மலக்குகள் என்போர் அல்லாஹ்வின் மிகப் பிரமாண்டமான ஒரு படைப்பு. அவர்கள் ஒளியினால் படைக்கப்பட்டவர்கள், நன்மையான காரியங்களில் ஈடுபடுவதற்கென கட்டமைக்கப்பட்வர்கள். அல்லாஹ்வின் கட்டளைக்கு முற்றிலும் கட்டுப்பட்டு நடப்பவர்கள். அல்லாஹ்வை துதிசெய்து கொண்டும் வணங்கிக் கொண்டும் இருப்போர். அவர்கள் சோர்வடையோ, களைப்புரவோ மாட்டார்கள்.
“அவர்கள் சோர்வடையாது இரவு பகலாக (அவனைத்) துதித்துக் கொண்டிருப்பார்கள்“(அன்பியா :20). تقدم
''அல்லாஹ் அவர்களுக்கு செய்யுமாறு கட்டளையிட்டவற்றில் அவனுக்கு மாறு செய்யாது, அவர்களுக்கு அல்லாஹ் ஏவியவற்றை எடுத்து நடப்பார்கள்''.(அத்தஹ்ரீம் : 6). تقدم
இவர்களை நம்புவதில் முஸ்லிம்கள் யூதர்கள் கிறிஸ்தவர்கள் யாவரும் ஒன்று பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் ஜிப்ரீல் ஆவார். அவரே அல்லாஹ்வுக்கும் இறைத்தூதர்களுக்கும் மத்தியில் தொடர்பாளராக இருப்பதற்கு அல்லாஹ் தேர்வு செய்தான். அவரே அல்லாஹ்விடமிருந்து இறைச்செய்தியை (வஹியை) நபிமார்களுக்கு எடுத்து வருபவர். இவரைப் போன்று மீகாஈல் என்ற மலக்கும் உள்ளார். அவரின் பணி மழையைப் பொழிவிப்பதும் தாவரங்களை பராமரிப்பதுமாகும், அதே போன்று இஸ்ராபீல் என்ற மலக்கும் உள்ளார். அவரின் பணி மறுமை நாள் நிகழ ஸூர் ஊதுவதாகும். இங்கே பெயர்குறிப்பிடப்படாத இவர்கள் அல்லாத பல மலக்குகளும் உள்ளனர்.
ஜின்கள் மறை உலகில் வாழும் ஒரு படைப்பு. அவர்கள் எங்களுடன் இந்தப் பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களும் மனிதர்களைப் போன்று அல்லாஹ்வுடைய கட்டளைகளை எடுத்து நடக்க வேண்டப்பட்டுள்ளதுடன், அவனுக்கு மாறுசெய்வதை விட்டும் தடுக்கப்பட்டுள்ளனர். என்றாலும் இவர்கள் எமது புறக்கண்களுக்கு புலப்படுவதில்லை. இவர்கள் நெருப்பினால் படைக்கப்பட்டவர்கள், மனிதர்களோ களிமண்ணால் படைக்கப்பட்டுள்ளனர். அல்லாஹ் ஜின்களின் வல்லமை மற்றும் அவர்களின் ஆற்றல்களின் நிலை குறித்து விளக்கும் பல சம்பவங்களை குறிப்பிட்டுள்ளான். அவற்றுள் பௌதீக ரீதியான எந்தத் தலையீடுமின்றி ஊசலாட்டம் அல்லது தீமையைச் செய்வதற்கு மறைமுகமாக தூண்டுதல்களை மனிதனில் ஏற்படுத்துவதானது அவர்களின் ஆற்றலை தெளிவுபடுத்துகிறது. என்றாலும் அவர்கள் மறைவானவற்றை அறியமாட்டார்கள். பலமான இறைவிசுவாசம் கொண்ட ஒரு விசுவாசிக்கு தொல்லை கொடுக்கவோ பாதிப்பை ஏற்படுத்தவோ சக்தி பெறமாட்டார்கள்.
''நிச்சயமாக ஷைத்தான்கள் தமது நேசர்களை உங்களுடன் தர்க்கம் செய்யத் தூண்டுகின்றனர்''. (அல் அன்ஆம் :121). تقدم
'ஷைதான்' எனும் வாசகம் மனிதனிரிலோ, ஜின்களிலோ வரம்பு மீறி, கட்டுக்கடங்காத அனைவரையும் குறிக்கின்றது.
அகிலத்தின் புறவய நிகழ்வுகள், ஆதாரங்கள் யாவும் வாழ்க்கையில் எப்போதும் மீள் கட்டமைப்பு மற்றும் மீள் உருவாக்கம் இருப்பதை சுட்டிக்காட்டுகிறது. இதற்கான உதாரணங்கள் அதிகமாகும். அவற்றுள் வரண்ட பூமியை மழையால் உயிர்ப்பித்தல் என்பது ஒரு உதாரணமாகும்.
அல்லாஹ் கூறுகிறான் :
''அவன் இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றை வெளிப்படுத்துகிறான். உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றை வெளிப்படுத்துகிறான். பூமி வரண்டு போன பின் அதனை உயிர்ப்பிக்கிறான். இவ்வாறே நீங்களும் வெளியேற்றப்படுவீர்கள்''. (அர்ரூம் :19). تقدم
மீண்டும் உயிர்கொடுக்கப்பட்டு எழுப்பப்படுதல் சாத்தியம் என்பதற்கு இன்னொரு உதாரணம், எவ்விதக் கோளாறுமில்லாது நேர்த்தியாகவும் ஓழுங்குமுறைப்படியும் இயங்கும் இப்பிரபஞ்சத்தைக் குறிப்பிட முடியும். ஒரு அணுவில் காணப்படுகின்ற மிகச்சிறிய எலக்ட்ரான் கூட ஒரு சுற்றுப்பாதையில் இருந்து மற்றொரு சுற்றுப்பாதைக்கு அதன் இயக்கத்திற்கு சமமான ஆற்றளை பெற்றாலே தவிர சிறிதும் நகர முடியாது. அனுவில் அடங்கியிருக்கும் மிகவும் நுன்னிய இப்பொருளுக்கே இந்நிலையென்றால் கொலைகாரன் அல்லது அநியாயக்காரன் அகிலங்களின் இரட்சகனிடமிருந்து எந்த விசாரணையோ அல்லது தண்டனையோ இன்றி தப்பி ஓடுவதை கற்பனை செய்ய முடியுமா?
அல்லாஹ் கூறுகிறான் :
‘‘நாம் உங்களை படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள் நம்மிடம் கொண்டு வரப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டிருந்தீர்களா?'' (என்று கேட்பான்.) உண்மை அரசனான அல்லாஹ் உயர்ந்தவனாகி விட்டான்.(உண்மையாக) வணங்கப்படத்தகுதியானவன் அவனையன்றி வேறுயாறுமில்லை (அவன்) சங்கையான அர்ஷின் இரட்சகன்“. (அல் முஃமினூன்: 115-116). تقدم
''எவர்கள் தீமைககள் செய்தார்களோ அவர்களை நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் புரிந்தோர்களைப் போன்று அவர்களது வாழ்விலும் அவர்களது மரணத்திலும், சமமாக நாம் ஆக்குவோம் என்று எண்ணிக் கொண்டனரா? அவர்கள் தீர்ப்பளிப்பது மிக்க கெட்டதாகிவிட்டது. வானங்களையும் பூமியையும் அல்லாஹ் தக்க காரணத்தின் மீதே படைத்திருக்கிறான். ஆகவே, (அவர்களில் உள்ள) ஒவ்வொரு ஆத்மாவுக்கும் அவற்றின் செயலுக்குத்தக்க கூலியே கொடுக்கப்படும். அவை (அணுவளவும்) அநியாயம் செய்யப்பட மாட்டாது". (அல் ஜாஸியா:21-22). تقدم
இந்த வாழ்வில் நாம் எமது உறவினர்களில் நண்பர்களில் அதிகமானோரை இழக்கிறோம் என்பதை அவதானிக்கிறோமல்லவா? அதே போன்று நாமும் ஒரு நாள் இறக்கப்போகிறோம் என்பதை அறிந்துள்ளோம். ஆனாலும் எமது அடி மனதால் நாமேல்லாம் நிரந்தரமாய் வாழ்வோம் என நாம் உணர்கிறோம். மனித உயிரானது மீள் உயிர்ப்பிக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்படும் ஒன்றாக இல்லாது வெறும் பௌதீக விதிகளுக்குட்பட்டு சடரீதியான வாழ்க்கை கட்டமைப்புக்குள் மனித உடல் இருந்தால் இந்த இயல்பான சுதந்திர உணர்வுக்கான எந்த அர்த்தமும் இருக்காது. அவ்வாறிருப்பின் உயிரானது காலத்தைக் கடந்து மரணத்தைக் கடந்து சென்றுவிடும்.
அல்லாஹ் முதலில் எவ்வாறு அவர்களை உயிர்கொடுத்து படைத்தானோ அவ்வாறே மீண்டும் அவர்களை உயிர்ப்பிக்கிறான்.
அல்லாஹ் கூறுகிறான் :
''மனிதர்களே! (மரணித்த பின்) மீண்டும் எழுப்பப்படுவது பற்றி சந்தேகத்தில் இருந்தீர்களானால், (அறிந்து கொள்ளுங்கள்) நிச்சயமாக நாம்தான் உங்களை (முதலில்) மண்ணிலிருந்தும் பின்னர் இந்திரியத்திலிருந்தும், பின்பு கருவரைச்சுவரில் ஒட்டிக்கொள்ளக் கூடியதிலிருந்தும் பின்னர் வடிவமைக்கப் பட்டதும் வடிவமைக்கப்படாததுமான சதைப் பின்டத்திலிருந்தும் படைத்தோம், உங்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவே (இதனை விவரிக்கிறோம்). மேலும், நாம் நாடியவற்றை ஒரு குறிப்பிட்ட காலம் வரை கருப்பையில் தரிபடுத்துகிறோம். பின்பு உங்களை சிசுவாக வெளியேற்றுகின்றோம். பின்பு நீங்கள் உங்கள் வாலிபத்தை அடையும்படிச் செய்கிறோம். அன்றியும், (இதனிடையில்) உங்களில் சிலர் மரிப்பவர்களும் இருக்கிறார்கள். அறிந்த பின் ஒன்றுமே அறியாதவர்களைப் போல் ஆகிவிடக்கூடிய தளர்ந்த வயது வரை விட்டுவைக்கப்படுபவர்களும் இருக்கிறார்கள். இன்னும், நீங்கள் (தரிசாய்க் கிடக்கும்) வரண்ட பூமியைப் பார்க்கின்றீர்கள், அதன் மீது நாம் (மழை) நீரைப் பொழியச்செய்தால் அது அதிர்வுற்று வளமாகி அழகான பல்வகைப் புற்பூண்டுகளை முளைப்பிக்கிறது". (ஹஜ் : 05). تقدم
"மனிதனை ஒரு துளி இந்திரியத்திலிருந்து நாமே நிச்சயமாகப் படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா? அவ்வாறிருந்தும், அவன் (நமக்கு) வெளிப்படையான தர்க்க வாதியாகி விடுகிறான். மேலும், அவன் தன் படைப்பை (தான் படைக்கப்பட்டதெப்படி என்பதை) மறந்துவிட்டு, அவன் நமக்காக ஓர் உதாரணத்தையும் கூறுகின்றான்; “எலும்புகள் அவை மக்கிப் போய் விட்ட பின் அவற்றை உயிர்ப்பிப்பது யார்?” என்று. “முதல் முதலில் அவற்றை உண்டு பண்ணியவனே (பின்னும்) அவற்றுக்கு உயிர் கொடுப்பான். அவன் எல்லாவகைப் படைப்புகளையும் நன்கறிந்தவன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!".(யாஸீன் : 77-79). تقدم
"(நபியே!) அல்லாஹ்வின் இவ்வருளால் ஏற்படும் பலன்களை நீர் கவனிப்பீராக! இறந்துபோன பூமியை எவ்வாறு செழிக்கச் செய்கிறான்! (இவ்வாறே) நிச்சயமாக அவன் இறந்தவர்களையும் உயிர்ப்பிக்கச் செய்வான். அவன் அனைத்தின் மீதும் பேராற்றல் உடையவன்".(அர்ரூம் :50). تقدم