Applicable Translations हिन्दी සිංහල English Español ગુજરાતી عربي

பொருளாதார சமநிலையை இஸ்லாம் எற்படுத்தியது எவ்வாறு?

உதாரணமாக இஸ்லாம், முதலாளித்துவம் மற்றும் சோசலிசத்தில் உள்ள பொருளாதார முறைகளை –கோட்பாடுகளை- ஒரு எளிமையான ஒப்பீடொன்றின் மூலம், இஸ்லாம் இந்த சமநிலையை எவ்வாறு அடைந்தது கொண்டது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

சொத்து உரிமை தொடர்பாக பின்வரும் கருத்துக்களை அவதானிக்கமுடியும் :

முதலாளித்துவத்தில்: தனியார் உடைமை என்பது பொதுவான கொள்கை.

சோசலிசத்தில்: பொது உடைமை என்பது பொதுவான கொள்கை.

இஸ்லாத்தில்: பல்வேறு வகையான உடைமைகள் அனுமதிக்கப்படுகின்றன :

பொது உடமை: மக்கள் வாழும் நிலங்கள் போன்றவை ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தினருக்கும் சொந்தமானது.

அரச உடமை: காடுகள் மற்றும் கனிமங்கள் போன்ற இயற்கை வளங்கள்.

தனியார் சொத்துரிமை : பொதுவான பொருளாதார கட்டமைப்புக்கு குந்தகம் ஏற்படுத்தாது முறையான முதலீட்டுச் செயற்பாட்டின் மூலம் பெறப்படுவது.

பொருளாதார சுதந்திரம் பற்றி நாம் நோக்கினால் :

முதலாளித்துவத்தில்: பொருளாதார சுதந்திரம் எந்தவித வரையரையின்றி பொதுவாக விடப்பட்டுள்ளது.

சோசலிசத்தில் : பொருளாதார சுதந்திரம் முற்றிலும் பறிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாத்தில், பொருளாதார சுதந்திரம் ஒரு குறிப்பிட்ட வட்டத்தினுள் அங்கீகரிக்கப்பட்டுள்ளது, இதில் பின்வருவன அடங்குகின்றன :

1- இஸ்லாமிய பயிற்சி மற்றும் சமூகத்தில் சொத்துரிமை தொடர்பான இஸ்லாமிய கருத்துக்கள் பரவுதல் ஆகியவற்றின் அடிப்படையில் ஒருவரின் உள்ளத்தில் ஆழமாக வேரூன்றிய சுயவரையறை.

2- ஏமாற்றுதல், வட்டி மற்றும் சூதாட்டம் போன்ற சில செயல்களைத் தடைசெய்யும் குறிப்பிட்ட சட்டங்களால் குறிக்கப்படும் நிலையான கோட்பாட்டு ரீதியான வரையறை.

அல்லாஹ் கூறுகிறான் :

"நம்பிக்கை கொண்டோரே! பண்மடங்காகப் பெருகும் வட்டியை நீங்கள் உண்ணாதீர்கள். நீங்கள் வெற்றிபெறும் பொருட்டு அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்". (ஆல இம்ரான் : 130). تقدم

"(மற்ற) மனிதர்களுடைய பொருள்களுடன் சேர்ந்து (உங்கள் பொருளும்) அதிகப்படுவதற்காக வட்டிக்கு நீங்கள் கொடுக்கும் பொருள் அல்லாஹ்விடத்தில் அதிகப்படுவதில்லை. எனினும், அல்லாஹ்வின் முகத்தை நாடி ஸகாத்தாக ஏதும் நீங்கள் கொடுத்தாலோ, கொடுத்தவர்கள் அதை இரட்டிப்பாக்கிக் கொள்கின்றனர்". (அர்ரூம்: 39). تقدم

"(நபியே!) மதுவைப் பற்றியும் சூதாட்டத்தைப் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். (அதற்கு) நீர் கூறுவீராக! ‘‘அவ்விரண்டிலும் பெரும் பாவங்களும் இருக்கின்றன; மனிதர்களுக்குச் சில பயன்களும் இருக்கின்றன. ஆனால், அவற்றில் உள்ள பாவம் அவற்றிலுள்ள பயனைவிட மிகப் பெரிது. மேலும், (நபியே! தர்மத்திற்காக) எவ்வளவு செலவு செய்வதென உம்மிடம் கேட்கின்றனர். (அதற்கு ‘‘அவசியத்திற்கு வேண்டியது போக) மீதமுள்ளதை(ச் செலவு செய்யுங்கள்)'' எனக் கூறுவீராக. (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் இம்மை, மறுமை(யின் நன்மை)களை கவனத்தில் வைத்துக் கொள்வதற்காக உங்களுக்கு அல்லாஹ் தன் வசனங்களை இவ்வாறு விவரிக்கிறான்". (அல்பகரா:219). تقدم

முதலாளித்துவம் மனிதனுக்கு சுதந்திரமான வழிமுறையை உருவாக்கி, அதன் வழியில் செல்வதற்கு அவனைத் தூண்டியது மாத்திரமல்லாது, இந்த திறந்த வழிமுறையானது மனிதனை மிகவும் மகிழ்ச்சியான நிலைக்கு கொண்டுபோய் சேர்க்கும் என்று வாதிடுகிறது. இருப்பினும், இறுதியில், இக்கோட்பாடானது மனிதனை ஒரு வர்க்க அடிப்படையிலான சமூகத்தினுள் சிக்கவைத்துவிட்டது. அதாவது பிறருக்கு அநீதி இழைப்பதினூடாக உழைத்த மிகப்பெரும் செல்வத்தைப் திரட்டிய ஒரு பிரிவினர் என்றும் தார்மீக விழுமியங்களைக் கடைப்பிடித்து ஒழுகும் அடிமட்ட வறுமை நிலையில் உள்ளோர் எனவும் இரு வர்க்கங்களை இது உருவாக்கிவிட்டது.

கம்யூனிசம் தோன்றி, அனைத்து வர்க்கங்களையும் ஒழித்து, கடுமையான கொள்கைகளை நிறுவ முயற்சித்தது. ஆனால் அது மற்ற கொள்கைகளை விடவும் ஏழ்மையும்,துன்பமும் நிறைந்த மிகவும் புரட்சிகரமான சமூகங்களை உருவாக்கியது.

ஆனால் இஸ்லாம் இந்த விவகாரத்தில் நடுநிலையான போக்கை கடைபித்தது. இஸ்லாமிய சமூகமானது ஒரு நடு நிலை சமூகம் என்ற அடிப்படையில் மனித குலத்திற்கு, எதிரிகள் கூட உண்மை என சான்று பகரும் அளவிற்கு மகத்தான ஒரு கோட்பாட்டை முன்வைத்தது. எனினும் முஸ்லிம்களில் பலர் இந்த மகத்தான இஸ்லாமிய நெறிமுறைகளை கடைப்பிடிப்பதில் அலட்சியமாக உள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.!