Applicable Translations English Español ગુજરાતી हिन्दी සිංහල 中文 Русский عربي

அல்குர்ஆன் பரிணாமக் கோட்பாட்டின் கருத்தை எவ்வாறு சரிசெய்தது ?

அல்குர்ஆன் முதல் மனிதர் ஆதத்தின் சம்பவத்தை குறிப்பிடுவதனூடாக மனித பரிணாமக் கோட்பாட்டின் கருத்தியலை பின் வரும் விடயங்களின் ஊடாக சரிசெய்தது :

மனிதன் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட எப்பொருளாகவும் இருக்கவில்லை.

"திட்டமாக மனிதன் மீது காலத்தில் ஒரு நேரம் வந்து, அதில் அவன் இன்ன பொருள் என்று குறிப்பிட்டுக் கூறுவதற்கில்லாத நிலையில் இருக்கவில்லையா?". (அல் இன்ஸான் : 1) . تقدم

ஆதம் படைக்கப்பட்டது முதலில் களிமண்ணாலே :

"நிச்சயமாக (ஆரம்பத்தில் முதல்) மனிதனை களிமண்ணின் மூலச்சத்திலிருந்து படைத்தோம்". (முஃமினுன் :12). تقدم

"அவனே எல்லா பொருள்களையும் (படைத்து) அவற்றின் கோலத்தையும் மிக்க அழகாக அமைத்தான். ஆரம்பத்தில் மனிதனை களிமண்ணைக் கொண்டே படைத்தான்.(அஸ்ஸஜ்தா : 7). تقدم

"அல்லாஹ்விடத்தில் ஈஸாவின் உதாரணம் ஆதத்தின் உதாரணத்தைப் போன்றதாகும். அவன் அவரை மண்ணிலிருந்து படைத்து பின்னர் அவருக்கு 'குன்' ஆகுக என்றான். உடனே அவர் மனிதனாக ஆகிவிட்டார்'' (ஆல இம்ரான் 59). تقدم

மனித குலத்தின் தந்தை ஆதம் கண்ணியப்படுத்தப்பட்டுள்ளமை :

“இறைவன் கூறினான் : இப்லீஸே! நான் என்னுடைய இரு கைகளால் படைத்திருக்கும் இவருக்கு சிரம் பணிவதை விட்டு உன்னைத் தடுத்தது எது? நீ கர்வம் கொண்டு விட்டாயா? அல்லது நீ உயர் அந்தஸ்து உடையவர்களுள் ஒருவனாகி விட்டாயா?”. (ஸாத் : 75). تقدم

முதல் மனிதர் ஆதம் அலைஹிஸ்ஸலாம் (மனித குலத்தின் தந்தை) அவர்கள் களிமண்ணினால் மாத்திரம் விசேடமாக படைக்கப்படடமைக்காக சிறப்பிக்கப்பட்டார் என்பதல்ல, மாறாக மேலே குறிப்பிடப்பட்ட அல்குர்ஆன் வசனம் குறிப்பிடுவது போல் அவர்கள் அகிலத்தாரின் இரட்சகனான அல்லாஹ்வின் திருக்கையினால் நேரடியாக படைக்கப் பட்டமையும், அல்லாஹ்வுக்கு கட்டுப்படுமுகமாக மலக்குகள் அல்லாஹ்வால் அவருக்கு சிரம்தாழ்த்த பணிக்கப்பட்டமையுமாகும்.

“பின்னர், 'நீங்கள் ஆதத்துக்குப் பணியுங்கள்!' என்று வானவர்களுக்கு நாம் கட்டளையிட்டபோது அவர்கள் எல்லோரும்; பணிந்தார்கள் இப்லீஸைத் தவிர! அவன் கட்டளையை மறுத்தான். மேலும் ஆணவம் கொண்டுவிட்டான்; நிராகரிப்பவர்களில் ஒருவனாகவும் ஆகிவிட்டான்”. (அல் பகரா : 34). تقدم

ஆதத்தின் சந்ததிகள் படைக்கப்படல் :

"பின்னர் ஆதத்தின் சந்ததியை அற்பமான இந்திரியத்துளியினால் உண்டாக்கினான்". (ஸஜ்தா: 08). تقدم

"பின்னர் பாதுகாப்பான ஓரிடத்தில் அவனை நாம் இந்திரியத்துளியாக வைத்தோம். பின்னர் இந்திரியத்துளியை கருவறைச்சுவரில் ஒட்டிக் கொள்ளக்கூடியதாகப் படைத்தோம், பின்னர் (கருவறைச்சுவரில்) ஒட்டிக்கொள்ளக்கூடியதை சதைப்பிண்டமாக்கினோம். பின்னர் சதைப்பிண்டத்தைப் எலும்பாக்கி, எலும்பை சதையால் போர்த்தினோம். பின்னர் அவனை வேறொரு படைப்பாக ஆக்கினோம். படைப்பாளர்களில் மிகச்சிறந்தவனான அல்லாஹ் மிக உயர்ந்தவனாவான்”. (அல் முஃமினூன் : 13-14). تقدم

''அவன்தான் நீரிலிருந்து மனிதனைப்படைத்து அவனுக்கு தலைமுறையையும் திருமண உறவையும் ஆக்கினான். உமது இரட்சகன் பேராற்றலுடையவனாக இருக்கிறான்". (அல் புர்கான் : 54). تقدم

ஆதமின் சந்ததிகள் கண்ணியப்படுத்தப்பட்டுள்ளமை :

“நிச்சயமாக நாம் ஆதமுடைய சந்ததியினரை கண்ணியப்படுத்தினோம். இன்னும் தரையிலும் கடலிலும் நாம் சுமந்து சென்றோம். மேலும் நாம் தூய்மையானவற்றிலிருந்து அவர்களுக்கு உணவளித்தோம். நாம் படைத்த பலவற்றைவிடவும் இவர்களை மேன்மைப்படுத்தினோம்”. (அல் இஸ்ரா: 70 ). تقدم

முதல் மனிதர் ஆதத்தின் சந்ததிகள் தோற்ற நிலைகளான (அற்பமான நீர், இந்திரியத்துளி, கருவறையில் ஒட்டிக்கொள்ளும் இரத்தக்கட்டி, சதைக்கட்டி) போன்றவைகள் பரிணாம கோட்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள உயிரின உருவாக்கம் மற்றும் இனப்பெருக்கம் போன்ற விடயங்களுடன் ஒத்துப்போவதை அனுமானிக்க முடிகிறது.

"அவன் வானங்களையும் பூமியையும் படைத்தவன். அவன் உங்களுக்காக உங்களிலிருந்தே உங்கள் மனைவியையும் கால் நடைகளிலிருந்து ஜோடிகளையும் அமைத்து அதில் உங்களை பெருகச்செய்கின்றான். அவனைப் போன்று எதுவுமில்லை. அவன் செவியேற்பவன் பார்ப்பவன்". (அஷ்ஷுறா :11). تقدم

படைப்பின் அடிப்படை மூலம் ஒன்று என்பதையும் படைப்பாளனின் தனித்துவத்தையும் எடுத்துக்காட்டவே ஆதத்தின் சந்ததிகளின் துவக்கம் அற்பமான நீரிலிருந்து அமைந்தாக அல்லாஹ் ஆக்கிவைத்துள்ளதுடன், இந்தப் பூமியில் மனிதனை பிரதிநிதியாக்கியதில் அவனின் நுட்பத்தை திட்டப்படுத்திடவும், மனித இனத்தை கண்ணியப்படுத்தும் முகமாகவும் படைப்பில் மனிதன் ஏனைய படைப்புகளிலிருந்து தனித்துவமானவன் என்பதையும் வேறுபடுத்திக் காட்டியுள்ளான். முதல் மனிதரை பெற்றோரின்றி படைத்ததானது அவனின் முழு வல்லைமைக்கும் எடுத்துக்காட்டாக இருப்பதுடன், தந்தையின்றி படைக்கப்பட்ட ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை அவனின் முழுமையான ஆற்றலுக்கும் மக்களுக்கான அத்தாட்சியாக இருக்கவும் உதாரணமாக குறிப்பிடுகிறான்.

"அல்லாஹ்விடத்தில் ஈஸாவின் உதாரணம் ஆதத்தின் உதாரணத்தைப் போன்றதாகும். அவன் அவரை மண்ணிலிருந்து படைத்து பின்னர் அவருக்கு 'குன்' ஆகுக. என்றான் உடனே அவர் மனிதனாக ஆகிவிட்டார்'' .(ஆல இம்ரான் 59). تقدم

பரிணாமக் கோட்பாட்டின் மூலம் இறைவனை மறுப்பதற்கு முனையும் அதிகமானோருக்கு அக்கோட்பாடே எதிராக உள்ளது என்பதை விளங்கிக்கொள்ளல் வேண்டும்.