ஏனைய மதங்களிலிருந்து உண்மை மார்க்கத்தை பின்வரும் மூன்று விடயங்களினூடாக வேறுபடுத்தி அறிந்திட முடியும் : تقدم
இந்த மார்க்கத்தின் படைப்பாளனின் பண்புகள் அல்லது கடவுளின் பண்புகள்.
இறைத்தூதர் அல்லது தீர்க்கதரிசியின் பண்புகள்.
தூதுத்துவத்தின் உள்ளடக்கம்.
வின்னுலகத்தூது அல்லது சன் மார்க்கம் என்பது படைப்பாளனுக்குரிய அழகியதும் கண்ணியமானதுமான பண்புகளுக்கான வர்ணனயையும், விளக்கத்தையும் பெற்றிருப்பதோடு அவனைப் பற்றியும் அவனது மெய்நிலை குறித்தும் அவனின் இருப்புக்கான சான்றுகளையும் உள்ளடக்கியிருப்பது அவசியமாகும்.
"(நபியே! மனிதர்களை நோக்கி) கூறுவீராக: அல்லாஹ் ஒருவன்தான். அல்லாஹ் எவ்விதத் தேவையுமற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக எதுவுமில்லை"((இஃலாஸ் : 1- 4). تقدم
"அவன்தான் அல்லாஹ் (உண்மையாக) வணங்கப்படத் தகுதியானவன் அவனையன்றி வேறுயாரும் இல்லை. (அவன்) மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் நன்கறிபவன். அவன் அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையவன். அவன் தான் அல்லாஹ் (உண்மையாக) வணங்கப்படத் தகுதியானவன். அவனையன்றி வேறு யாரும் இல்லை.(அவனே) ஆட்சியாளன், பரிசுத்தமானவன், சாந்தியளிப்பவன், பாதுகாப்பவன், கண்காணிப்பவன் யாவற்றையும் மிகைத்தவனும், அடக்கியாளுபவனும், பெருமைக்குரியவனுமாவான்.அவர்கள் இணைவைப்பதை விட்டும் அல்லாஹ் தூய்மையானவன். அவனே அல்லாஹ் (அவனே) படைப்பாளனும், தோற்றுவிப்பவனும், உருவமைப்பவனுமாவான், அவனுக்கு அழகிய பெயர்கள் இருக்கின்றன. வானங்கள் மற்றும் பூமியில் இருப்பவைகள் அவனைத் துதிக்கின்றன. அவன் யாவற்றையும் மிகைத்தவன், ஞானமிக்கவன். (அல் ஹஷ்ர் 22-24). تقدم
தூதர் மற்றும் அவரின் பண்புகள் தொடர்பான விடயத்தை பொருத்தவரை மார்க்கம் அல்லது இறைத்தூது விளக்கமளிக்கிறது:
1- படைப்பாளன் (இறைவன்) தனது தூதருடன் தொடர்புகொள்ளும் முறை குறித்து இறைத் தூது (மார்க்கம்) பின்வருமாறு விளக்குகிறது :
"நான் உம்மை (என் தூதராகத்) தேர்ந்தெடுத்துக் கொண்டேன். ஆதலால், வஹி மூலம் (உமக்கு) அறிவிக்கப்படுவதற்கு செவிசாய்ப்பீராக". (தாஹா : 13). تقدم
2- தீர்க்கதரிசிகள் மற்றும் இறைத்தூதர்கள் அல்லாஹ்விடமிருந்து பெற்றவற்றை மக்களுக்கு எத்திவைக்கும் பொறுப்பை ஏற்றவர்கள் என்பதை இறைத்தூது தெளிவுபடுத்துகிறது.
"தூதரே உமது இரட்சகனிடமிருந்து உமக்கு இறக்கிவைக்கப் பட்டதை எடுத்துரைப்பீராக". (மாஇதா : 67) تقدم
3- தூதர்கள் தங்களை வணங்குவதற்காக மக்களை அழைக்க வரவில்லை, மாறாக அல்லாஹ் ஒருவனை மாத்திரமே வணங்க வேண்டும் என்பதின் பால் அவர்களை அழைக்கவே வந்தார்கள் என்பதை இறைத்தூது தெளிவுபடுத்துகிறது.
"எந்த ஒரு மனிதருக்கும் அல்லாஹ் வேதத்தையும், ஞானத்தையும், நபித்துவத்தையும் வழங்கியிருக்க பின்னர் அவர் மக்களிடம் அல்லாஹ்வை விட்டுவிட்டு எனக்கே அடிமைகளாக இருங்கள்' எனக் கூறுவதற்கு அவருக்கு அதிகாரம் இல்லை. ஆகவே நீங்கள் வேதத்தைக் கற்றுக்கொடுப்பவராக இருப்பதாலும் கற்றுக் கொண்டிருப்பதனாலும் இரட்சகனை சார்ந்தோராக நீங்கள் ஆகிவிடுங்கள்' என்றே கூற வேண்டும்".(ஆல இம்ரான் : 79). تقدم
4- நபிமார்களும், இறைத்தூதர்களும் வரையறுக்கப்பட்ட மனித முழுமைத்துவத்தின் உச்சத்தில் உள்ளார்கள் என்பதை உறுதிப்படுத்துகிறது.
"நிச்சயமாக நீர் மகத்தான நற்குணமுடையவராகவே இருக்கிறீர்". (கலம் : 4). تقدم
5- இறைத்தூதர்கள் மனிதர்களுக்கான மனித முன்மாதிரியை பிரதிபலிப்பவர்கள் என்பதை உறுதிப்படுத்துகிறது.
"உங்களில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் ஆதரவு வைத்து அல்லாஹ்வை அதிகம் நினைவுகூறுவோருக்கு அல்லாஹ்வின் தூதரிடம் நிச்சயமாக அழகிய முன்மாதிரி இருக்கின்றது". (அஹ்ஸாப் :21). تقدم
எந்த ஒரு மதத்தினதும் வேதவாசகங்கள் அதன் தீர்க்கதரிசிகள் விபச்சாரம் புரிவோர், கொலையாளிகள், அல்லது இரத்த வெறியர்கள் மற்றும் துரோகிகள் என குறிப்பிட்டால் அந்த மதத்தை ஏற்றுக்கொள்வது சாத்தியமில்லை. அதே போன்று எந்த ஒரு மதத்தினதும் வேத வசனங்கள் மோசமான அருவருப்பான கருத்துக்களை கொண்டதாக இருப்பின் அந்த மதத்தையும் ஏற்றுக்கொள்வது சாத்தியமில்லை.
தூதுத்துவத்தின் உள்ளடக்கத்தைப் பொறுத்தவரை அது பின்வரும் விடயங்களினால் தனித்துவம் பெற்றிருக்க வேண்டும் :
1. படைப்பாளனான இறைவன் பற்றிய அறிமுகம்.
உண்மை மதமானது ஒரு போதும் அதன் இறைவனை அவனின் கண்ணியத்திற்கு பொருந்தாத பண்புகளால் வர்ணிக்கவோ அல்லது அவனின் அந்தஸ்த்தை –மகிமையை-குறைக்கும் விதத்திலோ குறிப்பிட மாட்டாது. அதாவது இறைவனை ஒரு கல்லின் வடிவத்திலோ அல்லது ஒரு மிருகத்தின் வடிவத்திலோ, அல்லது அவனுக்கு பெற்றோர்கள், மற்றும் மனைவி உள்ளதாகவோ அல்லது அவனது படைப்பில் அவனுக்கு ஒப்பானவை உள்ளது என்பது போன்ற அவனின் கண்ணியத்தை குறைத்து மதிப்பிடும் விடயடங்களை குறிப்பிடமாட்டாது.
"அவனைப் போன்று எதுவுமில்லை, அவன் நன்கு செவியேற்பவனாகவும் யாவற்றையும் பார்ப்பவானாகவும் உள்ளான்". (அஷ்ஷுறா : 11). تقدم
"(உண்மையாக) வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. அவன் என்றும் உயிருடன் இருப்பவன், நிலைத்திருப்பவன். சிறுதூக்கமோ, உறக்கமோ அவனை ஆட்கொள்ளாது. வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அவனது அனுமதியின்றி அவனிடம் யார்தான் பரிந்துரை செய்யமுடியும்? (படைப்பினங்களான) அவர்களுக்கு முன் உள்ளவற்றையும் அவர்களுக்குப்பின் உள்ளவற்றையும் அவன் நன்கறிவான். அவன் நாடியவற்றைத் தவிர அவன் அறிந்திருப்பவற்றில் எதையும் அவர்களால் அறியமுடியாது. அவனது 'குர்ஸி' வானங்களையும் பூமியையும் வியாபித்திருக்கின்றது. அவையிரண்டையும் பாதுகாப்பது அவனுக்கு சிரமமன்று. அவன் மிக உயர்ந்தவன்; மிக்க மகத்துவமானவன்".(பகரா : 255). تقدم
2- இவ்வுலக இருப்பின் நோக்கத்தையும் இலக்கையும் தெளிவுபடுத்துதல்.
"அல்லாஹ் இது குறித்து பின்வருமாறு குறிப்பிடுகிறான் "(நான் ஜின் மற்றும் மனித இனத்தை என்னை வணங்கி வழிபடுவதற்காகவேயன்றி படைக்கவில்லை".(ஸாரியாத் : 56). تقدم
"நான் உங்ளைப் போன்ற மனிதன்தான், (உண்மையாகவே) வணங்கப்படத்தகுதியான உங்கள் இரட்சகன் ஒருவனே என்று எனக்கு வஹி அறிவிக்கப்படுகிறது என நபியே கூறுவீராக. எவர் தனது இரட்சகனை சந்திப்பதை ஆதரவு வைக்கிறாரோ அவர் நல்லறம் செய்யட்டும்ز மேலும் தனது இரட்சகனின் வணக்கத்தில் எவரையும் இணையாக்காதிருக்கட்டும்". (கஹ்ஃப் : 110). تقدم
3- மார்க்கக் கருத்துக்கள் யாவும் மனித இயலுமைக்குட்பட்டதாக இருத்தல்
"அல்லாஹ் உங்களுக்கு இலகுவையே விரும்புகிறான்.அவன் உங்களுக்கு சிரமத்தை விரும்பவில்லை" (பகரா : 185). تقدم
"எந்த ஓர் ஆத்மாவையும் அதன் சக்திக்கு மேல் அல்லாஹ் சிரமப்படுத்தமாட்டான். அது சம்பாதித்தன் பயன் அதற்குரியதே! அது சம்பாதித்ததன் வினையும் அதற்குரியதே!".(அல் பகரா : 286). تقدم
"அல்லாஹ் உங்களுக்கு (சட்டங்களை) இலகுபடுத்தவே விரும்புகிறான். மனிதன் பலவீனனாக படைக்கப்பட்டுள்ளான்". (அந்நிஸா:28). تقدم
4. அது முன்வைக்கும் கருத்துக்கள் மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மைகள் யாவும் சரியானது என்பதற்கான பகுத்தறிவுரீதியான ஆதாரங்களை முன்வைத்தல்.
ஆகவே தூதுத்துவம் முன்வைக்கும் விடயங்கள் சரியானது –உண்மை என்பதை நிரூபிப்பிதற்கு போதுமான தெளிவான பகுத்தறிவு சான்றுகளை எமக்களிப்பது அவசியமாகும்.
எனவே அல்குர்ஆன் இறையியல் மற்றும் தூதுத்துவம் தொடர்பான ஆதாரங்களையும் பகுத்தறிவு சான்றுகளையும் குறிப்பிடுவதுடன் நிறுத்திக் கொள்ளவில்லை. மாறாக இணைவைப்பாளர்கள் மற்றும் நாஸ்திகவாதிகள் அனைவரிடமும் அவர்கள் கூறும் விடயங்கள் சரியானது என்பதற்கான ஆதாரங்களை முன்வைக்குமாறும் சவால் விடுகிறது.
"யூதர்களாக அல்லது கிறிஸ்துவர்களாக இருந்தவர்களைத் தவிர வேறு எவறும் சுவனத்தில் நுழையவே மாட்டார்கள் என்று அவர்கள் கூறுகின்றனர். அது அவர்களின் வெறும் கற்பனைகளாகும். (இதில்) நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்களுடைய ஆதாரத்தை கொண்டுவாருங்கள் ' என்று (நபியே) நீர் கூறுவீராக".(அல்பகரா: 111). تقدم
"யார் அல்லாஹ்வுடன் வேறு கடவுளை அழைக்கின்றானோ அதற்கு அவனுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை. அவனது விசாரணை அவனது இரட்சகனிடமே இருக்கின்றது. நிச்சயமாக நிராகரிப்பாளர்கள் வெற்றி பெற மாட்டார்கள்".(அல் முஃமினூன்: 117). تقدم
"(நபியே! அவர்களை நோக்கி) ‘‘வானங்களிலும் பூமியிலும் உள்ளவற்றை (சிறிது) கவனித்துப் பாருங்கள்'' எனக் கூறுவீராக. (எனினும்) நம்பிக்கை கொள்ளாத மக்களுக்கு நம் வசனங்களும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதும் ஒரு பயனுமளிக்காது". (யூனுஸ் : 101). تقدم
5- தூதுத்துவம் முன்வைக்கும் மார்க்க உள்ளடங்களுக்கிடையில் எவ்வித முரண்பாடுகளும் இருக்க கூடாது.
"இந்த குர்ஆனை அவர்கள் சிந்தித்துணர வேண்டாமா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் பல (தவறுகளையும்) முரண்பாடுகளை(யும்) அவர்கள் கண்டிருப்பார்கள்".(நிஸா : 82). تقدم
"அவன்தான் (இவ்) வேதத்தை உம்மீது இறக்கினான். இதில் விளக்கமான வசனங்களும் இருக்கின்றன. இவை தான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மற்றவை (பல அந்தரங்கங்களைக் கொண்ட) முதஷாபிஹாத் (என்னும் ஆயத்துகள்) ஆகும்; எனினும் எவர்களுடைய உள்ளங்களில் வழிகேடு இருக்கிறதோ அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக முதஷாபிஹ் வசனங்களின் விளக்கத்தைத் தேடி அதனைப் பின்பற்றுகின்றனர். அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அதன் உண்மையான விளக்கத்தை அறியமாட்டார்கள். கல்வியில் உறுதிப்பாடு உடையவர்கள் அவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவைதான். நாங்கள் அதை நம்பிக்கை கொள்கிறோம், என்று அவர்கள் கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர மற்றவர்கள் இதைக்கொண்டு நல்லுபதேசம் பெறமாட்டார்கள்".(ஆல இம்ரான் 7). تقدم
6- மதரீதியான ஆதார வாசகங்கள் மனித இயல்பூக்கத்தின் தார்மீக அடிப்படைகளுக்கு முரணற்றதாக இருத்தல் வெண்டும்.
"எனவே நபியே மார்க்கத்திற்காக உமது முகத்தை நேரிய வழியில் நிலைநிறுத்துவீராக! (இதுவே) அல்லாஹ் மனிதர்களைப் படைத்திருக்கும் அவனுடைய இயற்கையான மார்க்கமாகும். அல்லாஹ்வின் படைப்பில் எவ்வித மாற்றமும் இல்லை. இதுவே நிலையான மார்க்கம். எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்". (ரூம் : 30). تقدم
''அல்லாஹ் உங்களுக்கு (சட்டங்களை) தெளிவுபடுத்தவும், உங்களுக்கு முன் சென்ற நல்லவர்களின் வழிமுறைகளில் உங்களைச் செலுத்தவும், உங்களுக்கு மன்னிப்பு வழங்கவும் விரும்புகின்றான். அல்லாஹ் நன்கறிந்தவனும் ஞானமிக்கவனுமாவான். அல்லாஹ் உங்களுக்கு மன்னிப்பு வழங்க விரும்புகிறான். ஆனால் மனோஇச்சையைப் பின்பற்றுவோர் நீங்கள் முழுமையாக வழிதவற வேண்டும் என்று விரும்புகின்றனர்". (அந்நிஸா : 26-27). تقدم
7. மதரீதியான கருத்துக்கள் பௌதீக அறிவியல் கருத்துக்களுக்கு முரணாணதாக இருக்கக் கூடாது.
"நிச்சயமாக வானங்களும் பூமியும் இணைந்தே இருந்தன. நாமே அவ்விரண்டையும் பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நீரிலிருந்து நாமே உருவாக்கினோம் என்பதையும் நிராகரித்தோர் அறியவில்லையா? அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா?". (அன்பியாஃ : 30). تقدم
8- மதமானது மனித வாழ்வின் நடை முறையிலிருந்து ஒதுங்கியதாக இருக்கலாகாது, மாறாக அது மனித நாகரீக முன்னேற்றத்துடன் ஒன்றிச் செல்லக் கூடியதாக இருக்க வேண்டும்.
''அல்லாஹ் தனது அடியார்களுக்கு வெளிப்படுத்திய அவனது அலங்காரத்தையும் உணவில் பரிசுத்தமானவற்றையும் தடை செய்பவன் யார்? என்று நபியே நீர் கேட்பீராக. இவை நம்பிக்கை கொண்டோருக்கு இவ்வுலக வாழ்வில் மற்றோருடன் அனுமதிக்கப்பட்டதாகும். மறுமையில் அவர்களுக்கு மட்டுமே உரியதுமாகும் என்று நீர் கூறுவீராக. அறிந்து கொள்ளும் கூட்டத்திற்கு வசனங்களை இவ்வாறே நாம் தெளிவு படுத்துகிறோம்". (அஃராப் : 32). تقدم
9- எல்லாக் காலத்திற்கும் இடத்திற்கும் பொருத்தமானதாக இருத்தல் வேண்டும்.
''இன்றைய தினம் உங்களுக்கு உங்களது மார்க்கத்தை பூரணப்படுத்தி எனது அருளையும் முழுமைப்படுத்திவிட்டேன். மேலும் உங்களுக்கு இஸ்லாத்தை மார்க்கமாகவும் ஏற்றுக் கொண்டேன்". (மாஇதா : 3). تقدم
10- தூதுத்துவம் சர்வதேசத்தன்மை வாய்ந்ததாக இருத்தல் வேண்டும்.
''(நபியே!) நீர் கூறுவீராக: “மனிதர்களே! மெய்யாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறேன்; வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி அவனுக்கே உரியது, அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறுயாருமில்லை - அவனே உயிர்ப்பிக்கின்றான்; அவனே மரணம் அடையும்படியும் செய்கின்றான் - ஆகவே, அல்லாஹ்வின் மீதும், எழுதப்படிக்கத்தெரியா நபியாகிய அவன் தூதரின் மீதும் ஈமான் கொள்ளுங்கள், அவரும் அல்லாஹ்வின் மீதும் அவன் வசனங்களின் மீதும் ஈமான் கொள்கிறார் - அவரையே பின்பற்றுங்கள்; நீங்கள் நேர்வழி பெறுவீர்கள்". (அஃராப் : 158). تقدم