Applicable Translations English Español ગુજરાતી हिन्दी සිංහල 中文 Русский عربي

வட்டியை இஸ்லாம் தடைசெய்திருப்பது ஏன்?

இஸ்லாத்தில் பணம் என்பது வர்த்தகம், பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான பரிமாற்றம், அத்துடன் கட்டுமானம் மற்றும் நிர்மாணம் போன்றவற்றிக்கு பயன்படுத்தும் ஒரு அதிகாரம் அளிக்கப்பட்ட அடையாள அலகாகும். அதிகப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கடன் கொடுக்கும்போது, அதன் அடிப்படை நோக்கங்களான பரிவர்த்தனை மற்றும் மேம்பாடு எனும் வழிமுறையிலிருந்து தவிர்த்து, அதையே ஒரு குறிக்கோளாக மாற்றுகிறோம். அதாவது பணத்தை கொடுத்து பணத்தை மேலதிகமாக பெரும் ஒரு வழிமுறையாக மாற்றிவிடுகிறோம்.

கடன்களுக்கு விதிக்கப்படும் வட்டி அல்லது இலாபம் கடன் வழங்குபவர்களுக்கு ஒரு ஊக்குவிப்பாக செயல்படுவதோடு உறுதியான ஆதாயமாக கருதப்படுகிறது. இதன் விளைவாக, பல ஆண்டுகளாக கடன் வழங்குபவர்களால் திரட்டப்பட்ட- பெறப்படுகின்ற- இலாபம் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளியை அதிகரிக்கிறது. சமீபத்திய தசாப்தங்களில், அரசாங்கங்களும் நிறுவனங்களும் இந்தத் துறையில் பாரிய அளவில் ஈடுபட்டுள்ளன. இது சில நாடுகளின் பொருளாதார வீழச்சிக்கு வழிவகுத்துள்ளது என்பதை நாம் அறிகிறோம். அதற்கான பல உதாரணங்கள் உண்டு. எந்த குற்றச்செயல்களாலும் சாதிக்க முடியாத அளவிற்கு சமூகத்தில் ஊழலை பரப்பும் ஆற்றல் வட்டிக்கு மாத்திரமே உண்டு.

அல்லாஹ் கூறுகிறான் : கிறிஸ்தவ கொள்கைகளின் அடிப்படையில், தாமஸ் அக்வினாஸ் வட்டி அல்லது வட்டியுடன் கடன் கொடுப்பதைக்-வாங்குவதைக்- கண்டித்தார். கிறிஸ்தவ தேவாலயத்தின் குறிப்பிடத்தக்க மத மற்றும் உலக செல்வாக்கு காரணமாக, இரண்டாம் நூற்றாண்டில் மதகுருமார்கள் மீது மாத்திரம் இத்தடையை விதித்து, அதனைத் தொடர்ந்து குடிமக்கள் யாவருக்குமான தடையாக இதனை விஸ்தரித்தது. கடனளிப்பவரின் காத்திருப்பு காலத்திற்கான கட்டணமாக வட்டியைக் கருத முடியாது என்பது வட்டியைத் தடைசெய்வதற்கான நியாயங்களில் ஒன்று என்பது அக்வினாஸின் கருத்தாகும். இதனை நியாயப்படுத்துவோர் இதை வணிகப் பரிவர்த்தனையாகப் கருதுகிறாரகள். பண்டைய காலங்களில், தத்துவஞானி அரிஸ்டாட்டில் பணம் என்பது பரிமாற்றத்திற்கான ஒரு வழிமுறையாகும் தவிர வட்டியைப் பெறுவதற்கான வழிமுறை அல்ல என்று உறுதியாக கூறினார். மறுபுறம், பிளேட்டோ, சமூகத்தின் ஏழை உறுப்பினர்கள் மீது செல்வந்தர்களால் நடைமுறைப்படுத்தப்பட்ட வட்டியை சுரண்டலாகக் கண்டார். கிரேக்கர்களின் காலத்தில் வட்டி பரிவர்த்தனைகள் மிக அதிகமாகக் காணப்பட்டன. இக்காலத்தில் கடனாளிகள் தங்கள் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாவிட்டால் அடிமைச் சந்தையில் கடனாளிகளை விற்க உரிமை உண்டு என்ற நிலை இருந்தது. இந்த விவகாரத்தில் ரோமானியர்களின் நிலைமையும் சற்றும் வித்தியாசமின்றி ஒன்றாகவே காணப்பட்டது. கிறிஸ்தவத்தின் வருகைக்கு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பே இந்த தடை ஏற்பட்டதால், இந்த தடை மதரீதியான எந்தத் தாக்கங்களுக்கும் உட்படவில்லை என்பது ஈன்று குறிப்பிடத்தக்க அம்சமாகும். இன்ஜீல் வேதத்தைப் பின்பற்றுவோர் வட்டியில் ஈடுபடுவதைத் தடைசெய்தது என்பதையும், தௌராத்தும் அதற்கு முன் அதையே செய்தது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

"நம்பிக்கை கொண்டோரே! பண்மடங்காகப் பெருகும் வட்டியை நீங்கள் உண்ணாதீர்கள். நீங்கள் வெற்றிபெறும் பொருட்டு அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்". (ஆல இம்ரான் : 130). تقدم

"(மற்ற) மனிதர்களுடைய பொருள்களுடன் சேர்ந்து (உங்கள் பொருளும்) அதிகப்படுவதற்காக வட்டிக்கு நீங்கள் கொடுக்கும் பொருள் அல்லாஹ்விடத்தில் அதிகப்படுவதில்லை. எனினும், அல்லாஹ்வின் முகத்தை நாடி ஸகாத்தாக ஏதும் நீங்கள் கொடுத்தாலோ, கொடுத்தவர்கள் அதை இரட்டிப்பாக்கிக் கொள்கின்றனர்". (அர்ரூம்: 39). تقدم

பழைய ஏற்பாடும் வட்டிக்கு தடை விதித்துள்ளது என்பதை லேவியராகமம் நூலில் நாம் காணலாம். இதற்கு உதாரணமாக பின்வரும் வசனத்தை குறிப்பிடுகிறோம் :

'உங்கள் சக இஸ்ரவேலர்களில் எவரேனும் ஏழைகளாகி, உங்களில் தங்களைத் தாங்களே ஆதரிக்க முடியாமல் போனால், நீங்கள் அவரை அந்நியராகவோ அல்லது குடியேரியாகவோ இருப்பது போல் கருதி அவர்களுக்கு உதவுங்கள். அவ்வாறு நீங்கள் நடந்து கொண்டால் அவர்கள் உங்களிடையே தொடர்ந்து வாழுவார்கள். அவர்களிடமிருந்து வட்டி அல்லது இலாபம் எடுக்காதீர்கள. ஆனால் நீங்கள் உங்கள் கடவுளை பயந்து நடந்து கொள்வீராக! அவர்கள் உங்களிடையே தொடர்ந்து வாழ்வதற்காக, நீங்கள் அவர்களுக்கு வட்டிக்குக் கடன் கொடுக்கவோ அல்லது லாபத்திற்கு உணவை விற்கவோ வேண்டாம்'. (லேவியராகமம் 25:35-37).

முன்பு குறிப்பிட்டது போல, புதிய ஏற்பாட்டில் இயேசு கூறியுள்ளபடி மோசேயின் சட்டமும் கிறிஸ்துவின் சட்டமும் ஒன்றே என்பது புலனாகிறது. تقدم

'நான் நியாயப்பிரமாணத்தையோ தீர்க்கதரிசிகளையோ ஒழிக்க வந்தேன் என்று நினைக்காதீர்கள்; நான் அவற்றை ஒழிக்க வரவில்லை, அவற்றை நிறைவேற்ற வந்தேன். வானமும் பூமியும் அழியும் வரை, நான் உங்களுக்குச் சொல்கிறேன், ஒரு துளியும் இல்லை, ஒரு புள்ளியும் இல்லை , அனைத்தும் நிறைவேறும் வரை நியாயப்பிரமாணத்திலிருந்து கடந்து போகும்; ஆகையால், இந்தக் கட்டளைகளில் மிகக் குறைவான ஒன்றைத் தளர்த்தி, மற்றவர்களுக்கு அதைச் செய்யும்படி கற்பிப்பவன் பரலோகராஜ்யத்தில் சிறியவன் என்று அழைக்கப்படுவான், ஆனால் அவற்றைச் செய்து அவற்றைக் கற்பிப்பவன் பெரியவன் என்று அழைக்கப்படுவான்'. (மத்தேயு 5:17-19). تقدم

இதன் படி யூத மதத்தில் வட்டி தடைசெய்யப்பட்டது போன்றே கிறிஸ்தவத்திலும் வட்டி தடை செய்யப்பட்டுள்ளது என்பதை அறிய முடிகிறது.

திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளபடி:

"யூதர்கள் செய்த அக்கிரமத்தின் காரணமாகவும், அல்லாஹ்வின் வழியிலிருந்து அதிகமான மனிதர்களை அவர்கள் தடுத்துக் கொண்டிருப்பதாலும், (முன்பு) அவர்களுக்கு அனுமதிக்கப் பட்டிருந்த பல தூய்மையான நல்ல பொருள்களை அவர்கள் மீது நாம் தடை செய்துவிட்டோம். மேலும் வட்டி அவர்களுக்குத் தடை செய்யப்பட்டிருக்க அதனை அவர்கள் வாங்கிக் கொண்டிருப் பதாலும், மக்களின் சொத்துகளைத் தவறான முறையில் அவர்கள் விழுங்கிக் கொண்டிருப்பதாலும் (முன்பு அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த பல தூய்மையான நல்ல பொருள்களை அவர்கள் மீது நாம் தடை செய்து விட்டோம்). மேலும் அவர்களில் நிராகரிப்பாளர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையை நாம் தயார் செய்து வைத்துள்ளோம்". (அந்நிஸா:160-161). تقدم

மதுவை இஸ்லாம் தடைசெய்தது ஏன்?

இறைவன் மனிதனை பகுத்தறிவின் மூலம் ஏனைய படைப்பினங்களை விடவும் தனித்துவமானவனாக ஆக்கியுள்ளான். ஆகையால் அவன் எமது உடலுக்கும் பகுத்தறிவிற்கும் பாதிப்பை ஏற்படுத்துபவைகளை தடை செய்துள்ளான். இதனால் போதையை ஏற்படுத்தக் கூடிய அனைத்தையும் தடைசெய்துள்ளான். காரணம் அது புத்தியை மறைத்து அதில் பாதிப்பை ஏற்படுத்தி பல வகையான கேடுகளுக்கும் வழிவகுக்கும். மதுஅருந்தியவன் சிலவேளை இன்னொருவனை கொன்று விடமுடியும். சிலவேளை விபச்சாரம் செய்வான், சில வேளை களவெடுப்பான். இவ்வாறான மாபாதகச் செயல்கள் மது குடித்ததன் விளைவாக ஏற்படும்.

அல்லாஹ் கூறுகிறான் :

"நம்பிக்கையாளர்களே! நிச்சயமாக மது, சூதாட்டம், சிலை வணக்கம், அம்பெறிந்து குறி கேட்பது ஆகிய இவை ஷைத்தானுடைய அருவருக்கத்தக்க வேலைகளில் உள்ளவையாகும். ஆகவே, நீங்கள் வெற்றியடைவதற்காக இவற்றில் இருந்து நீங்கள் விலகிக்கொள்ளுங்கள்". (அல் மாஇதா : 90). - تقدم

பெயர் மற்றும் அதன் வடிவத்தை கருத்திற்கொள்ளாது போதையை ஏற்படுத்துவதற்கு வழிவகுப்பவை அனைத்தும் 'கம்ர்' மதூபானம் ஆகும். நபியவர்கள் கூறினார்கள் : 'போதையை ஏற்படுத்தும் அனைத்தும் மதூபானமாகும். போதையை ஏற்படுத்தும அனைத்தும் தடைசெய்யப் பட்டவைகளாகும்'. (ஆதாரம் : முஸ்லிம்). - تقدم

தனிமனிதன் மற்றும் சமூகத்திற்கு மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக இது காணப்படுவதால் இதற்கான தடை வந்துள்ளது.

யூத, கிறிஸ்தவ மதங்களில் கூட மது தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இன்றைய காலத்தில் உள்ள பெரும்பாளானோர் இதனை ஏற்றுக் கொள்வதுமில்லை, நடைமுறைப்படுத்துவதுமில்லை.

'மதூபானம் கேலிக்குரியது, போதை பொங்கி எழுகிறது, அதன் மூலம் வழிதவறுகிறவன் ஞானி அல்ல'. (நீதிமொழிகள் 20:1). تقدم

'ஒழுக்கக்கேடும் துஷ்பிரயோகமும் நிறைந்த மதுவை அருந்திக் போதைக்குள்ளாகாதீர்கள்'. (எபேசியர் 5:18). تقدم

2010 இல் புகழ்பெற்ற மருத்துவ இதழான தி லான்செட் (The Lancet) தனிநபர்களையும், சமூகத்தையும் அழிக்கவல்ல மிகவும் ஆபத்தமான மருந்துகள் பற்றிய ஆய்வை வெளியிட்டது. இந்த ஆய்வானது ஆல்கஹால் கலந்த பாணங்கள், ஹெரோயின், புகையிலை மற்றும் ஏனைய பொருட்கள் உள்ளடங்களாக 20 பொருட்களை அடிப்படையாக கொண்டமைந்தது. இதனை 16 அளவுகோள்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்தனர். அவற்றுள் ஒன்பது அளவுகோள்கள் தனிநபருக்கு தீங்கு விளைவிப்பது தொடர்பானதாகவும், ஏழு அளவுகோல்கள் பிறருக்கு தீங்கு விளைவிப்பது தொடர்பானதாகவும் அமைந்திருந்தது. இந்த மதிப்பீட்டுக்கான புள்ளி 100 என்ற அளவில் வழங்கப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்டது.

இறுதியில் இந்த ஆய்வு பின்வரும் முடிவை வெளியிட்டது. அதாவது தனிநபருக்கு ஏற்படும் தீங்கு மற்றும் பிறருக்கு ஏற்படும் தீங்கு இரண்டையும் ஒன்றாக கருத்திற் கொண்டால், போதைப் பொருட்களில் ஆல்கஹாலே எல்லாவற்றிலும் மிகவும் தீங்குகள் நிறைந்தததாகவும், தீங்கு விளைவிப்பதில் முதலிடத்தில் உள்ளதாகவும் குறிப்பிடுகிறது.

மற்றொரு ஆய்வு அல்கஹோலின் பாதுகாப்பான நுகர்வு விகிதம் பற்றி குறிப்பிடுகிறது. குறித்த ஆய்வானது :

மது அருந்துவதால் ஏற்படும் நோய்கள் மற்றும் காயங்களினால் ஏற்படும் உயிரிழப்பைத் தவிர்க்க மதுவின் பாதுகாப்பான நுகர்வு விகிதம் பூஜ்யமாகும் என குறிப்பிடுகின்றனர். அதாவது இதனை முழுமையாக தவிர்ப்பதே இவ்வாறான பாதிப்புகளிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான ஓரே வழி என புகழ்பெற்ற அறிவியல் இதழான தி லான்செட்டின் இணையதளத்தில் ஆராய்ச்சியாளர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். இதுவரையில் இந்த விவகாரம் தொடர்பான மிகப்பெரும் தரவு பகுப்பாய்வு இடம்பெற்றுள்ளது. மது அருந்துதல் மற்றும் உட்கொள்ளும் அளவு (694 தகவல் ஆதாரங்களைப் பயன்படுத்தி) யும் மற்றும் இதனை பயன்படுத்துவதால் ஏற்படும் உடல்நல கேடுகள் மற்றும் அபாயங்களை மதிப்பிடுவதற்கு ஆல்கஹால் தொடர்புடைய (நோய்க்கு முந்தைய மற்றும் பிந்தைய 592ஆய்வுகளில் இருந்து பெறப்பட்ட முடிவுகளின் படியும்) இதற்கென 1990 முதல் 2016 வரையிலான காலப்பகுதியில்,195 நாடுகளைச் சேர்ந்த 28 மில்லியன் மக்களை உள்ளடக்கி இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வின் படி உலகளவில் ஆண்டுக்கு 2.8 மில்லியன் மக்களின் மரணத்திற்கு மது காரணமாகிறது என்று இவ்வாய்வு முடிவுகள் வெளிப்படுத்தின.

இந்த வகையில், சந்தையில் மதுபானம் இருப்பதைக் கட்டுப்படுத்தவும், மதுபானத்தின் மீது வரிகளை விதிக்கவும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைத்தனர். இந்த நடவடிக்கையானது எதிர்காலத்தில் மது கிடைப்பதைத் தடுப்பதற்கான முன்ஆயத்த நடவடிக்கையாக அமையலாம் என்று அபிப்பிராயப்படுகின்றனர். இதன் விளைவுகளை அறிந்த படைப்பாளனாகிய அல்லாஹ் மதுவை தடுத்ததன் மூலம் மிகவும் சிறந்த வழிகாட்டியாகவும் தீர்ப்பாளனாகவும் உள்ளான் என்பதை நாம் அறிய வேண்டும். அல்லாஹ் தீர்ப்பளிப்பதில் மிகவும் சிறந்தவன்; என்று பின்வரும் வசனத்தில் குறிப்பிடுகிறான் :

"தீர்ப்பளிப்பவர்களில் எல்லாம், அல்லாஹ் மிக மேலான நீதிபதியல்லவா?". (அத்தீன்: 8). تقدم