சத்தியமார்க்கமானது இடைத்தரகர்களின் எந்த ஒரு தலையீடுமின்றி படைப்பாளனுடன் மாத்திரம் நேரடியாக தொடர்பு கொள்ளக் கூடிய மனிதனின் முதல்-ஆரம்ப- உள்ளுணர்வுடன் இணங்கிச் செல்வதாக இருப்பதுடன் மனிதனில் நற்பண்புகளையும் சிறந்த குண இயல்புகளையும் பிரதிபலிக்க வேண்டும்.
அது எல்லா இடத்திற்கும் காலத்திற்கும் பொருத்தமாக இருப்பதோடு இலகுவானதாகவும் எளிமையானதாகவும், புரிந்து கொள்ளக் கூடியதாகவும், சிக்கலற்றதாகவும் இருக்க வேண்டும்.
ஒவ்வொரு காலத்திலும் மனித தேவைகேற்ப சட்டங்களின் பன்முகத்தன்மையை அங்கீகரித்து, எல்லா வகையான மனிதர்களுக்கும் தேசத்திற்கும், பரம்பரையினருக்குமான உறுதியான மார்க்கமாக இருக்க வேண்டும். பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளில் உள்ளதைப் போல, மனித விருப்பத்திற்கு ஏற்ப மார்க்கத்தில் ஒரு விடயத்தை அதிகரிப்பதையோ குறைப்பதையோ ஏற்றுக்கொள்ளாத ஒன்றாகவும் இருக்க வேண்டும்.
மார்க்காமனது தெளிவான கோட்பாடுகளை- நம்பிக்கைகளைக் கொண்டதாக இருக்க வேண்டும். இடைத்தரகர்களின் தேவை இருக்கக் கூடாது. அத்துடன் மார்க்கம் மன உணர்வுகளின் அடிப்படையில் அமையாது சரியான நிரூபிக்கப்பட்ட சான்றுகளின் அடிப்படையில் அமைந்திருந்தல் வேண்டும்.
மார்க்கமானது வாழ்வின் எல்லா விவகாரங்களையும், இடம் மற்றும் காலம் அனைத்தையும் உள்ளடக்கியதாகவும் இருத்தல் வேண்டும். ஈருலகற்கும் பொருத்தமானதாக இருப்பதுடன் ஆன்மாவில் மட்டும் கவனம் செலுத்தி உடலை மறந்திடாமல் இருக்க வேண்டும்.
மார்க்கமானது, மனிதர்களின் உயிர்களையும், அவர்களின் மானங்கள் மற்றும் உடமைகளையும் பாதுகாப்பதுடன் அவர்களின் உரிமைகள் மற்றும் அறிவாற்றலையும் மதித்து நடக்க வேண்டும்.
இயற்கை உள்ளுணர்வுடன் ஒன்றித்து செல்லும் இவ்வழிமுறையை யார் பின்பற்றி ஒழுகவில்லையோ அவன் ஒருவகை குழப்பத்திலும், தடுமாற்றத்திலும் வாழ்வான். ஒரு வகை மனஅழுத்தத்தையும் உணர்வான். இம்மை வாழ்க்கையில் இப்பெடியன்றால் மறுமை வாழ்க்கையில் எவ்வாறிருக்கும்!
மனித இனம் அழிந்ததும் நித்திய ஜீவனான அல்லாஹ்வைத் தவிர வேறு எதுவும் இப்பிரபஞ்ஞத்தில் எஞ்சியிருக்காது. மார்க்கத்தின் நிழலின் கீழ் பண்பாடுகளை கடைப்பிடித்து ஒழுகுவது முக்கியமல்ல என்று கூறுபவர் 12 வருடமாக வகுப்பறையில் படித்துவிட்டு இறுதியில் கல்விச் சான்றிதழ் தேவையில்லை என்று கூறுபவருக்கு ஒப்பான ஒருவராகவே கருதப்படுவார்.
அல்லாஹ் கூறுகிறான் :
"(இன்னும்; நாம் அவர்கள் (இம்மையில்) செய்த செயல்களின் பக்கம் முன்னோக்கி அவற்றை (நன்மை எதுவும் இல்லாது) பரத்தப் பட்ட புழுதியாக ஆக்கிவிடுவோம் (பயனற்றதாக ஆக்கி விடுவோம்)" (ஃபுர்கான் : 23). تقدم
பூமியை வளப்படுத்தலும், நற்பண்பும் இம்மார்க்கத்தின் பிரதான இலக்கு அல்ல. யதார்தத்தில் அவை இரண்டும் சாதனமே! ஆகவே மனிதன் தனது இரட்சகனைப் பற்றியும் பின் அவனின் இருப்பு மற்றும் அவன் செல்லும் பாதை அவன் இறுதியில் சென்றடையவிருக்கும் இடம் பற்றி அறிமுகப்படுத்துவதே இம்மார்ககத்தின் நோக்கமாகும். அகிலங்களின் இரட்சகனை வணங்கி அவனின் திருப்தியை பெறுவதினூடாக மாத்திரமே நல்ல முடிவும் சிறந்த பேறும் கிடைக்கிறது. ஆகவே பூமியை வளப்படுத்துவதும் நன்னடத்தையும் இதற்கான சிறந்த வழிகளாகும். அத்துடன், இதனுடன் இணைந்ததாக அடியார்களின் செயற்பாடுகள் யாவும் அல்லாஹ்வின் திருப்தியை மைய்யபடுத்தியதாகவே இருப்பது அவசியமாகும். இதற்கு பின்வரும் உதாரணத்தை குறிப்பிடலாம்.
ஒரு நபர் சமூக காப்பீட்டு நிறுவனத்தில் ஓய்வூதியம் பெறுவதற்காக இணைநதிருக்கிறார். (பதிவு செய்யப்பட்டுளார்) என்று வைத்துக்கொள்வோம். அந்த நிறுவனம் ஓய்வூதியத்தை செலுத்த முடியாது என்றும் விரைவில் மூடப்படும் என்று ஒய்வூதியத்தை பெருனர்களுக்கு ஓர் அறிவித்தலை வெளியிடுகிறது. இதனை பயணாளி அறிந்தால் அந்த நிறுவனத்துடன் தொடர்ந்தும் தொடர்புகளை வைத்துக் கொள்வாரா?
மனித குலத்தின் அழிவு தவிர்க்க முடியாதது என்பதை ஒருவன் எப்போது அறிந்து கொண்டானோ, இறுதியில் அவன் புரிந்த மனித நேய செயற்பாடுகளுக்கான வெகுமதியை பெற்றுக் கொள்வது இயலாத காரியம் என்பதையும், தான் மனித சமூகத்திற்கு ஆற்றிய பணிகள் யாவும் பயனற்றதாக மாறிவிடுவதை கண்டு கொள்வான். இதனால் அவன் பெரும் தோல்வியை, ஏமாற்றத்தை உணர்வான். ஓர் இறைவிசுவாசியைப் பொருத்தவரை அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை எதிர்பார்த்து மக்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்பவர், மனித இனத்திற்கு உதவி செய்து அதற்காக பாடுபடுபவர். இதன்விளைவாக அவர் இம்மை மறுமையின் பேற்றை அடைந்து கொள்வார்.
ஓர் ஊழியன் தொழில் தருனருடனான உறவை அலட்சியம் செய்து –சிறந்த முறையில் நடந்து கொள்ளாது- தனது சக தொழில் நண்பர்களுடன் உறவைப் பேணுவதில் எவ்விதப் பயணும் கிடையாது. இந்த அடிப்படையில் எமது வாழ்வில் நற்பேற்றை பெற்றுக் கொள்ளவும், பிறரால் நாம் மதிக்கப்படுவதற்கும் எம்மைப் படைத்த இரட்சகனுடான எமது தொடர்பு மிகவும் சிறப்பானதாகவும், பலமானதாகவும் இருப்பது அவசியமாகும்.
மேலும் ஒரு மனிதன் பண்பாடுகளை கடைப்பிடித்து ஒழுகவும் சமூக பெருமானங்களை எடுத்து நடக்கவும், சட்டங்களையும், பிற மனிதர்களையும மதித்து நடக்கவும் தூண்டும் உந்து சக்தி என்ன? அல்லது மனிதனை வரையறைக்குள் நின்று தீமையல்லாத நல்ல காரியத்தை மாத்திரம் செய்ய நிர்ப்பந்திருக்கும் தூண்டற் காரணி என்ன?என்பதை ஒரு கனம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இதற்கான பதில், சட்டத்தின் அதிகாரத்தினால் இவை நிகழ்கிறது என அவர்கள் கூறினால், சட்டம் எல்லா நேரங்களிலும் இடங்களிலும் ஆதிக்கம் செலுத்துவதில்லை என்று பதில் கூறுகிறோம், அத்துடன் தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் உள்ள அனைத்து சர்ச்சைகளையும் தீர்க்க சட்டம் மட்டும் போதாது. பெரும்பாலான மனித நடவடிக்கைகள் மற்றும் செயற்பாடுகள் யாவும் சட்டம் மற்றும் மக்களின் பார்வைக்கு அப்பால் நடை பெறுகிறது!.
மார்க்கம் மனிதனின் -மதம்- முக்கியத் தேவை என்பதற்கு, பெருந்தொகையான மதங்கள் இருப்பது என்ற ஒரு சான்றே போதுமானது. அதாவது இந்தப் புவிப்பந்தில் வாழும் பெரும்பாலான சமூகங்கள் தனது வாழ்வை ஒழுங்குபடுத்திக்கொள்ளவும் குறிப்பிட்ட மத ஒழுங்கின் அடிப்படையில் தனது குடிமக்களின் நடவடிக்கைகளை சீரமைத்துக் கொள்ளவும் ஒரு குறிப்பிட்ட மதத்தை தேர்வுசெய்து அதனுள் அடங்கியிருப்பதையும் காணுகிறோம். அதே போன்று சட்டம் மறைந்து இருக்கும் வேளையில் மத நம்பிக்கை ஒன்றே மனிதனை கட்டுப்படுத்தும் ஒரே அளவுகோளாக -தடுப்பானாக- இருப்பதை நாம் அறிகிறோம். சட்டத்தைப் பொருத்தவரை அது எந்த இடத்திலும் எந்நேரமும் மனிதனுடன் இருக்காது என்பதே யதார்த்தமாகும்.
மனிதனைக் கட்டுப்படும் ஒரே தடுப்பானாகவும் கட்டுப்படுத்தும் கருவியாகவும் இருப்பது அவனை அவதானித்து அது குறித்து விசாரிக்கும் ஒருவன் உள்ளான் என்ற உள்ளார்ந்த விசுவாசமாகும். இந்த நம்பிக்கையானது அடிப்படையில் ஒரு மனிதனின் உள்ளத்தில் புதைந்தும், ஆழப்பதிந்தும் காணப்படும். இந்நம்பிக்கை ஒரு நபர் ஒரு தவறை செய்ய முனையும் போது அவனிடத்தில் வெளிப்படும். அப்போது அவனிடத்தில் காணப்படும் நன்மை மற்றும் தீமையின் மனப்பாங்குகள் முரண்பட்டுக் கொள்ளும். இதனால் மக்களின் கண்களை விட்டும் அவமானமிக்க செயலை மறைப்பதற்கும், சீரிய இயல்பூக்கம் மறுக்கும்- அசிங்கமானதாகக் கருதும்- எந்தச் செயலையும் மறைப்பதற்கு முயலும். மேற்குறிப்பிடப்பட்ட விடயங்கள் யாவும் மார்க்கத்தின் புரிதல், மற்றும் நம்பிக்கை ஆகியவை மனித உள்ளத்தில் ஆழமாக உள்ளது என்பதற்கான உண்மை சான்றாக அமைந்துள்ளது.
ஆகவே மனிதனால் இயற்றப்பட்ட சட்டங்களினால் நிரப்ப முடியாத இடைவெளியை நிரப்பவும், கால இட வேறுபாடுகளுக்கு ஏற்ப மனித உள்ளங்களையும் மனித மனத்தையும் வழுப்படுத்தவுமே மார்க்கம் வந்துள்ளது.
மனிதனில் காணப்படும் இயக்க சக்தி அல்லது உந்து சக்தி ஒரு நல்ல காரியத்தை புரிவதில் மனிதனுக்கு மனிதன் வேறுபட்டிருப்பதை காண முடிகிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு செயலை செய்யவும், குறிப்பிட்ட பண்பாடுகளை, பெருமானங்களை கடைப்பிடித்து ஒழுகவும், அவனுக்கேயுரிய உந்துசக்தியும், தனியான நலன்களும் பின்னனியாக அமைகிறது. உதாரணத்திற்கு :
தண்டனை என்பது பிற மனிதர்களுக்கு தீங்கிழைப்பதை தடுத்துக் கொள்ளும் ஒரு அரணாக காணப்படுகிறது.
வெகுமதி என்பது: ஒரு மனிதன் நல்ல காரியத்தைப் புரிவதற்கு ஆர்வத்துடன் முன் செல்ல உந்துசக்தியாக காணப்படுகிறது.
சுய–ஆன்ம திருப்தி: என்பது உணர்ச்சிகள் மற்றும் ஆசைகளில் இருந்து தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்வதற்கான அளவுகோளாகும். மனிதனைப் பொருத்தவரை அவனுக்கு மனநிலை மற்றும் உணர்ச்சிகள் உள்ளன, இன்று அவன் விரும்புவதை நாளை விரும்பாமல் இருக்கலாம்.
சன்மார்க்க கட்டுப்பாடு: அல்லாஹ்வைப் பற்றிய அறிவு, அவனைப் பற்றிய பயம் மற்றும் மனிதன் எங்கு சென்றாலும் அல்லாஹ் தன்னுடன் இருக்கிறான் என்ற உணர்வையும் இது குறிக்கிறது. இது பலமான உந்துசக்தியாகவும் ஆக்கபூர்வமான விடயமாகவும் உள்ளது (Atheism a giant leap of faith Dr. Raida Jarrar.) تقدم
மனித உணர்வுகளை, சிந்தனைகளை சாதகமாகவோ பாதகமாகவோ இயக்குவதில் மதத்திற்கு பெரும் ஒரு தாக்கம் உண்டு. இது, மனித இயல்பின் அடிப்படை அல்லாஹ்வை அறிந்து கொள்வதில் அமையப்பெற்றுள்ளது என்பதை சுட்டிக்காட்டுகிறது. அதிகமான தருணங்களில் விரும்பியோ விரும்பாமலோ மனிதனை இயக்குவதற்கு ஒரு தூண்டற்காரணியாக மதமானது பயண்படுத்தப்படுகிறது. இந்நிலையானது ஒரு பேருண்மையை படம் பிடித்துக் காட்டுகிறது. மனிதன் தனது படைப்பாளனுடன் இயல்பில் தொடர்புள்ளவனாக இருப்பதால் அவனது உணர்வில் மதத்தின் முக்கியத்துவம் இன்றியமையாத ஒன்று என்பதை எமக்குக் எடுத்துக் காட்டுகிறது.
உண்மையில் பகுத்தறிவின் பங்களிப்பு என்பது நடக்கும் விவகாரகங்களில் தீர்ப்புக்கூறி அதனை உண்மைப் படுத்துவதாகும். உதாரணத்திற்கு பகுத்தறிவு மனித இருப்பின் இலக்கை அடைந்து கொள்ள இயலாமல் இருப்பது அதன் பங்களிப்பை ஒரு பொழுதும் இரத்து செய்துவிடாது. மாறாக தனக்கு புரிந்து கொள்ள இயலாதவற்றை புரிந்து கொள்ள மார்க்கத்திற்கு இதற்கான அவகாசத்தை வழங்குகிறது. மார்க்கமானது படைப்பாளன் பற்றியும் மனிதனின் அடிப்படை குறித்தும் இவ்வுலகின் அவனது இருப்பின் நோக்கம் குறித்தும் கற்றுக் கொடுக்கிறது. இதனை பகுத்தறிவானது புரிந்து தீர்ப்பளித்து அத்தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்கிறது. இதன் மூலம் படைப்பாளனின் இருப்பை ஏற்றுக்கொள்வது ஒருபோதும் பகுத்தறிவைiயும் தர்க்கத்தையும் செயலிழக்கச்செய்து விடாது என்பதே யதார்த்தமாகும்.