அல்லாஹ் கூறுகிறான் :
"நபியே! நீர் உமது மனைவிகளுக்கும், உமது மகள்களுக்கும், நம்பிக்கையாளர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலை முந்தானைகளை (தங்கள் முகங்களில் போட்டு) இறக்கிக் கொள்ளும்படி நீர் கூறுவீராக. அதனால், அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு, எவருடைய துன்பத்திற்கும் அவர்கள் உள்ளாகாதிருப்பதற்கு இது சுலபமான வழியாகும். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாக, மகா கருணையாளனாக இருக்கிறான்". (அல் அஹ்ஸாப்: 59). تقدم
முஸ்லிம் பெண்னை பொறுத்தமட்டில் 'தனியுரிமை' privarcy' என்ற சொல்லை நன்றாக புரிந்து கொண்டிருக்கிறாள். தன் தந்தை, சகோதரன், மகன், கணவன் என ஒவ்வொருவரின் அன்புக்கும் தனியுரிமை உண்டு என்பதை அவள் புரிந்துகொண்டுள்ளாள். அவள் தனது கணவன் மீது அன்புகொண்டாலும் தனது தந்தை அல்லது சகோதரன் மீது அன்பு கொண்டாலும் தனக்கு உரிமையுள்ள ஒவ்வொருவருக்கும் அவரவர் உரிமையை வழங்க கடமைப்பட்டுள்ளாள். எனவே தனது தந்தைதைக்கு மரியாதை செய்து அவருக்கு உபகாரம் செய்வது என்பது, தனது மகனை பராமரித்து பயிற்சிளிக்கின்ற கடமை போன்றல்ல. ஒரு முஸ்லிம் பெண் தான் எப்போது? எப்படி? யாருக்கு தனது அலங்காரத்தைக் காட்டவேண்டும் என்பதை நன்கறிவாள். தனது நெருங்கிய உறவுகளுடன் இருக்கும் போது அணிவது போல் அந்நிய ஒருவரை சந்திப்பதற்கு அணியமாட்டாள். இவ்வாறு அவளின் தோற்றத்தை அனைவருக்கும் வெளிக்காட்டமாட்டாள். முஸ்லிம் பெண் ஒரு சுதந்திர பெண்ணாவாள். அவள் தன்னை பிறரின் இச்சைக்கும் மற்றும் நவீன நாகரீகத்திற்கும் கைதியாக இருப்பதை புறக்கணிக்கிறாள். தன்னைப் படைத்தவனை திருப்திபடுத்தும் வகையில், தனக்குப் பொருத்தமானதாகவும், பிடித்தமானதாகவும் கருதுவதை அவள் அணிந்துகொள்கிறாள். மேற்கத்திய நாடுகளில் பெண்கள் பெஷன் மற்றும் ஆடையகங்களின் கைதியாக எப்படி உள்ளாள் என்பதைப் பாருங்கள். உதாரணமாக, இந்த வருட பெஷன் இறுக்கமான, குட்டையான காற்சட்டை அணிவது என்று அவர்களுக்கு சொன்னால், பெண்கள் அணியும்போது அந்த ஆடைகள் பொருத்தமானதா அல்லது வசதியானதா? என்பதையெல்லாம் பொருட்படுத்தாது அவற்றை அணிய முண்டியடிக்கிறார்கள்.
இன்றைய பெண்கள் பண்டங்களாக மாறிவிட்ட நிலையில், எந்த ஒரு விளம்பரமோ அல்லது பிரசுரமோ நிர்வாணப் பெண்ணின் உருவத்தில் இருந்து விடுபடாத நிலையில், இன்றைய காலத்தில் மேற்கத்தியப் பெண்களின் மதிப்பு மற்றும் கௌரவம் பற்றிய ஒரு மறைமுக செய்தியைக் கொடுக்கிறது என்பது யாருக்கும் இரகசியமல்ல. ஒரு இஸ்லாமியப் பெண் தனது அலங்காரத்தை மறைப்பதன் மூலம் தான் மதிப்புமிக்கவள், இறைவனால் கண்ணியப்படுத்தப்பட்டவள் என்ற ஒரு செய்தியை உலகிற்கு அனுப்புகிறாள். அவளுடன் பழகுபவர்- உறவாடுபவர் அவளின் அறிவு, கலாச்சாரம், இணக்கப்பாடுகள் மற்றும் கருத்துக்கள் அடிப்படையில் தீர்ப்பளிக்க வேண்டுமேயன்றி, அவள் உடல் அழகின் அடிப்படையிலல்ல என்பதை புரிய வேண்டும்.
ஒரு முஸ்லிம் பெண்ணைப்பொருத்தவரை அவளை இறைவன் எவ்வாறான மனித இயல்பூக்கத்துடன் மனிதர்களைப் படைத்துள்ளான் என்பதையும் நன்கு விளங்கிக்கொண்டுள்ளாள். இதனால் தனது சமூகததைப் பாதுகாக்கவும், தனக்கு பிறறால் நோவினை துன்பம் ஏற்படுவதிலிருந்து பாதுகாக்கவும் அந்நிய ஆண்களுககு தனது அழகை காட்டமாட்டாள். தமது அழகை பொதுவெளியில் காட்டி பெருமைப்படும் அழகிய யுவதிகள் ஒவ்வொருவரும் தமது முதுமைப்பருவத்தை அடையும் வேளை உலகில் உள்ள அனைத்து பெண்களும் ஹிஜாப் அணிய வேண்டும் என்று ஆசைப்படுவார்கள் என்ற யதார்த்தை எவரும் மறுக்கமாட்டார்கள் என்றே எண்ணுகிறேன்.
தற்காலத்தில் அழகியல் சத்திரசிகிச்சையின் விளைவாக ஏற்பட்டுள்ள சிதைவுகள் மற்றும் மரணங்களின் விகிதாசாரத்தை பற்றி மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும், இவ்வாறான கொடுமைகளை பெண் அனுபவிக்க தூண்டிய விவகாரம்தான் என்ன? பெண் தனது சிந்தனை அழகிற்குப் பதிலாக உடல் அழகு போட்டிகளில் கலந்து கொள்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டதன் காரணமாக அவளின் உண்மையான பெருமானத்தை மட்டுமல்லாது தனது வாழ்க்கையைக் கூட இழப்பதற்கு இது வழிவகுத்துள்ளது எனலாம்.
தலையை திறப்பதே பிற்போக்காகும். உண்மையில் தலையை மறைத்தல் பிற்போக்குவாதம் என்றிந்தால் முதல் மனிதர் ஆதம் அவர்களின் காலத்தையும் அவ்வாறுதான் குறிப்பிடவேண்டுமல்லவா? காரணம் ஆதமையும் அவரின் மனைவியையும் இறைவன் படைத்து சுவர்க்கத்தில் குடியிருக்க செய்தது முதல் அவர்களுக்கு மறைத்தலையும் ஆடை அணிவதையும் உத்தரவாதப்படுத்தினான்.
அல்லாஹ் கூறுகிறான் :
"நிச்சயமாக நீர் இ(ச் சுவர்க்கத்)தில் பசியாகவோ நிர்வாணமாகவோ இருக்கமாட்டீர்". (தாஹா:118). تقدم
இவ்வாறேஆதமின் சந்ததியினருக்கு தங்களின் மானத்தை-வெட்கத்தளத்தை- மறைப்பதற்கும் அலங்கரித்துக் கொள்வதற்குமென அல்லாஹ் ஆடையை இறக்கினான். அப்போதிருந்தே மனிதகுலம் தங்களுக்கான ஆடை அணிகளன்களை விருத்திசெய்துள்ளது. இந்த அடிப்படையில் சமூகங்களின் வளர்ச்சியானது ஆடை மற்றும் அடக்கத்தின் முன்னேற்றத்தைக் கொண்டே அளவிடப்படுகிறது. சில ஆபிரிக்க பழங்குடியினர் போன்ற நாகரீக வாசனையற்ற சில சமூகங்கள் தங்கள் மானத்தை –வெட்கத்தளத்தை- மறைக்கும் ஆடைகளை மட்டுமே அணிகின்ற வழக்கத்தைக் கொண்டுள்ளனர் என்பது யாவரும் அறிந்த விடயமாகும்.
அல்லாஹ் கூறுகிறான் :
''ஆதமுடைய சந்ததியினரே! உங்கள் வெட்கத்தளங்களை மறைக்கும் ஆடைகளையும் அலங்காரத்தையும் நாம் இறக்கியிருக்கிறோம். எனினும் பயபக்தி இறையச்சம் எனும் ஆடையே மிகவும சிறந்ததாகும். இவை அவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்கான கூறப்படும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளவையாகும்''. (அல் அஃராப் :26 ). تقدم
மேற்கு நாட்டவர் ஒருவர் தனது பாட்டி பாடசாலைக்குச் செல்லும் வேளை எவ்வாறான ஆடைகளை அணிந்திருந்தாள் என்பதை பார்க்கட்டும்!. நீச்சலுடைகள் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்போது, மதக் காரணங்களுக்கல்லாது, இயற்கை மற்றும் பழக்கவழக்கங்களுக்கு எதிரானதாக அது கருதப்பட்டதால், அந்த ஆடைக்கெதிராக ஐரோப்பாவிலும் அவுஸ்திரேலியாவிலும் பெரும் எதிர்ப்புகள் வெடித்தன. உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் நீச்சலுடைகளை விளம்பரப்படுத்த ஐந்து வயது சிறுமிகளைப் பயன்படுத்தி தீவிர விளம்பரப் பிரச்சாரங்களை மேற்கொண்டன. அப்போது அந்த விளம்பரத்தில் நீச்சல் உடையை அணிந்து வந்த முதல் குழந்தை மிகவும் வெட்கத்துடனே நடந்து சென்றது, மாத்திரமல்லாமல் தொடர்ந்து அந்த விளம்பரக் காட்சியை நடத்த முடியாமல் போனது. அக்காலத்தில் ஆண் பெண் இருபாலரும் உடல் முழுவதையும் மறைத்து கறுப்பு மற்றும் வெள்ளை நிறங்களிலான நீச்சல் ஆடை அணிந்து நீந்துவோராக இருந்தனர்.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான உள்ளார்ந்த உடல் வேறுபாடுகளை உலகம் ஏகமனதாக அங்கீகரித்துள்ளது. இந்த அடிப்படையில்தான் ஆண்களுக்கான நீச்சல் உடைகள் மேற்கத்திய பெண்களுக்கான நீச்சலுடைகளிலிருந்து வேறுபடுகின்றன. ஆண்களின் ஈர்ப்பைவிட்டும்-கவர்ச்சிக்குள்ளாகாது- தம்மை தடுத்துக் கொள்ளும் முகமாக பெண்கள் தங்கள் உடலை முழுவதுமாக மறைக்கிறார்கள். ஒரு பெண் ஒரு ஆணை பாலியல் பலாத்காரம் செய்த நிகழ்வொன்றை எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? மேற்கத்திய நாடுகளில் பெண்கள் துன்புறுத்தல் மற்றும் கற்பழிப்புக்கு உட்படாது பாதுகாப்பான வாழ்வுக்கான உரிமைகளைக் கோரி போராட்டங்களில் பங்கேற்கின்றனர். ஆனால் இதுபோன்ற போராட்டங்களை ஆண்கள் நடத்தியதாக நாங்கள் கேள்விப்பட்டதில்லையே! ஏன் சிந்திப்போமா?