெற்றதும் அவை தவளைகளாகவே உள்ளன என்பதை நாம் பார்க்கிறோம். ஆகவே மரபணுப் பண்புகளுக்கேற்ப வளர்ச்சி முழுமைபெற்ற அனைத்து உயிரினங்களின் நிலையும் இது போன்றுதான் அமையும் என்பதை நாம் புரிந்து கொள்ளல் வேண்டும்.
புதிய உயிரினங்களின் தோற்றத்தில், மரபணு மாற்றங்கள் பரம்பரை பண்புகளில் அவற்றின் தாக்கம் குறித்த விவகாரத்தை உள்ளடக்கினாலும், அது படைப்பாளனின் வல்லமை மற்றும் அவனின் நாட்டத்தையும் எவ்வகையிலும் பொய்ப்படுத்திடாது. இருப்பினும், நாத்திகர்கள் உயிரின தோற்றமானது சீறற்ற முறையில் (ஒரு ஒழுங்கமைப்பின்றி) நிகழும் ஒன்று எனக் கூறுகிறார்கள். அதே வேளை பரிணாமவியல் கோட்பாடானது, இவை யாவும் பல பரிணாம நிலைகள் ஊடாகவே உருவாகிறது என்பதையும், அவை மிகவும் ஆழ்ந்த அறிவும் நுணுக்கமும் புலமைத்துவமிக்க ஒருவனின் உயர் திட்டமிடலுடனும், நோக்கத்துடனுமே நிகழ்கிறது என்பதையும் உறுதிப்படுத்துகிறது. இதனடிப்படையில் இறைப்பரிணாமவியலை ஏற்று இயல்பாக, ஒழுங்கின்றி நிகழும் உயிரின உருவாக்கத்தை மறுதலிக்க வேண்டும். அத்துடன் இம்மாபெரும் உயிரியல் பரிணாமத்தின் பின் ஞானமும் வல்லமையும் ஆழ்ந்த அறிவுமிக்க ஒருவனின் பங்களிப்பை ஏற்றாக வேண்டும். ஆகவே இந்த அடிப்படையில் பரிணாமத்தை ஏற்று டார்வினிஸ பரிணாமவியலை முழுமையாக நிராகரித்து விடலாம். 'எனது சகாக்களில் பாதி பேர் முற்றிலும் முட்டாள்கள் என்றே கருதுகிறேன். அல்லது டார்வினிசக் கோட்பாடானது மதத்துடன் இயைந்து செல்லும் அதிகமான கருத்துக்களை உள்ளடக்கியுள்ளது' என மூத்த தொல்லியல் நிபுணரும் உயிரியலாளருமான ஸ்டீபன் ஜூல் குறிப்பிடுகிறார்.