ஈமானின் அடிப்படைகள் பின்வருமாறு :
அல்லாஹ்வை நம்புதல்: அல்லாஹ் ஒருவனே இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தினதும் இரட்சகனாகவும், சொந்தக்காரனாகவும் உள்ளான் என்றும், அவன் ஒருவன் மாத்திரமே படைப்பாளன் என்றும், அவன் மாத்திரமே வணக்கத்திற்கும், பணிந்து கட்டுப்படவும் மிகத்தகுதியானவன் என்றும் அவன் எவ்விதக் குறைகளுமற்ற நிறைவான பண்புகளைப் பெற்றவன் என்றும் ஆழமாக நம்பி அதன் அடிப்படையில் செயல்படுவதைக்குறிக்கும். (ஆதார நூல் : ஸியாஜுல் அகீதா- அல்ஈமானு பில்லாஹ்- ஆசிரியர் அப்துல் அஸீஸ் அர்ராஜிஹி பக்கம் (9)). تقدم
மலக்குகளை நம்புதல் : அதாவது அவர்களின் இருப்பையும், அவர்கள் ஒளியால் படைக்கப்பட்ட ஒரு படைப்பினம் என்றும் நம்புதல். அவர்கள் அல்லாஹ்வுக்கு கட்டுப்படுவதுடன் அவனுக்கு ஒரு போதும் மாறு செய்ய மாட்டாரக்கள். அவ்வளவு அற்புதமான ஒரு படைப்பே இவர்கள்.
வானுலக வேதங்களை நம்புதல்: இது இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்கள் அனைவருக்கும் இறக்கப்பட்ட அனைத்து வேதங்களையும் குறிக்கும். மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு இறக்கப்பட்ட இன்ஜீல், ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு இறக்கியருளப்பட்ட தவ்ராத், தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு இறங்கிய ஸபூர் வேதம், இப்ராஹீம் மற்றும் மூஸா அலைஹிமஸ்ஸலாம் அவர்களுக்கு வழங்கப்பட்ட ஏடுகள், (71) நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு இறக்கப்பட்ட அல்குர்ஆன் ஆகியன அவற்றுள் சிலதாகும். மேற்குறிப்பிட்ட இறைவேதங்களின் அடிப்படைப் பிரதிகள் யாவும் படைப்பாளனை நம்பி அவனை மாத்திரமே வணங்க வேண்டும் எனும் ஏகத்துவத் தூதை உள்ளடக்கியது. என்றாலும் அவற்றில் திரிபுகள் மனிதக் கையாடல்கள் நுழைந்து விட்டன. அல்குர்ஆனும் இஸ்லாமிய சட்டதிட்டங்களும் இறக்கப்பட்டதன் பின்னர் அவைகள் யாவும் மாற்றப்பட்டுவிட்டன.
தீர்க்கதரிசிகள் மற்றும், இறைத்தூதர்களை நம்புதல்
மறுமை நாளை நம்புதல் : விசாரணைக்காகவும்,கூலி வழங்கப்படுவதற்காகவும் மனிதர்கள் மறுமை நாளில் எழுப்பப்படுவார்கள் என்பதை விசுவாசித்தலை இது குறிக்கும்.
இறை விதியை நம்புதல் : அல்லாஹ்வின் ஞானம் மற்றும் அவனின் முன்னறிவின் அடிப்படையில் படைப்புகளின் விதிகள் எழுதப்பட்டுவிட்டன என்பதை விசுவாசம் கொள்ளுதலை இது குறிக்கிறது.
இஸ்லாத்தில் ஈமான் எனும் படித்தரத்திற்கு அடுத்து இஹ்ஸான் எனும் படித்தரம் உண்டு. அது மார்க்கத்தின் மிக உயர்ந்த படித்தரமாகும். இந்தப்படித்தரத்தின் கருத்தை நபியவர்களின் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள் : ''இஹ்ஸான் என்பது நீ அல்லாஹ்வை நேரடியாக பார்ப்பது போன்று அவனை வணங்க வேண்டும். அவனை நீ பார்க்கா விட்டாலும் அவன் உன்னை பார்த்துக்கொண்டிருக்கிறான்' '(ஹதீஸ் ஜிப்ரீல். ஆதாரம் புஹாரி :(4777) முஸ்லிம் (09)). تقدم
இஹ்ஸான் என்பது மனிதனிடத்தில் எந்த நன்றியையோ அல்லது பாராட்டையோ உலக ஆதாயத்தையோ எதிர்பார்க்காது அல்லாஹ்வின் திருமுகத்தை மாத்திரம் நாடி இதயசுத்தியுடன் எல்லா கருமங்களையும் காரியங்களையும் திரம்பட செய்வதும், இதனை எய்துகொள்வதற்கு தன்னாலான எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வதுமாகும். இன்னொரு வகையில் குறிப்பிடுவதாயின் அல்லாஹ்வின் திருமுகம் நாடி இதயசுத்தியுடன் நபிவழிமுறைக்கு இணங்கிச்செல்லும் வகையில் அல்லாஹ்வை நெருங்கும் நோக்கில் செயல்களை நிறைவேற்றுவதாகும். முஹ்ஸினூன் எனும் நிலையை பெற்ற (சிறப்பு மிகு பிரிவினரே) பிறருக்கு நன்மைபயக்கும் விதத்தில் உள்ள சமூகத்தின் சிறந்த முன்மாதிகரிகள் ஆவர். காரணம் இறை திருப்தியை நாடி மாத்திரமே மார்க்க மற்றும் உலகியல் விடயங்களில் இவர்கள் ஈடுபடுவர். இவர்களை பின்பற்றி நடக்குமளவிற்கு இவர்கள் உயர்முன்மாதிரிமிக்கோராய் திகழ்வர். அது மாத்திரமின்றி இப்பிரிவின் மூலமே சமூகத்தின் விருத்தியும் மனித இனத்தின் செழுமையும் வளர்ச்சியும் முன்னேற்றமும் தங்கியிருப்பதோடு தேசங்களின் வளர்ச்சியும் முன்னேற்றமும் தங்கியுள்ளது.