Applicable Translations English Español ગુજરાતી हिन्दी සිංහල 中文 Русский عربي

உண்மை மார்க்கத்தின் மேன்மை

இஸ்லாத்தை ஏற்பது அனைவருக்கும் சாத்தியமானதா?

ஆம், இஸ்லாம் அனைவருக்கும் சாத்தியமானது. இவ்வுலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் உண்மை மார்க்கத்தில் அல்லாஹ்வுக்கு அடிபணிந்த நிலையில் எவ்வித இடைத்தரகருமின்றி முஸ்லிமாகவே பிறக்கின்றனர். அந்தக் குழந்தையானது தனது குடும்பம், அல்லது பாடசாலை அல்லது எந்த மத அமைப்புக்களினதும் தலையீடுகளுமின்றி பருவ வயதை அடையும் வரையில் நேரடியாக அல்லாஹ்வையே வணங்கிக் கொண்டிருக்கிறது. அவன் பருவவயதை அடைந்ததும் தனது செயல்களுக்கு பொறுப்புக் கூறக்கூடியவனாகவும் அது குறித்து விசாரணைக்குட்படக்கூடியவனாகவும் மாறிவிடுகிறான். அந்தக் குழந்தை பருவவயதை அடைந்தபின் ஈஸாவை தனக்கும் அல்லாஹ்வுக்கும் இடையில் ஒரு மத்தியஸ்தராக ஏற்றுக்கொள்வதன் மூலம் அவன் கிறிஸ்தவனாகவும், புத்தரை மத்தியஸ்தராக எடுத்துக்கொள்வதன் மூலம் பௌத்தனாகவும், கிரிஷ்னனை தனது மத்தியஸ்தராக எடுத்துக்கொள்வதன் மூலம் ஒரு இந்துவாகவும் மாறிவிடுகிறான். அல்லது முஹம்மதை மத்தியஸ்தராக ஏற்று இஸ்லாத்திலிருந்து முற்றிலும் விலகி நடப்பதற்கோ, அல்லது அல்லாஹ்வை மாத்திரம் வணங்கி இயற்கை மார்க்கத்தில் நிலைத்திருக்க்கூடியவானகவோ மாறிவிடுகிறான். முஹம்மத் நபியவர்கள் தனது இரட்சகனிடமிருந்து கொண்டுவந்த இறைத்தூதைப் பின்பற்றுவர் சீரிய இயல்புணர்வுக்கு ஒத்துப்போகும் உண்மை மார்க்கத்தையே பின்பற்றுகிறார். இது தவிர அனைத்துக் கொள்கைகளும் வழிகேடும் நெறிபிறழ்வுமாகும். உதாரணத்திற்கு மனிதனுக்கும் அல்லாஹ்வுக்குமிடையில் முஹம்மதை மத்தியஸ்தராக எடுத்துக்கொண்டாலும் சரியே!

"எல்லாக் குழந்தைகளும் இயற்கை மார்க்கமான இஸ்லாத்திலே பிறக்கின்றன. அந்தக் குழந்தையின் பெற்றோரே அக்குழந்தையை யூதனாகவோ அல்லது கிறிஸ்துவனாகவோ அல்லது நெருப்பு வணங்கியாகவோ மாற்றிவிடுகின்றனர்". (ஆதாரம் : முஸ்லிம் (1218)). تقدم

மதங்களுக்கிடையிலான உரையாடல் குறித்து இஸ்லாத்தின் நிலைப்பாடு என்ன?

படைப்பாளனான அல்லாஹ்விடமிருந்து கிடைத்த உண்மை மார்க்கம் ஒன்றே தவிர வேறொன்றும் இல்லை. அந்த சத்திய மார்க்கமானது ஏகனும் தனித்தவனுமான படைப்பாளனை விசுவாசித்து அவனை மாத்திரமே வணங்குவதுமாகும். இவை தவிரவுள்ள அனைத்தும் மனிதனால் கண்டுபிடிக்கப் பட்டவைகளாகும். உதாரணத்திற்கு நாம் இந்தியாவுக்கு சென்று அங்கிருக்கும் மக்கள் மத்தியில் இறைவன் ஒருவனாவான் என்று கூறினால் அவர்கள் அனைவரும் ஆம் கடவுள் ஓன்றே என்று ஒரே குரலில் விடையளிப்பார்கள். உண்மையில் இதுவே அவர்களின் வேதங்களில் எழுதிவைக்கப்பட்ட விடயமாகும். என்றாலும் அவர்கள் அனைவரும் வேதம் கூறும் கடவுட் கொள்கைக்கு முரண்பட்டு இருப்பதுடன் இதில் அவர்கள் தங்களுக்கு மத்தியில் கடுமையாக மோதிக்கொள்கின்றனர். மேலும் இறைவன் பூமிக்கு எந்த வடிவத்தில் அல்லது தோற்றித்தில் வருகிறான் என்ற ஒரு அடிப்படை புள்ளியில் அவர்கள் தங்களுக்கு மத்தியில் முரண்பட்டு நிற்கின்றனர். உதாரணமாக, இந்திய கிறிஸ்தவர் கடவுள் குறித்து இவ்வாறு கூறுவார்: கடவுள் ஒருவனே, ஆனால் அவர் மூன்று நபர்களில் (பிதா,மகன் மற்றும் பரிசுத்த ஆவியானவர்) பிரதிபலிக்கிறார் எனத் திரித்துவக் கொள்கையை குறிப்பிடுவார். இந்து மதத்தவராயின் அவர் கடவுளானவர் விலங்கு, அல்லது மனிதன் அல்லது சிலை வடிவத்தில் வருகிறார் எனக் கூறுவார். இந்து மதத்தில் : (சாந்தோக்கிய உபநிடதம் 6:1-2) 'கடவுள் ஒருவன் மட்டுமே இரண்டாவது ஒருவன் கிடையாது'( வேதம் : சுவேதா சுவேத்தரா உபநிடதத்தில் (4: 19 ,4:20, 9:6) ' கடவுளுக்கு பெற்றோரோ தலைவரோ கிடையாது' 'அவனை காணவும் முடியாது. மேலும் கண்ணால் அவனை பார்க்கவும் முடியாது'அவனுக்கு ஒப்பாக எவரும் கிடையாது (யஜுர் வேதம் 9:40) 'ஐம்பூதங்களை (காற்று,நீர்,நெருப்பு போன்றவை) வணங்குவர்கள் இருளில் நுழைந்து இருளில் மூழ்கிப்போனோராவர். இவர்கள் மனிதனால் படைக்கப்பட்டவற்றையே (சிலை மற்றும் கற்கள் போன்ற கையினால் செய்யப்பட்டவற்றை) வணங்குகின்றனர். கிறிஸ்தவத்தில் : (மத்தேயு 4:10) 'அப்பொழுது இயேசு அவனை நோக்கி: போ, சாத்தானே, ஏனென்றால், உன் தேவனாகிய கர்த்தரைத் தொழுதுகொள், அவனை மட்டுமே சேவிப்பாயாக என்று எழுதப்பட்டுள்ளது' (யாத்திராகமம் 20:3) -5).என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம். மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம் நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராய் இருக்கிறேன். 'என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உங்களுக்கு இருக்க வேண்டாம், நீங்கள் செதுக்கப்பட்ட ஒரு உருவத்தையோ, மேலே வானத்தில் உள்ளதையோ, கீழே பூமியில் உள்ளதையோ, பூமிக்குக் கீழே உள்ள தண்ணீரில் உள்ளதையோ நீங்கள் உருவாக்க வேண்டாம். அவர்களுக்கு பணிவிடை செய்யாதீர்கள், ஏனென்றால் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் ரோஷமிக்கவர் என்னைப் பகைக்கும் தந்தையர்களின் பாவங்களை மூன்றாம் நானகாம் தலைமுறையிலும் விசாரிக்கிறோன்.

மதப்பிரிவுகளுக்கு மத்தியில் அல்லது மதங்களுக்குள்ளே காணப்படுகின்ற அனைத்து வித்தியாசங்களும் வேறுபாடுகளும் பிரச்சினைகளுக்குமான அடிப்படை காரணம், மனிதர்கள் தங்களுக்கும் இறைவனுக்கும் மத்தியில் மத்தியஸ்தர்களை எடுத்துக் கொண்டமையே, என்பதை மனிதன் மிக ஆழமாக சிந்தித்தால் உணர்ந்து கொள்வான். உதாரணத்திற்கு கத்தோலிக்க மற்றும் புரடஸ்தான்த் பிரிவினரும் இந்து மதப் பிரிவினரும் படைப்பாளனான அல்லாஹ்வுடன் தொடர்பு கொள்ளும் முறையில் வித்தியாசப்படுகின்றனர். படைப்பாளன் ஒருவன் உள்ளான் என்பதிலல்ல. இவர்கள் அனைவரும் நேரடியாக இறைவனை –அல்லாஹ்வை- வணங்கினால் அவர்கள் அனைவரும் அவனை ஏக இறைவனை ஏற்றுக்கொண்டவர்களாகி விடுவர். இறைவனின் இலட்சணங்கள் குறித்து இந்து மற்றும் கிறிஸ்தவ மதங்களில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.

இதற்கு உதராணமொன்றை குறிப்பிடலாம். அதாவது நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் காலத்தில் படைப்பாளனான ஒரே கடவுளை யார் வணங்கினாரோ அவர் புனித இஸ்லாம் மார்க்கத்தில் இருந்தார் அதுவே உண்மை மார்க்கமாகும்.என்றாலும் யார் ஒரு மதப்போதகரை அல்லது புண்ணியவானை தனக்கும் படைப்பாளனுக்குமிடையில் எடுத்துக் கொண்டாரோ அவர் அசத்திய மார்க்கத்தில் உள்ளார் என்பதாகும். எனவே இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பின்பற்றியோரும் ஒரே இறைவனான அல்லாஹ்வை மாத்திரமே வணங்க வேண்டும். அதாவது அவர்கள் அல்லாஹவைத் தவிர உண்மையாக வணங்கப்படக்கூடிய இறைவன் வேறு யாரும் கிடையாது என்றும் இப்ராஹீம் அல்லாஹ்வின் தூதர் என்றும் அவர்கள் சான்றுபக்ர்ந்து ஏற்க வேண்டும் என்பது இதன் பொருளாகும். அல்லாஹ் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை நபி இப்ராஹீம் அவர்களின் தூதுத்துவத்தை உண்மைப்படுத்துவதற்காக அனுப்பினான். இந்த வகையில் நபி இப்ராஹீமை பின்பற்றியோர் இந்த புதிய நபியை ஏற்றுக் கொள்ளவது அவசியமாகும். அப்போது அவர்கள் அல்லாஹ்வைத் தவிர உண்மையாக வணங்கப்படக் கூடிய இறைவன் வேறு யாரும் கிடையாது என்றும் மூஸா மற்றும் இப்ராஹீம் அல்லாஹ்வின் தூதர்கள் என்றும் அவர்கள் சான்று பக்ர்ந்து ஏற்றுக் கொள்ளல் வேண்டும். எடுத்துக்காட்டிட்காக இந்த நேரத்தில் யார் காளை மாட்டை வணங்கக்கூடியவர்களாக இருந்தார்களோ அவர்கள் பிழையான அசத்ததிய மார்க்கத்தில் இருந்தார்கள் என்பது இதன் கருத்தாகும்.

நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தூதை உண்மைப்பிக்கும் முகமாக நபி ஈஸா வந்த போது நபி மூஸாவைப் பின்பற்றியோர் யாவரும் ஈஸாவையும் அவர்களின் சீடர்களையும் உண்மைப்படுத்திட வேண்டும். இந்த வகையில் அவர்களில் ஒருவர் இஸ்லாத்தை ஏற்கையில் அவர் பின்வருமாறு ஷஹாதா கலிமாவைச் கூற வேண்டும். அதாவது அல்லாஹவைத் தவிர உண்மையாக வணங்கப்பட்க்கூடிய இறைவன் வேறு யாரும் கிடையாது என்றும் இப்ராஹீம் மற்றும் மூஸா, ஈஸா ஆகியோர் அல்லாஹ்வின் தூதர் என்றும் அவர்கள் சான்றுபக்ர்ந்து ஏற்க வேண்டும். அத்துடன், இந்நேரத்தில் யார் திரித்துவத்துவத்தை ஏற்று, ஈஸாவையும் அவரின் தாயையும் வணங்கிக் கொண்டிருந்தார்களோ அவர்கள் பிழையான கோட்பாட்டில் இருக்கிறார்கள்.

முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தமக்கு முன்னர் அனுப்பப்பட்ட தூதர்களை உண்மைப்படுத்தி தூதராக வந்ததும் ஈஸா மற்றும் மூஸா (அலைஹிமஸ்ஸலாம்) ஆகியோரை பின்பற்றியோர் இந்த புதிய நபியை ஏற்க வேண்டும். அப்போது அவர்கள் உண்மையாக வணங்கப்படக்கூடிய அல்லாஹ்வைத்தவிர வேறு கடவுள் கிடையாது என்றும் முஹம்மத், ஈஸா, மூஸா இப்ராஹீம் ஆகியோர் அனைவரும் அல்லாஹ்வின் தூதர்கள் என சாட்சி கூறவேண்டியது அவசியமாகும். ஆகவே முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தூதராக அனுப்பட்டிருக்கும் வேளையில் யார் அவர்களை வணங்கி அல்லது அவர்களிடம் மன்றாடி உதவியை கோருவோராய் இருப்பின் அவர் அசத்தியத்தில் இருக்கிறார்.

ஆகவே இஸ்லாத்தைப் பொருத்தவரை அதற்கு முன்புள்ள ஏகத்துவ கொள்கையை போதிக்கும் இறைவனால் இறக்கப்பட்ட, காலத்தால் நீட்சி பெற்ற மதங்களின் அடிப்படைகளையும், தூதர்கள் தங்களது காலத்திற்கு ஏற்றவாறு ஒவ்வொரு சமூதாயத்தினருக்கும் அவற்றை சுமந்து வந்துள்ளனர் என்பதையும் உண்மைப்படுத்துகிறது. தேவை வித்தியாசப்படுகையில் புதிய மார்க்கத்திற்கான ஒரு கட்டமும் வந்துவிடுகிறது, அது அடிப்படையுடன் ஒன்று படுவதுடன் அந்த சமூகத்தின் படிப்படியான தேவைகளின் நிலைக்கேற்ப அதன் சட்டங்கள் வேறுபடுகின்றன. அது மாத்திரமன்றி அடிப்படை ஏகத்துவக் கோட்பாட்டில் முன்னையதை தொடர்ந்து வந்த தூதுத்துவங்கள் உண்மைப்படுத்தி வந்துள்ளதையும் காணமுடிகிறது. இந்த அடிப்படையில் உரையாடலின் மூலம் ஒரு இறைவிசுவாசி படைப்பாளனின் இறைதூதுத்துவத்தின் ஒத்த தன்மையை புரிந்து கொள்வான்.

மதங்களுக்கிடையிலான உரையாடல் என்பது சரியான ஒரே மார்க்கத்தின் கருத்தியலை வலியுறுத்தும் அமைப்பில் இந்த அடிப்படை கருத்தின் அடியாக முண்னெடுக்க வேண்டியது அவசியம்.

உரையாடலைப் பொருத்தவரை அதற்கே உரிய பல அடிப்படைகளும், ஈமான் மற்றும் இருப்பியல் சார் சொல் நெறிகளும் உண்டு. இவற்றை மனிதன் மதித்து நடப்பதும் இதிலிருந்தே பிறருடன் தொடர்பை முன்னெடுப்பதும் அவசியமாகும். இவ்வுரையாடலின் நோக்கம் நாம் நடைமுறையில் கண்டுகொண்டிருக்கும் மனிதனுக்கும் தூய ஏகத்துவக் கோட்பாட்டிற்கும் தடையாக இருந்து அழிவுக்கும், நாசத்திற்கும் வழிவகுக்கும் கண்மூடித்தனமான பிடிவாத சார்பியக் கணிப்புகளுக்கு அப்பாட்பட்டு வெறித்தனம் மனோஇச்சை போன்றவற்றிலிருந்து விடுபடுவதாகும்.